STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 088 (The big contest question)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

88. பெரிய போட்டியின் கேள்வி


போட்டியின் கேள்வி: யார் ஞானமுள்ளவர்?

சிறுமி: “அது ஸ்டெபான் தான். ஆசிரியருக்கு நெருக்கமானவன்”.

சிறுவன்: “டிர்க்கின் மூளை கம்ப்யூட்டரைப் போல செயல்படுகிறது. அவன் தான் என்று நான் நினைக்கிறேன்”.

சிறுமி: “அவன் தன்னை அப்படி எண்ணிக்கொள்கிறான். ஆனால் …?”

நீ வேறு யாரையாவது யோசிக்கிறாயா?

சிறுவன்: “பல்கலைக்கழக பேராசிரியர்”.

சிறுமி: “ஏதாவது சிறப்பான ஒன்றை கண்டுபிடித்தவர்”.

சிறுவன்: “உதாரணத்திற்கு ஐன்ஸ்டீன் அல்லது பித்தாகரஸ்”.

எனது கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. யார் ஞானமுள்ளவர் என்பது உனக்குத் தெரியுமா? வேதாகமம் என்ன கூறுகிறது என்பதை கவனித்துக் கேள். இயேசு யாரை ஞானமுள்ளவர் என்று நினைக்கிறார்? கவனமாக கேளுங்கள். நீங்களும் ஞானமுள்ள நபராக மாற வாய்ப்புண்டு.

இயேசு: “எனது வார்த்தைகளைக் கேட்டு, அதின்படி செய்கிறவன் ஞானமுள்ளவன். அவன் கன்மலையின் மீது தனது வீட்டைக் கட்டியுள்ள மனுஷனுக்கு ஒப்பாக இருக்கிறான். அவன் முதலாவது நல்ல அஸ்திபாரத்தை போடுகிறான். அதைப் பின்பு பார்க்க இயலாது. அவனது வீடு உறுதியான அடித்தளத்தின் மீது நிற்கிறது. புயல் வரும்போது, பெருவெள்ளம் ஏற்படும் போது, பலத்த மழை பெய்யும் போது, அவனது வீடு உறுதியாக இருக்கிறது. அதன் அஸ்திபாரம் உறுதியாக இருப்பதால், அது விழுவதில்லை. ஆனால் எனது வார்த்தையைக் கேட்டும், அதின்படி செய்யாதவன் புத்தியில்லாதவனாக இருக்கிறான். அவன் மணல் மீது தன் வீட்டைக் கட்டியுள்ள மனுஷனுக்கு ஒப்பாக இருக்கிறான். புயல் வீசியது, பெருங்காற்று மழை பெய்தது. அந்த வீடு இடிந்தது. அது முற்றிலும் அழிந்துபோனது”.

இயேசுவின் வார்த்தையைக் கேட்பவர்கள் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ஞானமுள்ள மனிதனுக்கு கேட்பது மட்டும் முக்கியமான ஓர் அடையாளம் அல்ல. ஒருவன் ஞானமுள்ளவன்தானா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு வழி உண்டு. உன்னிடம் வேதாகமம் இருந்தால் மத்தேயு 7-ம் அதிகாரத்தில் வசனம் 24-ஐ வாசி. இதற்கான பதிலை அந்த வசனம் கூறுகிறது. யார் ஞானமுள்ளவர்?

உனது பதிலுடன் என்னை தொடர்புகொள். நீ அப்படிச் செய்வாயா? இயேசு குறிப்பிடும் ஞானமுள்ளவர்களில் நீயும் ஒருவனா என்பதை சிந்தித்துப் பார்.


மக்கள்: உரையாளர், சிறுவன், சிறுமி, இயேசு.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 02:05 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)