Home -- Tamil -- Perform a PLAY -- 026 (A friend betrays Jesus)
26. ஒரு நண்பன் இயேசுவை காட்டிக் கொடுக்கிறான்
நண்பன் அல்லது எதிரி? நீ என்ன நினைக்கிறாய்?
மிக விரைவாக அவன் எருசலேமின் குறுகலான பாதையின் வழியே நடந்தான். கவலை நிறைந்தவனாக திரும்பிப் பார்த்தான். இறுதியில் பிரதான ஆசாரியனின் வீட்டை அடைந்தான். பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே திட்டங்கள் தீட்டப்பட்டன. இவர்கள் இயேசுவைக் கொலை செய்யும் படி விரும்பினார்கள். ஒருவன் கதவைத் திறந்தான். வாசலில் இயேசுவின் சீஷன் நிற்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.
ஒரு நண்பன் எதிரியிடம் சென்றான். – அப்படி என்றால் என்ன அர்த்தம்?
யூதாஸ்: “இயேசுவைக் கைது செய்யும்படி, அவர் இருக்கும் இடத்தைக் காண்பித்தால் எனக்கு என்ன தருவீர்கள்?“
ஒரு விதமான அமைதி அனைவரின் முகங்களிலும் காணப்பட்டது.
பிரதான ஆசாரியன்: “நாங்கள் உனக்கு 30 வெள்ளிக் காசு தருவோம்“.
உடனடியாக பேச்சு வார்த்தை முடிந்தது. யூதாஸ் தனக்குள் மகிழச்சி நிறைந்தவனாக, அந்த இடத்தை விட்டுச் சென்றான்.
மனச்சாட்சி: “யூதாஸ், நீ இயேசுவின் சீஷன். சொற்ப பணத்திற்காக நீ எவ்விதம் இயேசுவைக் காட்டிக் கொடுக்க இயலும்?”
அவனது மனச்சாட்சி மரத்துப்போய் காணப்பட்டது. மூன்று ஆண்டு காலமாக, அவன் நண்பனைப் போல வெளியில் காணப்பட்டான். ஆனால் அவனுடைய இருதயம் இயேசுவிற்கு தூரமாய் இருந்தது. இப்போது அவன் இயேசுவைக் காட்டிக் கொடுக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தான். ஆனால் இயேசு அனைத்தையும் அறிகின்றவர். அவர் ஒவ்வொரு நபரைக் குறித்தும் முழுமையாக அறிந்திருக்கிறார்.
இயேசு தான் மரிக்கப் போவதை அறிந்திருந்தார். கெத்சமனே தோட்டத்தில் அவர் விண்ணப்பம் பண்ணினார். அவர் மிகுந்த சத்தத்தோடு விண்ணப்பித்தார். யூதாசும், போர்ச் சேவகர்களும் தீவட்டிகள் மற்றும் பட்டயங்களுடன் வந்தார்கள்.
நண்பன் அல்லது எதிரி?
இயேசு ஒருமுறை கூறியிருந்தார். “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாய் இருக்கிறான்”.
முத்தம் என்பது நட்பின் அடையாளம். யூதாஸ் முத்தத்தினால் தனது ஆண்டவரை காட்டிக் கொடுத்தான். உடனடியாக போர்ச் சேவகர்கள் சூழ்ந்து இயேசுவை சிறைபிடித்தார்கள். அவர்கள் இயேசுவை மிகக் கொடூரமாக நடத்தினார்கள். அவரை அடித்தார்கள், வாரினால் அடித்தார்கள். அவர் முகத்தின் மீது துப்பினார்கள். பின்பு இந்த இயேசுவை நீதிபதி முன்பு நிறுத்தினார்கள். பொய்சாட்சிகளால் அவரை குற்றம் சாட்டினார்கள். ஆலய காவற்காரன் இவ்விதமாக கேட்டான்.
ஆலய காவற்காரன்: “உன் சார்பாக நீ எதுவும் பேசுவதற்கு இல்லையா?“
இயேசு அமைதி காத்தார். ஒன்றும் பேசவில்லை.
பிரதான ஆசாரியன்: “நீ இறைவனுடைய குமாரனா? எங்களுக்கு இப்போது சொல்”.
இயேசு: “நான் அவர் தான்”.
மக்கள்: “இல்லை, ஒரு போதும் இல்லை”.
மக்கள்: “நாங்கள் அவரை நம்ப மாட்டோம்”.
மக்கள்: “அவன் மரணத்திற்கு பாத்திரன்”.
மக்கள்: “இவனை அகற்றுங்கள்”.
மக்கள்: “அவன் சாக வேண்டும்”.
அவர்கள் அவரை நம்புவதற்கு ஆயத்தமாய் இல்லை. பிறகு?
அடுத்த நாடகத்தில் இதன் தொடர்ச்சியைக் காண்போம்.
மக்கள்: உரையாளர், (&மனச்சாட்சி), யூதாஸ், பிரதான ஆசாரியன், ஆலய காவற்காரன், இயேசு, மக்கள்.
© Copyright: CEF Germany