Home -- Tamil? -- Perform a PLAY -- 116 (William‘s special Christmas tree)
116. பில்லின் கிறிஸ்மஸ் மரம்
பில்: “என்ன செய்வது? எல்லா கிறிஸ்மஸ் மரங்களும் விற்று தீர்ந்துவிட்டன. அம்மா, ஏன் இவ்வளவு தாமதம் பண்ணினீர்கள்?”
அம்மா: “நாம் பிறகு வாங்கிக்கொள்ளலாம். அப்போது தான் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்று எண்ணினேன். நம்மிடத்தில் அதிக பணம் இல்லை என்பது உனக்குத் தெரியும்”.
பில்: “நேற்று கிறிஸ்மஸ் மரத்திற்காக ரோஸி விண்ணப்பம் பண்ணினாள். அவள் சோர்வடைவாள். மற்ற சிறுமிகளுக்கும் இது சோர்வைக் கொண்டு வரும்”.
தனது அப்பாவைக் குறித்து பில் எண்ணினான். அவர் உயிருடன் இருந்த காலத்தில், எப்போதும் முன்பாகவே கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கிவிடுவார். அவர் இல்லாமல் அனைத்துக் காரியங்களும் கடினமாக மாறிவிட்டன.
அம்மா: “பில், அங்கே ஒரு மரம் இருக்கிறது. ஹலோ! தயவு செய்து அந்த மரத்தை எனக்குத் தாருங்கள்”.
மனிதன்: “நான் அதை விற்பனைக்காக வைத்திருக்கவில்லை. அது என்னுடைய பிள்ளைகளுக்காக வைத்திருக்கிறேன். நான் இன்று வீட்டிற்கு கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் சென்றால் அவர்கள் மிகவும் சோர்ந்து போவார்கள். உங்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!”
அந்த மனிதன் கடந்து சென்றான். பில்லும், அவனுடைய அம்மாவும் தரையில் விழுந்து கிடந்த பிர் மரக்கிளைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றார்கள். சோகத்துடன் இருந்த நான்கு சிறுமிகள் முன்பக்கக் கதவருகே இருந்தார்கள்.
சிறுமி: “உங்களிடம் ஒரு மரம் இருக்கின்றதா?”
அம்மா: “இல்லை. எங்களை மன்னியுங்கள்”.
இரவு உணவு உண்பதற்காக, அவர்கள் உணவு மேஜையின் அருகே அமைதியுடன் அமர்ந்திருந்தார்கள். இந்த முறை ரோஸி விண்ணப்பம் பண்ண வேண்டும்.
ரோஸி: “எங்கள் பிரியமுள்ள ஆண்டவராகிய இயேசுவே, எங்களுக்கு ஒரு மரம் வேண்டும் என்று உங்களிடம் நான் கேட்டேன். நீங்கள் நான் சொன்னதைக் கேட்டீர்களா? இனிமேல் அதைக் குறித்து கவலைப்பட வேண்டாம். இப்போது மிகவும் காலம் கடந்துவிட்டது. எங்களுக்கு உண்பதற்காக கொஞ்சம் உணவு கொடுத்ததற்காக நன்றி ஆமென்”.
சிறுமிகள் எல்லாம் படுக்கைக்கு சென்ற பின்பு, பில்லிற்கு ஒரு யோசனை தோன்றியது. அவன் துடைப்பக் குச்சியின் கைப்பிடியை தனது சிறிய கத்தியால் அழகாக செதுக்கினான். அதில் பிர் மரக்கிளைகளை இணைத்தான். பின்பு ஒரு வாளியில் மணலை நிரப்பி, துடைப்பக் குச்சியை அதில் நிற்கும்படி செய்தான். இறுதியாக பழுப்பு நிறக் காகிதத்தைக் கொண்டு சுற்றிலும் மூடினான்.
அம்மா: “பில்! இந்த மரம் அருமையாக காட்சியளிக்கிறது! நீ சிறந்த ஒரு வேலையைச் செய்திருக்கிறாய். நான் இதை இன்னும் அலங்காரப்படுத்தி, மேற்பகுதியில் தூதனை வைக்கிறேன். சிறுமிகள் அனைவரும் ஆச்சரியப்படப் போகிறார்கள்”.
ரோஸி மற்ற அனைவரையும் விட அதிகமாக மகிழ்ச்சியடைந்தாள்.
ரோஸி: “பில், இதுவரை நாம் வைத்திருந்ததை விட, இந்த மரம் தான் அழகாக உள்ளது. இயேசு நம்முடைய விண்ணப்பத்திற்கு உண்மையாகவே பதிலளித்திருக்கிறார்”.
அம்மா கிறிஸ்துமஸ் கதையை சத்தமாக வாசித்துக் கொண்டிருந்த போது, பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சுற்றி நின்றார்கள்.
(பக்கங்களைத் திருப்பும் சத்தம்)
அம்மா: “மரியாள் தனது முதல் மகனை பெற்றெடுத்து, துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்”.
மேலும் இயேசு சிலுவையில் அறையப்படும் சம்பவத்தையும் அம்மா வாசித்தாள். ஏன்?
அம்மா: “ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை தான் உண்மையான மரம். கிறிஸ்துமஸ் மரத்தை விட மிகவும் முக்கியமான மரம். முன்னணையும், சிலுவையும் ஒன்றோடொன்று இணைந்தவை. ஆண்டவராகிய இயேசு நமக்காக மரிக்கும்படி பூமிக்கு வந்தார். சிலுவை இல்லாமல் கிறிஸ்துமஸ் இல்லை”.
மக்கள்: உரையாளர், பில், அம்மா, மனிதன், சிறுமி, ரோஸி.
© Copyright: CEF Germany