Home -- Tamil? -- Perform a PLAY -- 118 (Sled crash 2)
118. பனிச்சறுக்கு முறிவு 2
நீங்கள் பள்ளிக்கு பேருந்தில் செல்வதை விட பனிச்சறுக்கு வண்டியில் செல்வதை விரும்புவீர்களா? ஆனட் மற்றும் லூக்காஸ் சுவிஸ் ஆல்ப்ஸ் பகுதியில் வசித்து வந்தார்கள். அவர்கள் தங்கள் சறுக்கு வண்டியில் ஒவ்வொரு நாள் காலையிலும் பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்வார்கள். ஆனால் இணைந்து செல்லமாட்டார்கள். அவர்கள் இணைந்து செல்வது ஏன் கடினமான ஒரு காரியமாக இருந்தது? ஒரு செவ்வாய்க்கிழமை அந்தக் காரியம் நடைபெற்றது. லூக்காஸ் அப்படி நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அது அவனுடைய நோக்கமாகவும் இல்லை. அவன் வேகமாக தனது சறுக்கு வண்டியில் சென்ற போது, ஆனட்டின் சறுக்கு வண்டியில் மோதிவிட்டான். அவர்கள் இருவரும் பள்ளத்தில் விழுந்தார்கள்.
ஆனட்: “முட்டாள்! கவனமாக வரத் தெரியாதா உனக்கு? உனக்கு தலையில் கண்கள் இல்லையா?”
லூக்காஸ்: “ஆனட்! என்னை மன்னித்துவிடு. இரு, நான் உனக்கு உதவுகிறேன்”.
ஆனட்: “என்னைத் தனியாக விடு! உன் உதவி இல்லாமல் என்னால் எழ முடியும்”.
லூக்காஸ்: “ஆனட்! பொறுமையாக இரு! நிதானத்தை இழக்காதே!”
எலும்பு வரை குளிரக் கூடியதாக கடுமையான பனி இருந்தது. நனைந்து போன புத்தகங்களுடன் ஆனட் தாமதமாக பள்ளிக்கு வந்தாள்.
ஆசிரியர்: “ஆனட், என்ன நிகழ்ந்தது?”
ஆனட்: “இது லூக்காசின் தவறு. அவன் என்னை குழியில் தள்ளிவிட்டான். பிறகு என்னைத் தனியாக விட்டுவிட்டு, அவன் ஓடிவிட்டான்”.
எல்லோரும் ஆனட்டின் மீது பரிதாபம் கொண்டார்கள். ஆனால் லூக்காசை கோபத்துடன் பார்த்தார்கள். ஆனட்டின் இருதயம் லூக்காசைப் போலவே மோசமாக இருந்ததை ஒருவரும் அறிந்திருக்கவில்லை. அம்மாவை இழந்த ஆனட்டின் பக்கமே அனைவரும் நின்றார்கள்.
மக்கள் எப்போதும் வெளிப்புறத்தையே பார்க்கிறார்கள். ஆனால் இறைவன் நம்முடைய இருதயங்களைப் பார்க்கிறார். வெறுப்பு ஒரு பாவம் என்று ஆனட் மற்றும் லூக்காசிடம் ஒரு அமைதியான குரல் பேசியது. ஆனால் அவர்கள் இருவருமே அதை உணரவில்லை. நிலைமை இன்னும் மோசமாகியது.
பனிக்காலம் முடிந்து வசந்தகாலம் ஆரம்பித்தது. மலைப்பகுதியில் தனது பூனைக்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்த டானியை லூக்காஸ் சந்தித்தான்.
லூக்காஸ்: “நீ என்ன செய்கிறாய்?”
டானி: “ஆனட்டிற்காக நான் பூக்களை சேகரிக்கிறேன்”.
லூக்காஸ்: “நல்லது! நல்லது! ஆனட்டிற்காகவா! உனது அக்கா ஒரு ஊமை”.
லூக்காஸ் அந்த பூங்கொத்தை டானியிடம் இருந்து பிடுங்கினான். அவைகளை தரையில் எறிந்து, காலால் நசுக்கினான்.
டானி: “நான் எனது அப்பாவிடம் இதைச் சொல்லப் போகிறேன்”.
லூக்காஸ்: “இல்லை, நீ அப்படி சொல்லக்கூடாது”.
லூக்காஸ் டானியின் பூனைக்குட்டியை எடுத்தான். ஆழமான மலையிடுக்குப் பகுதியில் அதைப் போட்டுவிட்டான். பின்பு எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்தது. பனிவெண்மை என்ற அந்தப் பூனைக்குட்டியை லூக்காஸ் இடுக்குப் பகுதியில் போட்டுவிட்டான். ஐந்து வயது நிரம்பிய டானி அந்த இடுக்குப் பகுதியில் இறங்கினான். வழுக்கி அந்த இடுக்குப் பகுதியில் விழுந்துவிட்டான். அதிர்ச்சியுற்றவனாக லூக்காஸ் அவனைப் பார்த்தான்.
லூக்காஸ்: “டானி! டானி! நீ உயிருடன் இருக்கிறாயா? ஏதாவது பேசு!”
ஒருபதிலும் இல்லை. சுற்றிலும் பார்த்துவிடடு, லூக்காஸ் வீட்டிற்கு ஓடினான். தானியம் சேகரிக்கும் களஞ்சியத்தில் முட்டி அழுதான். அழுதுகொண்டே இருந்தான்.
பின்பு என்ன நிகழ்ந்தது? அடுத்த நாடகத்தில் நீங்கள் அதைக் காண்பீர்கள்.
மக்கள்: உரையாளர், ஆனட், லூக்காஸ், ஆசிரியர், டானி.
© Copyright: CEF Germany