Home -- Tamil -- Perform a PLAY -- 037 (Jumping with joy at 15.00 o’clock)
37. 15.00 மணிக்கு குதித்தெழக்கூடிய சந்தோஷம்
மனிதன்: “அது இயலாத காரியம்!”
பெண்: “பாருங்கள் அவன் நடக்கிறான்”.
மனிதன்: “அவனைப் போல வேறொருவன் இவன்”.
பெண்: “நான் நிச்சயமாக சொல்வேன். இவன் அவன் தான். அவன் 40 ஆண்டுகள் சப்பாணியாய் இருந்தான். இப்போது நடக்கிறான்”.
மனிதன்: “இது எவ்வளவு பெரிய அற்புதம் இது வரை இப்படி நான் கண்டதே இல்லை”.
பெண்: “அவன் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறான் பாருங்கள். அவன் சந்தோஷத்தினால் குதிக்கிறான்”.
இது உண்மை தான். அவன் நடந்தான், குதித்தான், இறைவனை துதித்தான். மக்கள் அவனையும், பேதுருவையும் பிரமிப்புடன் பார்த்தார்கள்.
பேதுரு: “நாங்கள் இவனை நடக்கப் பண்ணினோம் என்று எண்ணுகிறீர்களா? இயேசு இதைச் செய்தார். அவருடைய நாமத்தின் மேலே விசுவாசம் வைத்தால் அற்புதங்கள் நிகழும்”.
அந்த நாள் எப்போதும் போலத் தான் துவங்கியது. காலையில் பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்குப் போனார்கள். அவர்கள் இவ்விதமாகச் சென்று ஒவ்வொரு நாளும் காலையில் 3 மணிக்குவிண்ணப்பம் பண்ணுவது வழக்கம். நீ எப்போது விண்ணப்பம் பண்ணுகிறாய்?
நுழைவு வாயிலுக்கு நேராகச் சென்றார்கள். ஒரு சப்பாணி தனது கரங்களை நீட்டி, பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
சப்பாணி: “என்மீது இரக்கமாயிருங்கள். எனக்கு கொஞ்சம் பணம் தாருங்கள் என் மீது இரக்கமாயிருங்கள்”.
பேதுருவும், யோவானும் அந்த மனிதனைப் பார்த்து கூறினார்கள்.
பேதுரு: “என்னிடத்தில் பொன்னும் இல்லை, வெள்ளியும் இல்லை. நான் செல்வந்தன் இல்லை. ஆனால் எனக்குள்ளதை நான் உனக்குக் கொடுப்பேன். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் “எழுந்து நட”.
பேதுரு அவனுக்கு கை கொடுத்து, எழுந்து நிற்க உதவினான். அற்புதம் நிகழ்ந்தது. உடனடியாக அந்த மனிதனின் கால்களும், கரடுகளும் பெலன் கொண்டன. அவன் குதித்தெழுந்தான், நின்றான், நடந்தான்.
ஆச்சரியம்! அந்த மனிதனுக்கே அதை நம்ப முடியவில்லை. அவன் முழு சுகம் பெற்றான். அவன் நடந்தான், குதித்தான், இறைவனுக்கு நன்றி செலுத்தினான். மகிழ்ச்சி பொங்க இறைவனை துதித்தான். அவரைக் காணும் அனைவரும், இதே போல செயல்படுவார்கள்.
இயேசு உனது வாழ்வில் அற்புதங்களைச் செய்கிறார்; அவரை நம்புங்கள்.
மக்கள்: உரையாளர், மனிதன், பெண், பேதுரு, சப்பாணி.
© Copyright: CEF Germany