Home -- Tamil -- Perform a PLAY -- 040 (The small sailboat)
40. சிறிய துடுப்புப் படகு
விடுமுறை வந்தது. இதற்காக ரவி நீண்ட நாட்களாக காத்திருந்தான். அவன் நன்றாகத் தூங்க விரும்பினான். பொழுதுபோக்கிற்கு நிறைய நேரம் கிடைத்தது.
அவன் மிகுந்த ஆர்வமாய் ஒரு சிறிய படகை செய்தான். தனது அப்பாவின் வேலை ஸ்தலத்திற்கு சென்று அதை உருவாக்கினான். இறுதியாக சிவப்பு மற்றும் நீல வர்ணத்தை அதற்கு தீட்டினான். அதற்கு வெள்ளை நிற துடுப்புகளைச் செய்தான். அவன் தனது சிறிய படகுடன் கடற்கரைக்கு சென்றான். மெதுவாக கடலுக்குள் இறக்கினான். ஒரு கும்பல் அவனை நோக்கி நெருங்கி வருவதை அவன் கவனிக்கவில்லை.
சிறுவன்: “இந்த படகை நீயே செய்தாயா? நாங்கள் அதை எடுத்து, பயன்படுத்தப் போகிறோம்”.
ரவி ஒரு வார்த்தை சொல்லும் முன்பு, அந்தக் கும்பல் அவனை கீழே தள்ளி, அந்தப் படகை நெருங்கியது. அவன் எழுந்திருக்கும் முன்பு, அக்கும்பல் படகை ஓட்டிச் சென்று விட்டது. ரவி கண்ணீருடன் வீட்டை நோக்கி வந்தான்.
அப்பா: “நான் உனக்கு புதிய படகு வாங்கித் தருவேன்”.
ரவி: “அப்பா நானே உருவாக்கிய அந்தப் படகு எனக்கு வேண்டும்”.
வாரங்கள் கடந்தன. ஒரு நாள் ஒரு கடையின் ஜன்னல் வழியே ரவி ஒரு படகைக் கண்டான்.
ரவி: “அப்பா அது என் படகு!”
அப்பா: “நிச்சயமாக அது உன்னுடையது தானா?”
ரவி: “ஆமாம் அதில் உள்ள அந்த அடையாளத்தைப் பாருங்கள்”.
ரவி வேகமாக அக் கடைக்கு ஓடினான்.
ரவி: “இது உங்களுக்கு சொந்தம் அல்ல. இது என் சொந்த படகு”.
ரவியின் அப்பா எல்லா காரியங்களையும் கடையில் இருந்த பெண்ணிடம் விளக்கினார். பின்பு அவள் கூறினாள்.
பெண்: “நான் இதை ஒரு சிறுவர் கும்பலிடம் வாங்கினேன். நீங்கள் அதற்குரிய விலையை கொடுத்தால், நான் இதை உங்களுக்குத் தருவேன்”.
ரவி அதற்கு சம்மதித்து, அதை வாங்கினான்.
வீட்டிற்கு வரும் வழியில் அவன் கூறினான்.
ரவி: “சிறிய துடுப்புப் படகே, நீ எனக்கு இரண்டு முறை சொந்தம். முதலாவது நான் உன்னை உருவாக்கினேன். இரண்டாவது நான் உன்னை விலைகொடுத்து வாங்கியுள்ளேன்”.
அப்பா: “நீ இறைவனுக்கு இரண்டு முறை சொந்தமா?”
ரவி: “ஏன் இரு முறை?”
அப்பா: “இறைவன் நம்மை உருவாக்கினார். மனிதன் பாவத்தினால் இறைவனை விட்டு விலகிச் சென்றான். இயேசு சிலுவையில் மரித்து, தனது ஜீவனைத் தந்து, நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கியுள்ளார். நாம் மீண்டும் இறைவனுக்கு சொந்தமாகிறோம்”.
ரவி: “நான் இறைவனுக்கு இருமுறை சொந்தம் என்பதை எப்படி அறியமுடியும்?”
அப்பா: “உனது பாவங்களை மன்னிக்கும்படி இயேசுவிடம் கேள். உனது வாழ்வில் வரும்படி அவரிடம் கேள். பின்பு நீ இறைவனுடைய பிள்ளையாக மாறமுடியும். நீ இறைவனுடைய பிள்ளையாக, அவருக்கு இருமுறை சொந்தமாக இருப்பாய்.”
மக்கள்: உரையாளர், சிறுவன், ரவி, அப்பா, பெண்.
© Copyright: CEF Germany