Home -- Tamil? -- Perform a PLAY -- 089 (Ringu at the bull race 1)
89. ரிங்குவும், காளை பந்தயமும் 1
இந்தியாவின் சிறிய கிராமம் ஒன்றில் ரிங்கு காளைகளுக்கு சேனம் பூட்டிக்கொண்டு இருந்தான். அவனது பெற்றோர்கள். அந்த மாட்டு வண்டியில் ஏறிக்கொண்டார்கள்.
ரிங்கு: “பட்டு ஏறிவா, நாம் புறப்படத் தயாராகிவிட்டோம்”.
பட்டு: “நாம் பஜாருக்கு செல்ல வேண்டும்”.
ரிங்கு: “பின்பு நாம் காளைகளின் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவேண்டும்”.
பட்டு: “ரிங்கு, நீ காளைப் பந்தயத்தில் ஜெயிப்பதைக் காண நான் ஆவலுடன் இருக்கிறேன்”.
ரிங்கு பதட்டத்துடன் இருந்தான். அவன் முன்பாக அமர்ந்து காளைகளை ஓட்டிக் கொண்டிருந்தான். அந்த சாலை காடு வழியாகச் சென்றது. புலிகள் மற்றும் தீய ஆவிகள் அங்கு இருப்பதாகச் சிலர் சொன்னார்கள்.
பட்டு: “வேகமாக ஓட்டு! ரிங்கு, வேகம்!”
ரிங்கு: “ஏதாவது வெளிநாட்டவர் இருக்கின்றனரா? உனக்குத் தெரியுமா? வளர்த்தியான, வெள்ளைத் தோல் உடைய மனிதன். எப்போதும் நல்ல இறைவனைக் குறித்து பேசிக் கொண்டேயிருப்பவன்”.
நகரம் முழுவதும் பரபரப்பாக இருந்தது. அவர்கள் உள்ளே செல்லும்போது, ரிங்கு முதலாவது தனது வண்டியில் இருந்து குதித்தான்.
ரிங்கு: “ஆ! ஆ! எனது கால்!”
நீளமான முள் ஒன்று அவனது பாதத்தில் தைத்தது. அவன் பல்லைக் கடித்துக்கொண்டு, அந்த முள்ளை வெளியில் எடுத்தான். பின்பு அவன் தனது பெற்றோர்களுடன் சென்றான். அவனுடைய அப்பா பொருட்களை வாங்கினார். ரிங்கு இரகசியமாக ஒரு வாழைப்பழத்தை திருடினான். இது சரியல்ல என்பதை அவனும் அறிந்திருந்தான். மற்றவர்கள் திருடுகிறார்களே என்று அவன் நினைத்தான்.
அவர்கள் அழகான இசையைக் கேட்டார்கள். ரிங்கு ஓட விரும்பினான். ஆனால் ஒரு மனிதனை நோக்கி ஓடினான். அந்த மனிதன் தனது கையில் வைத்திருந்த காகிதங்களை தவறவிட்டான். அவன் வெளிநாட்டைச் சேர்ந்தவன். ரிங்கு ஓட முயற்சித்தான். ஆனால் அந்த மனிதன் அவனை பிடித்துக்கொண்டான்.
நற்செய்தியாளர்: “ஒரு நிமிடம் பொறுங்கள், எனது நண்பனே! நான் உனக்கு இந்த காகித்தைக் கொடுக்க விரும்புகிறேன். இது இறைவனிடமிருந்து வந்த கடிதம். நீ இறைவனுடைய அன்பைக் குறித்து அதில் வாசிக்க முடியும்”.
ரிங்கு அதை வாங்கிக் கொண்டு, தனது டர்பனில் வைத்தான். இசை நின்றது. ஆர்கனை வாசித்த இந்தியன் எழுந்து நின்றான்.
பாண்டு: “எனது பெயர் பாண்டு. நான் தீய ஆவிகளுக்குப் பலியிடுவது வழக்கம். நான் காளைகளை ஆராதிப்பேன். ஆனால் இப்போது உயிருள்ள இறைவனைக் குறித்து அறிந்திருக்கிறேன். அவருக்கு பணி செய்ய விரும்புகிறேன். அவர் உண்மையான இறைவன்”.
ரிங்கு இந்த வார்த்தைகளைக் குறித்து சிந்தித்தான். அடுத்த நாள் காலை கொட்டு சத்தம் அவனை எழுப்பியது. அவன் பயத்துடன் தனது சிவப்பான புண் நிறைந்த பாதத்தை பார்த்தான். அவனது அப்பா ஒரு மந்திரவாதியை கூப்பிட்டார். ரிங்கு நடுக்கத்துடன் அவனை நோக்கி வந்தான். அவன் அந்தக் காயத்தில் மிளகுத்தூளை தூவினான். அவனது காதுகளில் ஊதினான். ரிங்கு சத்தமாய் கத்தினான்.
ரிங்கு: “ஆ! ஊ! ஆ!”
மிளகுத்தூளும், இப்படி ஊதுகிற செயலும் எப்படி பாதுகாக்கும்? போட்டி ஆரம்பமானது. ரிங்குவிற்கு கடுமையான வலி இருந்தது. அவன் தனது கைகளில் கயிற்றை எடுத்துக்கொண்டான். சிரிக்க முயற்சித்தான். (துப்பாக்கி சுடும் சத்தம்)
காளைகள் ஓட ஆரம்பித்தன. பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தார்கள். ரிங்கு மறுபடியும் கத்தினான். வலி அதிகமாகியது. அவன் தடுமாறினான். பிறகு …?
என்ன நிகழ்ந்தது என்பதை அடுத்த நாடகத்தில் நான் உங்களுக்கு கூறுவேன்.
மக்கள்: உரையாளர், ரிங்கு, பட்டு, நற்செய்தியாளர், பாண்டு.
© Copyright: CEF Germany