Home -- Tamil -- Perform a PLAY -- 039 (Stoning and crowning)
39. கல்லெறியப்படுதலும், மகிமையின் கிரீடம் சூட்டப்படுதலும்
நன்கு பயிற்சி பெற்ற 5 வது கிரேடு வீரர்கள்தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்க ஆயத்தமானார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இறுதி நிகழ்ச்சியின் நேரம் வந்தது. பரிசுகளைப் பெறும் ஒவ்வொருவரின் முகமும் சந்தோஷத்தினால் நிறைந்திருந்தது.
சாம் சாம்பியன் போல ஓடினான். அவன் நன்றாகத் துவங்கினான். வேகமாக ஓடினான். ஆனால் இறுதிக் கோட்டை நெருங்கும் முன்பு, அவன் பக்கவாட்டில் அமர்ந்துவிட்டான். எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். நன்றாக ஆரம்பிக்க வேண்டும், தொடர்ந்து ஓட வேண்டும், இறுதிவரை செயல்பட வேண்டும்.
இயேசுவுடன் வாழும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும். விசுவாசம் மிக அவசியம். அதைத் தொடர்ந்து, நாம் இயேசுவுக்காக தொடர்ந்து வாழ வேண்டும். இயேசு நமக்கு உதவுகிறார். அவர் எவ்விதம் ஸ்தேவானுக்கு உதவினார் என்று நான் காண்கிறேன். அநேகர் இயேசுவை நம்ப மறுக்கிறார்கள். இவர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். ஸ்தேவான் இதற்குள் நுழையவில்லை. அவன் இயேசுவைக் குறித்து தைரியமாகப் பேசினான். ஆனால் அந்த மக்கள் ஸ்தேவானைக் குறித்த பொய்களைப் பரப்பினார்கள். அவன் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டான்.
துன்புறுத்துபவன்: “ஸ்தேவான் இறைவனை நிந்தித்தான். நியாயப்பிரமாணத்திற்கு எதிராகப் பேசினான்”.
நீதிபதி: “இந்த குற்றச்சாட்டு உண்மையானதா?”
ஒவ்வொருவரும் ஸ்தேவானை உற்றுப் பார்த்தார்கள். அவனது முகம் தூதனுடைய முகத்தைப் போல் பிரகாசித்தது. அவன் தன்னை நியாயப்படுத்துவதற்கு பதிலாக, இயேசுவைக் குறித்து பேச ஆரம்பித்தான்.
ஸ்தேவான்: “இறைவனுடைய குமாரன் பூமிக்கு வந்தார். நீங்கள் அவரை சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இறைவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்”.
அந்த நீதிமன்றத்திலும் ஆண்டவராகிய இயேசுவிற்கு ஸ்தேவான் உண்மையுள்ளவனாக இருந்தான். பின்பு அவன் வானத்தை நோக்கிப் பார்த்து கூறினான்.
ஸ்தேவான்: “வானங்கள் திறக்கப் பட்டிருக்கிறதைக் காண்கிறேன். இயேசுவானவர் இறைவனின் வலது பாரிசத்தில் நிற்கிறார்”.
இந்த வார்த்தைகளைக் கேட்ட போது, அவர்கள் மூர்க்கமடைந்தார்கள். அவனை அடித்து, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போனார்கள். அவன் மீது கல்லெறிந்தார்கள். ஸ்தேவான் இயேசுவுக்கு உண்மையாயிருந்தான். அவனை கல்லால் எறிந்து கொன்றார்கள். அவன் மரிக்கும் முன்பு இப்படி விண்ணப்பம் செய்தான்.
ஸ்தேவான்: “ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மிடத்தில் வருகிறேன், இவர்களது பாவங்களை மன்னியும்”.
இலக்கை நோக்கிய பாதை கடினமானது. ஆனால் ஸ்தேவான் விசுவாசத்தில் உண்மையாயிருந்தான். இயேசு அவனுக்கு மகிமையின் கிரீடத்தை சூட்டினார். இயேசுவின் மீது விசுவாசம் வைப்பது சிறந்த காரியம். விசுவாசிப்பவர்களுக்கு சிறந்தவைகள் உண்டு.
மக்கள்: உரையாளர், துன்புறுத்துபவர், நீதிபதி, ஸ்தேவான்.
© Copyright: CEF Germany