Home -- Tamil? -- Perform a PLAY -- 090 (The angry teacher 2)
90. கோபமுள்ள ஆசிரியர் 2
பட்டு: “ரிங்கு! சீக்கிரம்! சீக்கிரம்! உன்னால் முடியும்.”
ரிங்குவின் பாதத்தில் கடுமையான வலி இருந்தது. ஆனாலும் அவன் அந்த பந்தயத்தில் ஜெயிக்க விரும்பினான். அவன் கயிறுகளை இறுக்கிப் பிடித்தான். வேகமாக ஓட்டினான். மற்ற வண்டிகளை முந்தினான். முடிவுக் கோட்டிற்கு சற்று முன்பு, அவன் முதல் இடத்தில் வந்தான்.
பட்டு: “அவன் ஜெயித்துவிட்டான். ரிங்கு பந்தயத்தில் ஜெயித்துவிட்டான்”.
பட்டு சந்தோஷத்தில் துள்ளி குதித்தான். அவனது அப்பா மகனைக் குறித்து பெருமைப்பட்டார். காளையின் கழுத்தில் பூமாலை சுற்றியிருந்தது. அதில் இருந்த பரிசுப் பொருளை ரிங்கு பெற்றுக்கொண்டான். அவன் கால் வலியை பொறுத்துக் கொண்டான். ஆனால் வீடு திரும்பியதும், அவனது பாதம் மிகவும் மோசமாகியது. வலி கடுமையாக இருந்தது. ரிங்குவிற்கு தலைவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது.
அம்மா: “கீழே படுத்துக்கொள் ரிங்கு. அந்த வெள்ளை மனிதனும், பாண்டுவும் நமது கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள்”.
ரிங்கு: “எனக்கு அவரைத் தெரியும். அவர் எப்போதுமே இந்த உலகிற்கு தனது குமாரனை அனுப்பிய நல்ல இறைவனைக் குறித்து பேசிக் கொண்டேயிருப்பார்”.
ஷாகிப் குரூப்: “ஹலோ! நாங்கள் உங்களுக்கு கிணற்றருகில் சில படங்களைக் காண்பிக்க போகிறோம். உங்களை வரவேற்கிறோம். நீங்கள் வருவீர்களா?”
அம்மா: “மன்னித்துக் கொள்ளுங்கள். எங்களால் முடியாது. எங்கள் மகன் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறான். மந்திரவாதியும் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. நீங்கள் எங்களுக்கு உதவ முடியுமா?”
அந்த வெளிநாட்டவர் ரிங்குவின் பாதத்தை சோதித்துப் பார்ப்பதை அநேக மக்கள் கவனித்தார்கள்.
ஷாகிப் குரூப்: “ஆமாம். என்னால் உதவ முடியும். எனக்கு ஒரு கிண்ணத்தில் சுடு தண்ணீர் வேண்டும். நான் அதில் இந்தப் பொடியை போட்டு கலக்க வேண்டும். உடல் உஷ்ண நிலை சீராக உள்ளது. ரிங்கு! உனது பாதத்தை இந்த தண்ணீரில் வை. இந்த மருந்து உனது காயத்தை ஆற்றும்”.
ரிங்கு: “முழுவதும் உள்ளே வைக்க வேண்டுமா?”
ஷாகிப் குரூப்: “ஆமாம். பயப்படாதே. நான் உனக்காக விண்ணப்பம் பண்ணுகிறேன். ஆண்டவராகிய இயேசுவே! உம்மால் எல்லாம் செய்ய இயலும். தயவாய் இரங்கி ரிங்குவின் பாதத்தில் உள்ள காயத்தை ஆற்றும். அவனை சுகப்படுத்தும். இந்த வீட்டாரை காத்துக்கொள்ளும். ஆமென்”.
அந்த சிகிச்சையும், விண்ணப்பமும் உதவி செய்தது. விரைவில் ரிங்கு பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தான். அந்த நற்செய்தியாளர் ஷாகிப் குரூப் கொடுத்த காகிதங்களை அவன் கொண்டு சென்றான். அவனது ஆசிரியர் இதை விரும்பவில்லை.
ஆசிரியர்: “என்ன இது? இந்தக் கடிதம் கிறிஸ்தவர்களின் இறைவனைக் குறித்து சொல்கிறது. இந்தியர்களாகிய நாம் இதை நம்புவது கிடையாது. இப்படிப்பட்ட ஒரு காகிதத்தை இனிமேல் நீ யாரிடமும் வாங்க கூடாது. புரிகின்றதா உனக்கு?”
அவனது கையில் இருந்து அதைப் பறித்து, மூலையில் தூக்கி எறிந்தார். அந்த நாளில் ரிங்கு தான் கடைசியாக பள்ளியை விட்டு சென்றான். அவன் தனது டர்பனில் என்ன மறைத்து வைத்திருப்பான் என்பதை உன்னால் நிச்சயம் யூகிக்க முடியும்.
ரிங்கு: “பட்டு! நான் கிறிஸ்தவர்களின் இறைவனைக் குறித்து அதிகம் அறிய வேண்டும்”.
பட்டு: “நமது ஆசிரியர் சொன்னதை மறந்துவிட்டாயா? நீ அவர் சொன்னதைக் கேட்காவிட்டால், தீய ஆவிகள் உன்னைத் தின்றுவிடும்”.
ரிங்கு: “அவைகள் அப்படிச் செய்யாது. நான் இந்த கடிதத்தை வைத்திருக்கிறேன்”.
பட்டு: “எனக்கு பயமாக உள்ளது”.
இதற்கு பின்பு அந்த சிறிய இந்திய கிராமத்திற்கு விருந்தினர்கள் வந்தார்கள். அதைக் குறித்து அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், ரிங்கு, பட்டு, அம்மா, ஷாகிப் குரூப், ஆசிரியர்.
© Copyright: CEF Germany