Home -- Tamil -- Perform a PLAY -- 036 (Identifying love)
36. அடையாளப்படுத்தும் அன்பு
ஒரு ஆப்பிள் மரத்தை நீ எவ்வாறு அறிந்துகொள்வாய்?
சிறுமி: “அதில் ஆப்பிள் இருப்பதைப் பார்த்து அறிந்து கொள்வேன்”.
ஒரு செர்ரி மரத்தை நீ எவ்வாறு அறிந்துகொள்வாய்?
சிறுமி: “அதில் செர்ரி பழம் இருப்பதைப் பார்த்து அறிவேன்”.
ஒரு மா மரத்தை நீ எவ்வாறு அறிந்து கொள்வாய்?
சிறுமி: “அதில் மாம்பழம் இருப்பதைப் பார்த்து அறிவேன்”.
ஒரு மரத்தை அதின் கனியினால் நாம் அறிவோம். நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரம் கெட்ட கனியைக் கொடுக்கும்.
ஒரு கிறிஸ்தவனை நீ எப்படி அறிவாய்?
இயேசுவைச் சேர்ந்தவர்களை அடையாளம் காண மிக முக்கியமான வழிமுறை இதுதான். ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் இந்த தன்மையை இரண்டு நண்பர்கள் கண்டார்கள்.
முதல் நண்பன்: “ரூத் இப்போது முன்பு போல் சண்டை போடுவது இல்லை. நீ இதை கவனித்தாயா? இதற்கு முன்பு அவள் எப்போதும் குறைகூறுவாள், திட்டுவாள். ஆனால் இப்போது அவள் உதவி செய்கிறாள். கிணற்றில் தண்ணீர் இறைத்து கொடுக்கிறாள். மற்றவர்கள் மீது அவள் அன்பு காட்டுவதை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை”.
2-ம் நண்பன்: “உம்மென்று முகத்தை வைத்திருக்கும் ஜேக் திடீரென்று இனிமையாக பழகும் நண்பனைப் போல் மாறிவிட்டான். அவன் யாரையும் சபிப்பதில்லை. கடந்த இரண்டு வாரங்களாக அவன் வித்தியாசமாக இருக்கிறான்”.
முதல் நண்பன்: “நிச்சயமாக அவர்கள் விசுவாசிக்கும் இயேசுவால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் நேசிப்பதை வைத்து, அவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிய முடியும்”.
2-ம் நண்பன்: “ஒவ்வொரு நாளும் அவர்கள் விண்ணப்பம் பண்ணுகிறார்கள். அவர்கள் அதற்காக அதிக நேரம் செலவழிப்பதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாகக் காணப்படுகிறார்கள். அவர்கள் நண்பர்களில் சிறந்தவர்கள்”.
முதல் நண்பன்: “இதை கற்பனை செய்து பார். ஜோசப் தனது ஒரு ஏக்கர் நிலத்தை விற்று, அந்தப் பணத்தை சபைத் தலைவரிடம் கொண்டு வந்தான். அவர் அதை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார்”.
2-ம் நண்பன்: “ஆச்சரியமாக உள்ளது”.
முதல் நண்பன்: “சிலர் தங்களது வீடுகளை விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார்கள்”.
2-ம் நண்பன்: “எப்படி அவர்கள் பண ஆசையின்றி, ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொடுத்து வாழ்கிறார்கள்?”
அவர்கள் வித்தியாசமானவர்களாக மாறினார்கள். அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். மற்றவர்கள் இதைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். இறைவன் வேதாகமத்தில் கற்றுக் கொடுத்திருப்பதைப் போல கிறிஸ்தவர்களின் வாழ்வு காணப்படுகிறது.
(பின்னணி இசையுடன் ஒரு மெல்லிசைப் பாடல்)
நமது வாழ்வில் நன்மை ஏற்படுவதற்கான காரணமாக பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், தாழ்மை, இச்சையடக்கம். உனது வாழ்வில் இப்படிப்பட்ட கனி உண்டா?
இயேசுவின் மீதான விசுவாசம் உன்னை மாற்றும். ஒருவனுடைய இருதயம் மாற்றமடையும் போது, ஒவ்வொருவரும் அதின் அடையாளங்களைக் காண முடியும். மக்கள் இந்த குணாதிசயங்களை உன்னில் காண்கிறார்களா?
மக்கள்: உரையாளர், சிறுமி, 2 நண்பர்கள்.
© Copyright: CEF Germany