Home -- Tamil -- Perform a PLAY -- 029 (Behind closed doors)
29. பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே
சீஷன்: “யோவான் கதவைப் பூட்டு. நான் அவர்களை நம்ப மாட்டேன். அவர்கள் இயேசுவைக் கொன்று விட்டார்கள்”. (கதவைப் பூட்டும் சத்தம்)
சோர்வுற்ற இருதயத்துடன் சீஷர்கள் பூட்டப்பட்ட கதவுகளின் பின்னே அமர்ந்தார்கள். இயேசு உயிர்த்தெழுவார் என்று அவர்கள் அறியவில்லையா? மரியாள் கூட இயேசு உயிர்த்தெழுந்ததைக் கூறியிருந்தாள்.
(தட்டுதல்)
முதல் எம்மாவு சீஷன்: “நாங்கள் வந்திருக்கிறோம்!”
2-ம் எம்மாவு சீஷன்: “கதவைத் திறவுங்கள்”.
சீஷன்: “கிலேயாப்பா, நீ ஏன் வீட்டிற்கு வரவில்லை?”
முதல் எம்மாவு சீஷன்: “நாங்கள் இயேசுவுடன் பேசினோம். அவர் உயிருடன் இருக்கிறார்”.
சீஷன்: “நீங்கள் எங்கு அவரைக் கண்டீர்கள். எல்லாவற்றையும் சொல்லுங்கள்”.
2-ம் எம்மாவு சீஷன்: “முதலில் நாங்கள் அவரை அறியவில்லை”.
முதல் எம்மாவு சீஷன்: “நாங்கள் பேசிக் கொண்டே நடந்து சென்றோம். திடீரென்று ஒருவர் எங்களுடன் இணைந்து, எங்கள் உரையாடலில் பங்கு பெற்றார்”.
2-ம் எம்மாவு சீஷன்: “நாங்கள் என்ன பேசினோம் என்று எங்களிடம் கேட்டார். நான் கூறினேன்: எருசலேமில் நடந்தவைகளைக் குறித்து உமக்குத் தெரியாதா? இயேசு சிலுவையிலறையப்பட்டார்? இவைகள் இப்படி நடக்கும் என்று இறைவன் முன்பே தீர்மானித்திருந்தார் என்பதை அவர் எங்களுக்கு விளக்கிக் காண்பித்தார்”.
முதல் எம்மாவு சீஷன்: “அவர் வேதாகம வசனங்களை தெளிவாக விளக்கிக் காண்பித்தார். எங்கள் உரையாடல் தொடர்ந்தது. நேரம் கடந்தது. நாங்கள் ஊரை அடைந்த போது இருட்டாகியிருந்தது”.
2-ம் எம்மாவு சீஷன்: “நாங்கள் அவரை இரவு உணவுக்கு அழைத்தோம். அப்போது அக் காரியம் நிகழ்ந்தது. அவர் அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு விண்ணப்பம் பண்ணி, எங்களுக்கு கொடுத்தார். அப்போது நாங்கள் அவரை அறிந்து கொண்டோம். இயேசு! நாங்கள் அதை அறிந்த போது, அவர் மறைந்துவிட்டார். எங்கள் கண்களுக்கு முன்பாக அது நிகழ்ந்தது. அவர் அங்கு இல்லை”.
1-ம் எம்மாவு சீஷன்: “இது உண்மை. நாங்கள் இயேசுவுடன் பேசினோம். பின்பு நாங்கள் விரைவாக ஓடி வந்து உங்களிடம் அறிவிக்கிறோம். அவர் உயிருடன் இருக்கிறார்”.
மக்கள் இயேசுவை சந்திக்கும் போது, அவர்களால் அதை அடக்கி வைக்க இயலாது. அவர்கள் மற்றவர்களுக்கு அதைக் கூறுவார்கள். அந்த இரண்டு பேரும் என்ன நிகழ்ந்தது என்பதை கூறிக் கொண்டிருக்கும் போது, அந்த அறையில் இயேசு தோன்றினார். அவர் தனது கைகளையும், கால்களையும் காண்பித்தார்.
இயேசு: “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ! நான் தான்!”
இதன் பின்பு, சீஷர்கள் விசுவாசித்தார்கள். இயேசுவைக் குறித்து கேள்விப்படுவது நல்லது. இயேசுவை சந்திக்கும் போது எல்லா சந்தேகங்களும் நீங்கும். அவர் மகிழ்ச்சியைத் தருவார். மாலாவும், சாராளும் எவ்விதம் இயேசுவை சந்தித்தார்கள் என்பதை நமக்கு அடுத்த நாடகத்தில் கூறுவார்கள்.
மக்கள்: உரையாளர், சீஷன், 2 எம்மாவு சீஷர்கள், இயேசு.
© Copyright: CEF Germany