STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 055 (Innocent in jail 3)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

55. சிறைச்சாலையில் நிரபராதி 3


சிறைச்சாலையின் அறைக் கதவு பூட்டப்பட்டது. காவற்காரன் கதவைப் பூட்டிவிட்டு சென்றான். யோசேப்பு கம்பிகளுக்குப் பின்னால் இருந்தான். அவன் குற்றம் புரியவில்லை! அவன் சரியான காரியத்தைச் செய்தான். அதற்காக இப்போது சிறையில் இருக்கிறான். உனக்கு இதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?

யோசேப்பு தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
(அவன் சிந்திக்கும் போது பின்னணியில் மெல்லிய சத்தம்)

தனது மனக் கண்களால் தனது சகோதரர்களை அவன் கண்டான். சில ஆண்டுகள் முன்பு அவர்கள் எகிப்தை நோக்கிச் சென்ற வியாபாரிகளிடம் அவனை விற்றுப் போட்டார்கள். அவனை வெறுத்தார்கள். யோசேப்பை மிகப்பெரிய அதிபதியாக உயர்த்துவேன் என்று இறைவன் பேசியிருந்ததே இதற்குக் காரணம்.

பிரமிடுகளும், பார்வோன்களும் இருக்கிற தேசத்தில் போத்திபார் அவனை ஓர் அடிமையாக வாங்கினான். யோசேப்பு தனது வேலையை நன்றாகச் செய்தான். பார்வோனின் அதிகாரிகள் ஆச்சரியப்பட்டார்கள். இப்படி ஒரு நல்ல வேலைக்காரன் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. யோசேப்பு செய்த அனைத்திலும் வெற்றி கிடைத்தது. நான் அந்த இரகசியத்தை உனக்குச் சொல்லவா? இறைவன் அவனுடன் இருந்தார், அவனுக்கு உதவினார்.

போத்திபார் தனது வீட்டுக் காரியங்கள் அனைத்திலும் அவனுக்கு அதிகாரம் கொடுத்தான். யோசேப்பு எல்லாவற்றையும் நன்றாகச் செய்தான். போத்திபாரின் மனைவி இவன் மேல் கண்போட்டு, தனது கணவனாக இவன் செயல்படும்படி விரும்பினாள். இது சரியா? இறைவனின் சட்டம் கூறுகிறது. விபசாரம் செய்யாதிருப்பாயாக. அந்தச் சட்டம் இப்போதும் இருக்கிறது. யோசேப்பு இறைவனுக்கு செவிகொடுத்தான். அவன் அந்தப் பாவத்திற்கு இணங்கவில்லை.

ஒருநாள் போத்திபாரின் மனைவி யோசேப்பிடம் தவறாக நடக்க முயற்சித்தாள். யாதேனும் ஒருவர் உன்னை தீய காரியத்தைச் செய்யத் தூண்டினால், நீ என்ன செய்வாய்? யோசேப்பைப் போல செயல்படு. அவன் அந்தப் பாவத்தை விட்டு ஓடினான். இந்தப் பெண் அவனின் மேலாடையைப் பற்றி இழுத்தாள். யோசேப்பு அதை விட்டுவிட்டு, தன்னைக் காத்துக்கொள்ள ஓடினான். தனது எஜமானின் மனைவியுடன் இணைந்து பாவம் செய்வதை அவன் தெரிந்துகொள்ளவில்லை. அந்தப்பெண் யோசேப்பின் மீது பழியைப் போட எண்ணினாள். அவளது கணவன் வந்த போது, யோசேப்பு தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாக குற்றம் சாட்டினாள். அவள் சத்தம் போட்ட போது, தனது ஆடையை விட்டுவிட்டு சென்றதாக கூறினாள். இதுவே அவளது ஆதாரமாக இருந்தது.

போத்திபார் அவளது பொய்யை நம்பி, யோசேப்பின் மீது கோபம்கொண்டான். உடனடியாக அவனை சிறைச்சாலையில் போட்டான்.

ஆனாலும் சிறைச்சாலையில் யோசேப்போடே கர்த்தர் இருந்தார். எனவே இந்தக்கதை இன்னும் முடியவில்லை. இறைவன் யோசேப்பிற்காக திட்டங்களை வைத்திருந்தார். யோசேப்பு அதை உடனடியாக காண இயலவில்லை. யோசேப்பின் கதை அடுத்த நாடகத்தில் தொடரும்.


மக்கள்: உரையாளர்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 08:35 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)