STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 117 (Sad Christmas memory 1)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

117. ஒரு சோகமான கிறிஸ்துமஸ் 1


ஆனட் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று அவளுக்கு ஞாபகம் வந்தது: இது கிறிஸ்துமஸ் நேரம்! இந்த சிந்தனையுடன் அவள் படுக்கையை விட்டு துள்ளி எழுந்தாள்.

ஆன்ட்: “டானி! டானி! நீ எங்கே இருக்கிறாய்?”

டானி: “ஆனட்! முன்பக்க கதவருகே சீக்கிரம் வா!”

ஆனட்: “நீ வெளியே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு உடல் நலக் குறைவு ஏற்படப் போகிறது”.

டானி: “ஆனட்! சான்டா கிளாஸ் இங்கே வந்தார்! நான் என்னுடைய சிவப்பு நிறக் காலணிகளை வெளியே வைத்திருந்தேன். பார்! அவர் எனக்கு ஒரு பரிசைக் கொண்டு வந்துள்ளார்”.

ஆனட் அதைப் பார்த்தாள். பனிபோன்ற வெண்மை நிற பூனைக்குட்டி ஒன்று மெல்லிதான பேப்பரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. டானி அதை வீட்டிற்கு கொண்டு வந்தாள்.

டானி: “நான் அதற்கு பனி வெண்மை என்று பெயரிடுவேன். நான் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்”.

டானி அதற்கு மிதமான சூட்டுடன் பாலைக் கொடுத்தான். ஆனட் தனது பாட்டியின் அசைந்தாடும் நாற்காலியில் அமர்ந்து இதைப் பார்த்தாள். அப்படிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது 5 ஆண்டுகள் முன்பு இருந்த கிறிஸ்துமஸ் குறித்து சிந்திக்க ஆரம்பித்தாள்.

அப்போது அவளுக்கு 7 வயது. பக்கத்து வீட்டுக்காரரின் மகன் லூக்காவுடன் இணைந்து சபைக்கு சென்றாள். அங்கு பாடப்பட்ட பாடலைக் கேட்பதும், போதகர் குழந்தை இயேசுவைக் குறித்து கூறியதை கவனிப்பதும் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் லூக்காவுடன் தொடர்ந்து அவளால் இருக்க முடியவில்லை. அவன் கருமை நிற முடியுடன் பேராசையுள்ள சிறுவனாக இருந்தான். அவன் ஆனட்டின் சுவை மிகு இஞ்சி ரொட்டியின் மீது ஆசைப்பட்டான். ஆனால் அவள் அதை அவனுக்கு கொடுக்க விரும்பவில்லை. அவள் விரைவாக வீட்டிற்கு திரும்பிச் சென்றாள். கிறிஸ்துமஸ் மாலையை எதிர்நோக்கி இருந்தாள். அப்போது தனது அப்பாவின் சோகமான முகத்தைப் பார்த்து, அவள் அதிர்ச்சியடைந்தாள்.

ஆனட்: “அம்மாவுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டதா?”

அப்பா: “ஆமாம். ஆனட், அவள் வியாதி முற்றிவிட்டது. அவள் உன்னைப் பார்க்க வேண்டுமாம்”.

ஆனட் அமைதியாக அம்மாவின் படுக்கை அருகே சென்றாள். அம்மா தழுதழுத்த குரலில் தன்னிடம் சொல்லியதை அவள் ஒருபோதும் மறக்கவில்லை:

அம்மா: “ஆனட்! நான் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன். அது ஒரு தம்பி பாப்பா. அவனை நன்றாகப் பார்த்துக்கொள்”.

ஆனட் அந்த குழந்தையை தூக்கினாள். இதற்கு அர்த்தம் என்ன? பின்பு அவளுடைய அப்பா அங்கு வந்தார்.

அப்பா: “ஆனட், இனிமேல் உனது அம்மா நம்மிடம் இருக்க மாட்டார்கள். அவள் கிறிஸ்துமஸை பரலோகத்தில் கொண்டாடப் போகிறாள். தான் மரிக்கும் நேரம் நெருங்கிவிட்டதை அவள் அறிந்தவளாக, இந்தக் குழந்தை டானியை உனக்கு பரிசாக கொடுத்திருக்கிறாள்”.

ஆனட் தனது அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு அழுதாள். அது மிகவும் சோகமான கிறிஸ்துமஸ் நாளாக இருந்தது.

தனது பாட்டி அந்த அறைக்குள் வந்ததைக் கூட அறியாதவளாக, சிந்தனையில் ஆனட் மூழ்கிவிட்டாள்.

டானி: “பாட்டி, எங்களுக்கு பரலோகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?”

கண்ணீர் இல்லாத அந்த அற்புதமான இடத்தைக் குறித்து பாட்டி சொன்ன போது, டானி அதை ரசித்துக் கேட்டான்.

ஆனால் லூக்காசுடன் ஏற்பட்ட மோதலைக் குறித்த சிந்தனை ஆனட்டின் இருதயத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அங்கே இயேசுவுக்கு ஓர் இடம் இல்லை. எனவே தான் நிலைமை இன்னும் மோசமாகிறது.

என்ன நிகழந்தது என்பதை நீங்கள் அடுத்த நாடகத்தில் காண்பீர்கள்.


மக்கள்: உரையாளர், ஆனட், டானி, அப்பா, அம்மா.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 06:07 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)