Home -- Tamil? -- Perform a PLAY -- 120 (The newcomer 4)
120. புதிய ஒருவரின் வருகை 4
லூக்காஸ் அதிர்ச்சியடைந்தான். அவனுடைய சிறந்த படைப்பு தரையில் நொறுங்கிக் கிடந்தது. அவன் இனிமேல் பரிசை வெல்ல முடியாது. அவன் தன்னிடம் உள்ள திறமையைக் காண்பிக்க விரும்பினான். ஆனால் அவனுடைய கலைப்பொருள் அழிந்துவிட்டது.
லூக்காஸ் ஆனட் மீது சந்தேகப்பட்டான். ஆனாலும் அதை நிரூபிக்க இயலவில்லை.
அவன் தன்னுடைய சுவிஸ் வீட்டிற்கு மலைப் பகுதியில் ஏறிச்சென்றான். அவன் எப்போதும் ஒரு மரத்தருகே தனியாக அமர்ந்திருப்பான். ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பான்.
மனிதன்: “ஓ சிறுவனே நீ ஒரு சிறந்த படைப்பாளி!”
லூக்காஸ் சுற்றிலும் பார்த்தான். நிச்சயம் அந்தக் குடிசையில் தனியாக வாழும் முதியவராகத் தான் இருக்கும். நகரப்பகுதியில் ஒவ்வொருவரும் இரகசியமாக அவனைப் பற்றிப் பேசினார்கள். ஆனாலும் அந்த மனிதனின் அன்பு நிறைந்த கண்கள் லூக்காஸ் நம்பிக்கை கொள்ளுமாறு செய்தது.
மனிதன்: “என்னுடன் வா. நான் எனது படைப்புகளை உனக்குக் காண்பிப்பேன்”.
(கதவைத் திறக்கும் சத்தம்)
லூக்காஸ்: “அருமை! இந்த உருவங்கள் அனைத்தையும் நீங்கள் செய்தீர்களா?”
மனிதன்: “ஒரு நாளில் நிச்சயம் இதைவிட அருமையானதை நீ செய்வாய். ஒருவேளை நண்பனுக்காக அதைச் செய்வாய்”.
லூக்காஸ்: “எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை”.
மனிதன்: “அப்படியென்றால் உனக்கு ஏதோ ஓர் பிரச்சனை உள்ளது. உனது பிரச்சனையைக் குறித்து எனக்கு சொல்ல முடியுமா?”
லூக்காஸ்: “டானி கால் முடமாகி இருக்கிறான். நான் அவனை மலையிடுக்குப் பகுதியில் தள்ளியதால் தான் இப்படி நடந்துவிட்டது என்று ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். ஆனட் என்னை அதிகமாக வெறுக்கிறாள். நானும் அவளை வெறுக்கிறேன்”.
மனிதன்: “நாம் அனைவரும் நமது வாழ்வில் தவறான காரியங்களைச் செய்கிறோம். நானும் கூட அப்படிச் செய்கிறேன். எனக்கு குடிப்பழக்கமும், சூதாட்டப் பழக்கமும் இருந்தது. நான் ஒரு வங்கியைக் கொள்ளையிட முயன்ற போது பிடிக்கப்பட்டேன். எனக்கு வாழ்வே வெறுத்துப்போனது”.
லூக்காஸ்: “மிகவும் தனிமையை உணர்ந்தீர்களா?”
மனிதன்: “நான் இப்போதும் தனியாக இருக்கிறேன். ஆனாலும் நான் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த போது, இயேசுவுடன் ஒரு புதிய வாழ்வை ஆரம்பித்தேன்”.
லூக்காஸ்: “உங்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?”
மனிதன்: “எனது மனைவி உயிருடன் இல்லை. நான் இறந்துவிட்டதாக என்னுடைய இரண்டு மகன்களும் நினைக்கிறார்கள். ஒருவன் வியாபாரி மற்றவன் புகழ்பெற்ற அறுவைச்சிகிச்சை நிபுணன். அவன் அநேகர் மீண்டும் நடப்பதற்கு உதவி செய்திருக்கிறான். இப்போது அவன் நகரத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கிறான்”.
லூக்காஸின் தலையில் பல்வேறு எண்ணங்கள் ஓடின. அவனது மனதில் என்ன நினைத்திருப்பான் என்று உன்னால் கற்பனை செய்ய முடிகிறதா? அந்த முதியவர் லூக்காஸின் தோள் மீது அன்புடன் தனது கைகளை வைத்தார்.
மனிதன்: “லூக்காஸ், நீ என்னை நம்புகின்றாய். நீ ஆண்டவராகிய இயேசுவிடம் உனது பிரச்சினை குறித்துப் பேசு. உனது பகையுணர்வு குறித்துப் பேசு. எல்லாக் காரியங்களும் சரியாகும்படி அவரிடம் மன்றாடு”.
லூக்காஸின் முகத்தில் கண்ணீர் வெளியேறியபோதும், அதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை. அவன் ஆண்டவராகிய இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டான். அவனது இருதயம் எல்லாப் பாவங்களும் நீங்கி தூய்மையானது.
இது எளிமையான காரியம். லூக்காஸிற்கு மட்டுமல்ல, உனக்கும் இது பொருந்தும்.
ஆனட்டிற்கு? அடுத்த நாடகத்தில் அவளைக் குறித்து நீ அதிகம் அறிநதுகொள்வாய்.
மக்கள்: உரையாளர், லூக்காஸ், மனிதன்.
© Copyright: CEF Germany