Home -- Tamil? -- Perform a PLAY -- 122 (Peter’s life in danger)
122. பேதுருவின் உயிருக்கு ஆபத்து
விளக்குகள் அணைக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகிவிட்டது. ஆனால் மரியாளின் வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவள் வீட்டில் அநேகர் கூடியிருந்தார்கள். அதற்கான காரணம் ஓர் துக்ககரமான காரியம் ஆகும். பேதுரு சிறைச்சாலையில் இருந்தான். அவன் இயேசுவைக் குறித்து பிரசங்கித்தான். ஏரோது இராஜா இதை மிகப்பெரிய குற்றமாகக் கருதினான். பேதுரு உயிருடன் இருக்கும் கடைசி இரவு இதுதானா? அவனுடைய நண்பர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. இறைவன் அற்புதங்களைச் செய்வார். இரவு பகலாக அவர்கள் விண்ணப்பம் செய்தார்கள்.
பெண்: “ஆண்டவராகிய இயேசுவே, பேதுரு சாகாமல் இருக்க உதவி செய்யுங்கள்”.
மனிதன்: “நீர் அற்புதங்களைச் செய்யக் கூடியவர். நாங்கள் உம்மை நம்புகிறோம்”.
சிறைச்சாலையில் பேதுரு எப்படி இருந்தான் என்பதை அறிய விரும்புகிறாயா? இயேசுவுடன் வாழும் மனிதர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை ஜன்னல் வழியாகக் காணக் கூடியதைப் போல வேதாகமம் உள்ளது.
சிறுவன்: “பேதுரு தூங்கிக் கொண்டிருக்கிறான். மரணதண்டனை நிறைவேற்றப்படும் முன்பு இரவில் எப்படி அவனால் தூங்க முடியும்?”
சிறுமி: “இரண்டு காவலர்கள் மத்தியில் அவன் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான்”.
சிறுவன்: “சிறைக்கதவு அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்”.
பேதுருவின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருந்தது. அவனுடைய நண்பர்கள் தொடர்ந்து விண்ணப்பம் செய்தார்கள். அன்று இரவு சிறைச்சாலையில் நிகழ இருந்தக்.
காரியத்தை அவர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. திடீரென்று ஓர் வெளிச்சம் தோன்றியது. பேதுரு அருகே ஒரு தூதன் நின்றான்.
தூதன்: “பேதுருவே, எழுந்திரு. உனது பாதரட்சைகளை போட்டுக் கொள். உனது மேலாடையை எடுத்துக்கொள், என்னைப் பின்பற்றி வா”.
கனவு காண்பது போல் பேதுருவிற்கு காணப்பட்டது. தூதனுடன் நடந்து சென்றான். சங்கிலிகளால் அவனைக் கட்டிவைக்க முடியவில்லை. ஒரு காவலரும் அவன் வெளியேறுவதை பார்க்க முடியவில்லை. சிறைச்சாலையின் மிகப்பெரிய இரும்புக் கதவு காண முடியாத கரத்தினால் திறக்கப்பட்டது. பின்பு தூதன் மறைந்துவிட்டான். இறைவன் அற்புதங்களைச் செய்கிறவர்!
பேதுரு: “நான் விடுதலை ஆகிவிட்டேன். இறைவன் தூதனை அனுப்பி, ஏரோது இராஜாவிடம் இருந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்”.
பேதுரு மரியாளின் வீட்டை நோக்கி ஓடிச்சென்றான். (கதவைத் தட்டும் சத்தம்)
ரோதை: “யார் அது?”
பேதுரு: “நான் பேதுரு”.
சந்தோஷத்தின் மிகுதியினால் ரோதை கதவைத் திறக்க மறந்தவளாய் உள்ளே ஓடிச்சென்று மற்றவர்களிடம் கூறினாள்.
ரோதை: “பேதுரு வெளியே வாசலில் நிற்கிறார்!”.
மனிதன்: “நீ பிதற்றுகிறாய். அது இயலாத காரியம்”.
ரோதை: “உண்மைதான், நான் அவருடைய சத்தத்தைக் கேட்டேன்”. (கதவைத் தட்டும் சத்தம்)
பேதுரு: “கதவைத் திறவுங்கள்”.
மனிதன்: “உண்மையாகவே பேதுரு தான். இறைவன் அற்புதம் செய்திருக்கிறார்”.
(கதவைத் திறந்துவிடும் சத்தம்)
பெண்: “பேதுருவே, நீ எப்படி சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தாய்?”
பேதுரு தனது நண்பர்களுக்கு எல்லாக் காரியத்தையும் விளக்கிக் கூறினான். இறைவன் அற்புதங்கள் செய்கிறார். நாம் ஆச்சரியப்படும் விதத்தில் நமது விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கிறார். இன்றும் அவர் சிறிய மற்றும் பெரிய அற்புதங்களைச் செய்கிறார். அவரை நம்புங்கள்!
மக்கள்: உரையாளர், பெண், மனிதன், சிறுவன், சிறுமி, தூதன், பேதுரு, ரோதை.
© Copyright: CEF Germany