Home -- Tamil -- Perform a PLAY -- 028 (The very first Easter)
28. முதலாவது ஈஸ்டர் அதிகாலை
நீங்கள் இன்று காலையில் எப்போது எழுந்தீர்கள்?
மரியாளும், அவளுடைய தோழிகளும் அதிகாலையில் எழுந்தார்கள். அவர்கள் இருதயங்கள் கவலையினால் நிறைந்திருந்தது. இயேசு உயிருடன் இல்லை என்று எண்ணினார்கள். இயேசு சிலுவையில் மரித்திருந்தார். அவர்கள் அதை நினைத்து, நினைத்து அழுதார்கள். அதிகாலை நேரத்தில் அவர்கள் கல்லறைக்கு சென்றார்கள்.
தோழி: “மரியாள். அங்கு பார்! கல் உருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஒரு தூதன் இருக்கிறான்”.
தூதன்: “பயப்படாதேயுங்கள்! நீங்கள் இயேசுவை தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்!”
நம்பிக்கை துளிர்த்தது! அவர் மரிப்பார். மூன்று நாளைக்குப் பின்பு உயிரோடெழுந்திருப்பார் என்று, ஏற்கெனவே இயேசுவும் கூறியிருந்தார். ஆனால் அவர்கள் அதை மறந்துவிட்டார்கள்.
தூதன்: “இங்கு வந்து, அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். அந்தப் பெண் கல்லறைக்குள் பார்த்தாள். அது வெறுமையாய் இருந்தது!”
தூதன்: “போய் சீஷர்களுக்கு இதை சொல்லுங்கள்!”
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும், வியப்புடனும் கல்லறையை விட்டுச் சென்றார்கள். இயேசு உயிருடன் இருக்கிறார். அவர்கள் போகும் வழியில் அவரை சந்தித்தார்கள். அவரைக் கண்டார்கள். அவரை தொட்டார்கள். அவர் அவர்களுடன் பேசினார்.
இயேசு: “பயப்படாதேயுங்கள். போய் மற்றவர்களுக்கும் இதைச் சொல்லுங்கள்!”
அவர்கள் அப்படியே செய்தார்கள்.
மரியாள்: “இயேசு உயிருடன் இருக்கிறார்!”
தோழி: “அவர் உயிர்த்தெழுந்தார்!”
மரியாள் & தோழி: “கல்லறை வெறுமையாய் உள்ளது!”
(இந்த வசனத்தை வாசிக்கும் போது பின்னணி இசை இசைக்க வேண்டும்)
வேதாகமத்தில் இயேசு கூறுகிறார். “நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் நீ இதை நம்புகிறாயா?” (யோவான் 11:25,26)
உங்கள் அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்! “ஆண்டவர் உயிர்த்தெழுந்தார்! அவர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்!”
மக்கள்: உரையாளர், மரியாள், மரியாளின் தோழி, தூதன், இயேசு.
© Copyright: CEF Germany