STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 025 (The saddest story)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

25. துக்ககரமான ஓர் கதை


யாருக்கு பிறந்த நாளே இல்லை என்பது உனக்குத் தெரியுமா?

ஆதாம் மற்றும் ஏவாள்! அவர்கள் பிறக்கவில்லை. இறைவன் அவர்களை உருவாக்கினார். ஆனாலும் அவர்கள் ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் சந்தோஷத்தை அனுபவித்தார்கள். அவர்கள் இறைவனுடன் வாழ்ந்தார்கள். அவருடன் பேசினார்கள். அவருடைய சத்தத்தைக் கேட்டார்கள். அங்கே சண்டை, வியாதிகள் அல்லது கவலைகள் இல்லை. இறைவன் அவர்களை அதிகமாக ஆசீர்வதித்து, இவ்விதம் கூறினார்.

இறைவன் கூறினார்: “தோட்டத்தின் எல்லா மரத்தின் கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நீங்கள் தோட்டத்தின் நடுவில் இருக்கிற மரத்தின் கனியை சாப்பிட வேண்டாம். நீங்கள் அதைப் புசித்தால் சாகவே சாவீர்கள்”.

இந்த ஒன்றைத் தவிர, எல்லாம் அவர்களுக்குச் சொந்தமானது. ஆதாமும், ஏவாளும் இறைவனை நேசித்தார்கள். அவருக்கு மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிந்தார்கள்.

இறைவனுடன் நெருங்கிய உறவில் இவர்கள் இருந்தது ஒருவனுக்கு பிடிக்கவில்லை. அவன் தான் சாத்தான். அவன் ஒரு தூதனாக இருந்தவன். அவன் பெருமை கொண்டு, இறைவனாகும் படி விரும்பினான். எனவே அவன் பரலோகில் இருந்து தள்ளப்பட்டான்.

சாத்தான்: “இறைவன் இந்த மரத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று உண்மையாகவே சொன்னாரா?“

ஏவாள்: “நாங்கள் எல்லா மரத்தின் கனியையும் புசிக்கலாம். இந்த மரத்தின் கனியை புசித்தால் சாவோம்“.

பிசாசு: “நீங்கள் சாவதில்லை“.

இறைவனின் எதிரி ஒரு பொய்யன். அவன் இறைவனுடைய வார்த்தையை திரித்து, சந்தேகங்களை விதைக்கிறான். இறைவனின் கட்டளையை தனது இருதயத்தில் ஏவாள் அறிந்திருந்தாள். ஆனால் அவள் சாத்தானுக்கு செவிகொடுத்தாள். சாத்தான் சோதனைக்காரன். அவள் அந்த மரத்தின் கனியைப் பார்த்தாள், எடுத்து புசித்தாள். அருகில் நின்றுகொண்டிருந்த ஆதாமுக்கும் கொடுத்தாள்.

கீழ்ப்படியாமை பாவம். பாவம் மிக மோசமான விளைவுகளைக் கொண்டு வருகிறது. எல்லாம் மாறிப்போனது.

இறைவன் கேட்டார்: “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?”

இறைவன் அழைத்த போது, அவர்கள் பயந்து, தங்களை ஒளித்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் மற்றொருவரை குற்றம் சாட்டினார்கள். பாவம் நம்மை மகிழ்ச்சியாய் இருக்கவிடாது. நீதியுள்ள இறைவனின் தண்டனை நிச்சயம் உண்டு. பாவத்தின் சம்பளம் மரணம். அதன் அர்த்தம் நாம் இறைவனை விட்டு என்றென்றும் பிரிக்கப்படுவதாகும். ஆதாமும், ஏவாளும் அந்த பரதீசை விட்டு வெளியேற வேண்டும்.

உலகத்தில் மோசமான காரியம் பிரவேசித்தது. பாவம் உலகத்தில் வந்தது. அந்த நேரம் முதல் ஒவ்வொரு நபரும் பாவியாக இருக்கிறார். ஆனால் இறைவன் அன்புள்ளவர். அவர் இரட்சகரை அனுப்புவதாக வாக்குப்பண்ணினார். இரட்சகர் நமது பாவத்தை எடுத்துப் போடுவார். நமக்கு ஒரு புதிய துவக்கத்தைத் தருவார்.

இந்த இரட்சகர் யார் என்பது குறித்து அடுத்த நாடகத்தில் காண்போம்.


மக்கள்: உரையாளர், சாத்தான், ஏவாள், இறைவனின் சத்தம்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)