STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 038 (A night in jail)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

38. சிறைச்சாலையில் ஒரு இரவு


இவர்கள் இதை விரும்பவில்லை. அவர்களுடைய முகங்கள் நெற்றிகளில் சுருக்கம் உள்ளது, அவர்கள் கண்களில் பொறாமை நிறைந்துள்ளது.

1-ம் பரிசேயன்: “நாம் எவ்வளவு காலம் இதை கவனிக்க வேண்டும்”.

2-ம் பரிசேயன்: “இயேசுவைப் பற்றி பேசக் கூடாது என்று நாம் அவர்களை தடுத்திருக்கிறோம். இதை கவனிக்க வேண்டும்”.

1-ம் பரிசேயன்: “இது தொடருமென்றால், எல்லோரும் இயேசுவை இறைவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று நம்பி விடுவார்கள்”.

2-ம் பரிசேயன்: “தலைவர்கள் செயல்களை சற்று கவனிப்போம்”.

முதலாவது பரிசேயர்கள் இயேசுவை சிலுவையிலறையும்படி செய்தார்கள். பின்பு அவருடைய சாட்சிகள் அமைதியாயிருக்கும்படி விரும்புகிறார்கள். ஆலயக் காவற்காரர்கள் கூட்டத்தினூடே வந்தார்கள். அவர்கள் பேதுருவையும், யோவானையும் சிறை பிடித்தார்கள். அந்த இரவில் சிறைச்சாலையில் அடைத்தார்கள். அடுத்த நாள் காலை அவர்கள் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டார்கள்.

நீதிபதி: “நீங்கள் பிரசங்கிக்கும்படி உங்களுக்கு சொன்னவர் யார்? நீங்கள் எவ்விதம் அற்புதங்களைச் செய்கிறீர்கள்? சப்பாணியை நடக்க வைக்கிறீர்கள்?”

பேதுரு பயந்து போகவில்லை. தைரியமாக இப்படிச் சொன்னான்.

பேதுரு: “நாங்கள் ஒரு சப்பாணியை சுகமாக்கியதற்காக எங்களை குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவை இறைவன் மரித்தோரில் இருந்து எழுப்பினார். அவர் மீது விசுவாசம் வைப்பவர்களுக்கு அற்புதம் நடக்கின்றது. இயேசு மட்டுமே மக்களுக்கு இரட்சிப்பை கொண்டுவர முடியும். முழு உலகிலும் வேறு ஒருவருமில்லை”.

பேதுருவின் தைரியத்தைக் கண்டு நீதிபதிகள் ஆச்சரியப்பட்டார்கள். இவர்களை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.

நீதிபதி: “நாம் என்ன செய்யலாம்? ஒரு சப்பாணி நடக்கின்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும் அதைக் காண்கிறார்கள்”.

நீதிபதி: “மற்றவர்கள் இதைக் குறித்து கேள்விப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இயேசுவைக் குறித்துப் பேசாதபடி நாம் அவர்களைத் தடுக்க வேண்டும்”.

பேதுருவும், யோவானும் மறுபடியும் கொண்டுவரப்பட்டார்கள்.

நீதிபதி: “இயேசுவைக் குறித்து பிரசங்கிக்க உங்களுக்கு அனுமதியில்லை. புரிகின்றதா உங்களுக்கு? இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும். இல்லையென்றால் …”

பேதுரு தனக்காகவும், யோவானுக்காகவும் பேசினான்.

பேதுரு: “இறைவனுக்கு கீழ்ப்படிவதை விட உங்களுக்கு கீழ்ப்படிவதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? நாங்கள் அமைதியாய் இருப்பது இயலாத காரியம். நாங்கள் இயேசுவை அதிகமாக எங்கள் வாழ்வில் அனுபவித்திருக்கின்றோம். நாங்கள் மற்றவர்களுக்கும் அவரைக் குறித்து சொல்ல வேண்டும்”.

மீண்டும் ஒரு முறை அவர்கள் அமைதியாயிருக்கும்படி கண்டிக்கப்பட்டார்கள். பின்பு அவர்கள் வெளியே செல்ல அனுமதித்தார்கள்.

பேதுரு, யோவானைப் போல நாம் மனுஷருக்கு கீழ்ப்படிவதை விட இறைவனுக்கு கீழ்ப்படிவது முக்கியம்.


மக்கள்: உரையாளர், இரண்டு பரிசேயர்கள், இரண்டு நீதிபதிகள், பேதுரு.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 06:50 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)