Home -- Tamil? -- Perform a PLAY -- 121 (Tracks in the snow 5)
121. வெண்பனியில் பாதைகள் 5
ஆனட் ஒரு புத்தகத்தை வாசித்தாள். ஆனால் அவளால் அதை கவனம் செலுத்தி வாசிக்க முடியவில்லை.
ஆனட்: “பாட்டி, நான் படுக்கைக்கு தூங்கச் செல்கிறேன். குட்நைட்!”
ஆனால் அவள் தனது அறைக்கு செல்லவில்லை. அவள் வெளியே சென்றாள்.
பனிப்பாதையில் அவள் நடந்துசென்றாள். வீட்டை விட்டு வெகுதூரம் வந்துவிட்டாள். அவள் தடுமாறினான். கால்களில் கடுமையான வலி ஏற்பட ஆரம்பித்தது. இனி அவளால் நடக்க முடியாது.
ஆனட் (அழுகை): “நான் இப்போது என்ன செய்வேன்? நான் உயிருடன் இந்தப் பனியில் உறைந்து போய்விடுவேன்”.
அவள் பனியில் அமர்ந்து கதறி அழுதாள். வானத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்தன. ஆனட் மேலே ஏறிட்டுப் பார்த்தாள். இறைவன் அவளை மன்னிப்பாரா? லூக்காஸைக் குறித்து அவள் எண்ணிப்பார்த்தாள். அப்போது பனியில் யாரோ நடந்துவரும் சத்தத்தை அவள் கேட்டாள்.
ஆனட்: “உதவி! உதவி! லூக்காஸ்! நீயா? தயவு செய்து எனக்கு உதவிசெய். என் பாதங்கள் உறைந்து போய்விட்டது”.
லூக்காஸ்: “நான் தான்! நான் சென்று பனிச்சறுக்கு வண்டியை எடுத்து வருகிறேன். அதுவரை என்னுடைய குளிர்காக்கும் இந்த ஆடையை அணிந்துகொள்”.
அவள் தனியாக இருந்த போது, தனது முழு இருதயத்தோடும் இறைவனிடம் விண்ணப்பம் ஏறெடுத்தாள்.
ஆனட்: “பிரியமுள்ள ஆண்டவராகிய இயேசுவே, நான் பாவி. எனக்கு நீர் தேவை. என்னுடைய பாவங்கள் அனைத்தையும் தயவாய் மன்னியும். நான் இப்போது ஆபத்தில் இருப்பதால் இப்படிச் சொல்லவில்லை. நான் உண்மையாகவே உமது பிள்ளையாய் வாழ விரும்புகிறேன், ஆமென்”.
லூக்காஸ் சறுக்கு வண்டியுடனும், குளிர்காக்கும் ஆடைகளுடனும் திரும்பி வந்தான்.
ஆனட்: “லூக்காஸ், நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். உனது கலைப் பொருளை நான்தான் உடைத்தேன். இயேசு என்னை மன்னித்திருக்கிறார். தயவுசெய்து நீயும் என்னை மன்னித்துவிடு. நான் இனிமேல் உன்னை வெறுக்கமாட்டேன்”.
லூக்காஸ்: “நீயாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். என்னிடம் உண்மையைச் சொன்னதற்கு நன்றி. நான் உன்னை மன்னிக்கிறேன்”.
ஆனட் பாதுகாப்பாக வீடு திரும்பினாள். லூக்காஸ் இவ்விதம் விண்ணப்பம் செய்தான்.
லூக்காஸ்: “ஆண்டவராகிய இயேசுவே, என்னை மன்னியுங்கள். எனது பெருமையை காண்பிக்க நினைத்தேன். டானிக்கு ஏற்பட்ட விபத்திற்கு நான் காரணம் அல்ல என்று ஆனட்டிற்கு நிரூபிக்க விரும்பி செயல்பட்டதற்காக என்னை மன்னியும்”.
நகரத்தில் உள்ள மருத்துவரைக் குறித்த ஞாபகம் அவனுக்கு வந்தது. அவர் டானியின் காலை முழுமையாக சரி செய்து விடுவாரா? அந்த நடு இரவில் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. லூக்காஸ் கடும் முயற்சி எடுத்து நகரத்திற்கு சென்றான். மிகவும் சோர்வுற்று, ஆபத்தின் மத்தியிலும் இறுதியாக பாதுகாப்புடன் நகரத்தை அடைந்தான். அவன் எடுத்த இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. மருத்துவர் உதவி செய்ய விரும்பினார். ஒரு குறிப்பிட்ட காலம் வரை டானி மருத்துவமனையில் தங்க வேண்டியதிருந்தது. அவன் வீட்டிற்கு மீண்டும் திரும்பி வந்தபோது அளவற்ற ஆனந்தம் அடைந்தான். அவனால் நடக்க முடிந்தது. லூக்காஸை அழைத்திருந்தார்கள். அவன் டானி ஊன்றுகோல் உதவியில்லாமல் நடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.
மருத்துவர்: “டானி, நீ லூக்காஸிற்கு நன்றி சொல்ல வேண்டும். அவன் தனது உயிரை பணையம் வைத்து என்னை காண வந்தான்”.
லூக்காஸ்: “நான் இதைத் தனியாகச் செய்யவில்லை. இயேசு எனக்கு இந்த ஆலோசனையைக் கொடுத்தார். இதை நிறைவேற்றி முடிக்க அவர் உதவி செய்தார்”.
மலைப்பகுதியில் இருந்த அவனுடைய நண்பராகிய முதியவர் அனைத்து செலவையும் ஏற்றுக்கொண்டார். ஆனால் இது லூக்காஸிற்கு தெரியவில்லை.
மக்கள்: உரையாளர், ஆனட், லூக்காஸ், மருத்துவர்.
© Copyright: CEF Germany