STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 075 (Special binoculars)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

75. சிறப்பான பைனாகுலர்கள்


தீர்க்கதரிசி என்றால் யார் என்பது உனக்குத் தெரியுமா?

சாராள்: “இறைவன் தமது திட்டங்களை அவருக்கு கூறுகிறார்”.

அஸ்முஸ்: “அவரால் எதிர்காலத்தைப் பற்றி கூற முடியும்”.

இறைவனிடம் இருந்து சிறப்பான பைனாகுலர்களைப் பெற்றிருப்பவர் தான் தீர்க்கதரிசி என்று ஒருவர் கூறுகிறார். மற்றவர்கள் பார்க்க முடியாததை ஒருவர் பைனாகுலரை வைத்து காண இயலும்.

சகரியா எதிர்காலத்தைக் கண்டான். இறைவன் அவனுக்கு காண்பித்ததை எழுதி வைத்தான். இந்த வேத வசனத்தை வாசி:

சிறுமி: “எருசலேம் குமாரத்தியே, மகிழ்ந்து களிகூரு; இதோ உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும், இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேல் ஏறிவருகிறவராயிருக்கிறார்”.

இறைவன் என்ன முன்னுரைத்தாரோ, அது உண்மையாகவே நடந்தது. சகரியா முன்பாகக் கண்ட இந்தக் காரியம் 500 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.

இயேசு எருசலேமை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு சிறிய ஊருக்கு வந்தார். அவர் தமது சீஷர்களை தனக்கு முன்பாக அனுப்பினார்.

இயேசு: “அடுத்த ஊருக்கு செல்லுங்கள். அங்கே ஒரு கழுதையைக் காண்பீர்கள். அதை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்”.

சீஷன்: “யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் நாங்கள் அதை கொண்டு வருவதா?”

இயேசு: “யாராவது ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், அது எங்கள் ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்”.

சீஷன்: “நீங்கள் சொன்னபடியே செய்கிறோம்”. (சாலையில் நடக்கும் சத்தம்)

இரண்டு பேர்: ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியது போலவே, அவர்கள் கழுதையைக் கண்டு, அதன் கயிற்றை அவிழ்த்தார்கள்.

கழுதையின் சொந்தக்காரன்: “ஏய், நீங்கள் இருவரும் என்ன செய்கிறீர்கள்? அந்தக் கழுதை எனக்குச் சொந்தமானது”.

சீஷன்: “ஆண்டவருக்கு அது வேண்டும். அவர் எங்களை அனுப்பினார்”.

கழுதையின் சொந்தக்காரன்: “உங்கள் ஆண்டவரா? மிகவும் நல்லது. அதைக் கொண்டு செல்லுங்கள்”. (சாலையில் நடக்கும் சத்தம்)

சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். தங்கள் சால்வைகளை அதன் மேல் போட்டார்கள். இயேசு கழுதையின் மீது ஏறி பவனி வந்தார். மற்றவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியில் விரித்தார்கள். ஒலிவமரக்கிளைகளை அசைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள். அவர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள்.

மக்கள்: “எருசலேமே, களிகூரு, உனது ராஜா உன்னிடத்தில் வருகிறார்”.

மக்கள்: “ஓசன்னா! இறைவனிடத்தில் இருந்து வருகிற ராஜாவுக்கு ஓசன்னா”.

மக்கள்: “ஓசன்னா! நீரே எங்கள் ராஜா, எங்களுக்கு உதவும்”.

தங்களுக்கு அப்பம் கொடுக்கின்றவரும், ரோமர்களின் ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவிடுக்கின்றவருமாகிய ஒரு ராஜாவை அவர்கள் விரும்பினார்கள். ஆனால் இயேசு இந்த காரணங்களுக்காக வரவில்லை.

ஒரு வாரம் கழித்து அவர்கள் சத்தமாய் கூறினார்கள்.

மக்கள்: “எங்களுக்கு அவர் வேண்டாம், அவரை அகற்றுங்கள். அவரை சிலுவையில் அறையுங்கள்”.

அப்பத்தை மட்டுமல்ல அதைவிட அதிகமான ஒன்றை இயேசு தரவிரும்புவதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்களுடைய வாழ்வை, ராஜாவாகிய அவர் ஆளுகை செய்ய விரும்பினார். அவர் நம் வாழ்விலும் இதைச் செய்ய விரும்புகிறார். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன்.


மக்கள்: உரையாளர், சிறுமி, சிறுவன், இயேசு, சீஷர், கழுதையின் சொந்தக்காரன், மக்கள்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 11:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)