Home -- Tamil? -- Perform a PLAY -- 074 (Beating the innocent 2)
74. தவறு செய்யாதவனை அடித்தல் 2
புதிய ஆசிரியர் மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். அவர் பயன்படுத்திய வழிமுறைகளைக் கண்டு வாயடைத்தவனாக ஜிம்மும் காணப்பட்டான். ஆசிரியர் விண்ணப்பம் பண்ணினார். இரண்டாம் அதிர்ச்சி வந்தது.
ஆசிரியர்: “எல்லாம் நன்றாக இருக்க வேண்டுமென்றால், புதிய பள்ளி விதிமுறைகள் நமக்குத் தேவை. நீங்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்”.
ஜிம்மிற்கு மூச்சே நின்றது போல் இருந்தது. இதற்கு முன்பு இப்படி நிகழ்ந்ததில்லை.
பள்ளி சிறுமி: “மற்றவர்களிடம் இருந்து காப்பி அடிக்காதீர்கள்”.
ஆசிரியர்: “நல்லது. விதிகளை மீறும் போது தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் விதிகளுக்கு மதிப்புண்டு”.
ஜிம்: “காப்பி அடிப்பவர்களுக்கு மூன்று அடி”.
ஓ, மாணவர்கள் பிரம்பு அடி தண்டனை பெற்றார்கள். ஆசிரியர் கரும்பலகையில் எல்லா விதிகளையும் எழுதினார். சில வாரங்களுக்கு எல்லாம் நன்றாகச் சென்றது. ஒரு நாள் காலையில் ஆசிரியர் வகுப்பறைக்கு வந்தார். மிகவும் சோகமாக இருந்தார்.
ஆசிரியர்: “உங்கள் புத்தகங்களை மூடி வையுங்கள். ஒரு கெட்ட செய்தி. யாரோ ஒருவன் ஜிம்மின் மதிய உணவை திருடி, பள்ளியின் விதிகளை மீறியுள்ளான். தவறு செய்தவன் வந்து அதை அறிக்கை செய்வானா?”
ஒவ்வொருவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். முதல் வரிசையில் அமர்ந்திருந்த டாம் கலங்கினான். திக்கி, திக்கி பேசினான்.
டாம்: “நான் … நான் தான் அதைச் செய்தேன். எனக்கு … எனக்கு மிகவும் பசித்தது, எனவே எடுத்து சாப்பிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்”.
டாமின் பெற்றோர்கள் மிகவும் ஏழை. அவர்களுக்கு போதிய உணவு வசதி இல்லை. அவன் தண்டிக்கப்படுவதை யாரும் விரும்பவில்லை. ஆனால் ஆசிரியர் உறுதியாக இருந்தார்.
ஆசிரியர்: “விதிகளை நீங்கள் உருவாக்கினீர்கள். எனவே தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் ஒருவரும் விதிகளுக்கு கீழ்ப்படிய மாட்டார்கள். டாம், வகுப்பறைக்கு முன்பாக வா. திருடியதற்கு தண்டனை பத்து அடிகள்”.
ஆசிரியர் பிரம்பை கையில் எடுத்தார்.
ஜிம்: “நான் அவனை மன்னிக்கிறேன். அது என்னுடைய சாண்ட்விட்ச்”.
ஆசிரியர்: “ஜிம், மன்னிப்பது நல்ல குணம். ஆனால் தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும்”.
ஜிம்: “அப்படியானால் எனக்கு தண்டனை கொடுங்கள். அவனை விட்டுவிடுங்கள்”.
ஆசிரியர்: “சரி, பத்து அடிகள் என்று விதி கூறுகிறது. யார் அதைப் பெற வேண்டும் என்று அது சொல்லவில்லை”.
அப்போது தவறு செய்யாத ஒருவன் தண்டனை பெறுவதை அந்த வகுப்பறையில் இருக்கும் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள்.
இதுவே ஜிம் மற்றும் டாம் இவர்களின் நட்பின் துவக்கம் ஆகும்.
இயேசு இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரின் பாவங்களை தன் மீது ஏற்றுக்கொண்டதைக் குறித்து ஆசிரியர் பேசும் போது அனைவரும் கவனித்தார்கள்.
ஆசிரியர்: “இயேசு குற்றமற்றவர். நம்முடைய இடத்தில் அவர் தண்டிக்கப்பட்டார் என்பதைத் தான் பெரிய வெள்ளி நமக்கு நினைவுப்படுத்துகிறது. நாம் அனைவரும் இறைவனின் விதிகளை மீறி நடந்தோம். ஆனால் இயேசு நமக்காக தண்டிக்கப்பட்டார். அவர் சிலுவையில் மரித்தபோது, அந்த தண்டனையை தன் மீது ஏற்றுக்கொண்டார். அவரை விசுவாசிப்பவர்கள் அனைவரும் விடுதலை பெற்று, நித்திய வாழ்வைப் பெறுகிறார்கள். இயேசு மரித்தோரிலிருந்து எழும்பி, இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை ஈஸ்டர் நமக்கு உறுதிப்படுத்துகிறது”.
மக்கள்: உரையாளர், ஆசிரியர், பள்ளி சிறுமி, ஜிம், டாம்.
© Copyright: CEF Germany