Home -- Tamil -- Perform a PLAY -- 027 (Jesus dies on the cross)
27. இயேசு சிலுவையில் மரித்தார்
சிறுவன்: “இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்தது மிக துக்கரமான காரியம் என்று நான் எண்ணுகிறேன்”.
சிறுவன்: “ஏன் இயேசு அவர்களுடன் போரிடவில்லை? அவர் தன்னை காப்பாற்றியிருக்க முடியும்”.
ஆனால் அவர் அதைச் செய்யவில்லை.
சிறுவன்: “என்னால் இதைப் புரிந்துகொள்ள இயலவில்லை”.
இறைவனுடைய குமாரன் இந்த உலகில் நமது பாவங்களுக்காக மரிக்கும்படி வந்தார். கீழ்ப்படியாமையினாலும், பாவத்தினாலும் ஒவ்வொரு நபரும் இறைவனை விட்டுப் பிரிந்துள்ளார்கள். பாவத்தின் சம்பளம் மரணம். இயேசு இந்த மரணத்தை தன் மீது ஏற்றுக்கொண்டார். இறைவனுடன் மறுபடியும் நம்மை ஒப்புரவாக்க இப்படி செய்தார்.
சிறுவன்: “ஓ! இப்போது எனக்குப் புரிகின்றது”.
இறுதி முடிவு நீதிபதியால் எடுக்கப்பட்டது. எகிப்திலிருந்து மக்கள் விடுதலையானதை கொண்டாடும் பண்டிகையின் சமயத்தில், நீதிபதி ஒரு சிறைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம்.
பிலாத்து: “நான் இந்த ஆண்டு யாரை விடுதலை செய்ய வேண்டும்? இயேசுவையா? அல்லது பரபாசையா?”
உண்மையில் பிலாத்து பராபாஸிற்கு பதிலாக இயேசுவை விடுவிக்க விரும்பினான். எனவே மீண்டும் மக்களிடம் கேட்டான்.
பிலாத்து: “பரபாசையா அல்லது இயேசுவையா? யாரை விடுதலை செய்ய வேண்டும்?”
மக்கள்: “பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யுங்கள்”.
பிலாத்து: “இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?”
மக்கள்: “அவனை சிலுவையிலறையும்! சிலுவையிலறையும்!”
இறைவனின் குமாரன் பாரமான சிலுவையை, இரத்தம் சிந்தும் தனது முதுகின் மீது சுமந்து, கொல்கதா மலையை நோக்கி, நமக்குப் பதிலாக மரிக்கும்படி சென்றார். அவர் மரண தண்டனையை தன் மீது ஏற்றுக்கொண்டார். நியாயப்படி நாம் தண்டிக்கப்பட வேண்டும். இயேசு ஆறு மணி நேரங்கள் சிலுவையில் தொங்கினார். அவர் மரிக்கும் முன்பு முழு உலகிற்கும் முக்கியமான வார்த்தையை கூறினார்.
இயேசு: “முடிந்தது”.
பின்பு அவர் கண்களை மூடினார். முழு உலகின் பாவங்களுக்காக மரித்தார்.
இயேசுவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் இறைவனுடன் ஐக்கியம் பெறுகிறார்கள். மேலும் நிலை வாழ்வை அடைகிறார்கள். நீ அதை நம்புகிறாயா?
இறைவனின் குமாரன் மரித்த போது, மத்தியான வேளையில் வானம் இருண்டது. பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. நூற்றுக்கு அதிபதி கூறினான்.
நூற்றுக்கு அதிபதி: “இவர் மெய்யாகவே இறைவனுடைய குமாரன்”.
அன்று மாலையில், இயேசுவின் சரீரம் ஒரு கல்லறையில் வைக்கப்பட்டது. அவர் அங்கேயே இல்லை. ஒரு சிறப்பான காரியம் நடைபெற்றது! அதைக் குறித்து அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், (&மனச்சாட்சி), யூதாஸ், பிரதான ஆசாரியன், ஆலய காவற்காரன், இயேசு, மக்கள்.
© Copyright: CEF Germany