Home -- Tamil? -- Perform a PLAY -- 119 (Dani fell 3)
119. டானி விழுந்தான் 3
சமையலறை கடிகாரத்தை பாட்டி பார்த்தாள். இந்நேரத்திற்கு டானி வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். அவள் அமைதியாக விண்ணப்பம் பண்ணினாள். ஆனட் மற்றும் அவளுடைய அப்பா டானியைத் தேடி மலையின் மீது ஏறினார்கள்.
அப்பா: “டானி! டானி! நாங்கள் கூப்பிடும் சத்தம் கேட்கிறதா?”
ஆனட்: “அப்பா, லூக்காஸ் இக்காரியத்தில் ஏதாவது செய்திருக்க வேண்டும். நான் வேகமாக ஓடிச்சென்று அவனிடம் கேட்கிறேன்”.
ஆனட் பக்கத்து வீட்டிற்கு சென்று, களஞ்சியப் பகுதிக்கு ஓடினாள். ஒரு காட்டுப் பூனையைப் போல் விரைவாக அவள் ஏணியின் மீது ஏறினாள். அழுதுகொண்டிருந்த லூக்காஸைப் பார்த்து கேட்டாள்.
ஆனட்: “எங்கே டானி? நீ அவனுக்கு என்ன செய்தாய்?”
லூக்காஸ்: “அவன் எங்கிருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அது என்னுடைய தவறு அல்ல”.
ஆனட்: “என்ன சொன்னாய்? உன் தவறு இல்லையா? அவன் எங்கிருக்கிறான் என்பதை எனக்குச் சொல். இல்லையெனில் நான் போலீஸைக் கூப்பிடுவேன்”.
லூக்காஸ்: “டானி இறந்துவிட்டான்”.
ஆனட்டின் முகம் வெளிறிப் போனது. டானி விழுந்து மலையிடுக்குப் பகுதியை நோக்கி லூக்காஸ் ஓடினான். ஆனட் அவனைப் பின்தொடர்ந்து ஓடினாள். டானியின் அப்பா கயிற்றின் உதவியுடன் கீழே இறங்கினார். ஒரு கல் போன்ற பகுதியில், கால் முறிந்த நிலையில் டானியைக் கண்டார்.
அப்பா: “டானி உயிருடன் இருக்கிறான்! அவன் கீழ்ப்பகுதி வரை சென்று, ஆற்றுப்பகுதியில் மூழ்கவில்லை”.
டானியுடன் அப்பா கயிற்றின் வழியாக மேலே ஏறி வருவதை ஆனட் கவனித்தாள். டானியிடம் அந்த பூனைக்குட்டி பாதுகாப்பாக இருந்தது.
இறைவன் டானியின் உயிரை பாதுகாத்தார். மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை பெற்ற பின்னரும், டானியால் ஊன்றுகோலின் உதவியுடன் தான் நடக்க முடிந்தது.
ஆனட்: “லூக்காஸ் தான் தவறு செய்துவிட்டான்!”
ஆனட் சரியானவளா? அவள் லூக்காஸை வெறுத்தாள். மென்மேலும் சந்தோஷம் இழந்தவளாக மாறினாள். அவளுடைய அப்பா வேதாகமத்தை இரவில் வாசித்தபோது, அவளின் இருதயம் வெறுமையாய் காணப்பட்டது. அவளுக்கு எதுவும் ஆர்வத்தை தரவில்லை. இயேசு ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். நமது பகையுணர்வை அவர் மன்னிக்கிறார். மன்னிப்பதா? இல்லை. அவள் பழிவாங்குவதை விரும்பினாள்.
ஒருநாள் ஆனட் அழகான ஒரு குதிரைக்குட்டியை தனது அண்டைவீட்டின் படிகளில் கண்டாள். அதனுடைய நீண்ட மயிர் மற்றும் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அது மிகவும் நன்றாக இருந்தது.
ஆனட்: “லூக்காஸ் தகுதிவாய்ந்த நபர் என்று நான் கருதவில்லை. பள்ளியில் நடைபெறும் போட்டியில், நிச்சயமாக முதல் பரிசைப் பெற அவன் விரும்புவான். ஆனால் நான் அதைத் தடுப்பேன்”.
(மரங்கள் கீழே விழும் சத்தம், காலில் அடிபடும் சத்தம்)
அவள் கைவினைப்பொருளை கீழே எறிந்தாள். அது தூள் தூளாக உடைந்தது. அவளுடைய இருதயம் முழுவதும் பகையுணர்வு நிறைந்திருந்தது.
ஆனட் தன் பக்கம் தவறு இருப்பதை அறிந்திருந்தாள். ஆனால் அவள் இப்படி நினைத்தாள். லூக்காஸ் என்னை விட மோசமானவனாக இருக்கிறான். அவள் ரகசியமாக மெதுமெதுவாக வழிவிலகிச் சென்றாள்.
என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், அப்பா, ஆனட், லூக்காஸ்.
© Copyright: CEF Germany