Home -- Tamil -- Perform a PLAY -- 030 (Meeting Jesus )
30. இயேசுவை சந்தித்தார்கள்
2000 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்து, இயேசுவை சந்தித்தால் எப்படியிருக்கும் என்று எண்ணியதுண்டா?
மாலா. உனது அனுபவம் எப்படி இருந்தது? நீ எப்போது இயேசுவை சந்தித்தாய்?
மாலா: “எனது வீட்டில் என் அம்மா சிறுவர் நிகழ்ச்சியில் கற்றுக் கொடுத்தார். எவ்விதம் ஒருவர் இயேசுவின் மூலம் பரலோகம் சென்றடைய முடியும் என்று பேசினார். இயேசு நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார். ஏனெனில் அவர் நமக்காக மரித்தார். அப்போது நான் நினைத்தேன். ஒரு பாவமும் செய்யாத ஒருவர் நமக்காக அற்புதமான காரியத்தை செய்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார். எனவே என் இருதயத்திற்குள் வரும்படி அவரை அழைக்கத் தீர்மானித்தேன்”.
நீ அதை எப்படி செய்தாய்?
மாலா: “நான் விண்ணப்பம் பண்ணினேன்”.
அதன் பின்பு என்ன நிகழ்ந்தது?
மாலா: “என்னைக் குறித்து எல்லாவற்றையும் அவருக்கு சொன்னேன். அவருடைய உதவிக்காக நன்றி செலுத்தினேன். அவர் என்னை புதிய நபராக மாற்றினார். நான் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒருவரை அறிந்துகொண்டேன். அவர் ஒரு போதும் என்னை ஏமாற்ற மாட்டார்”.
சாராள்: நீயும் இயேசுவை சந்தித்திருக்கிறாய்? அதைக் குறித்து எங்களுக்கு சொல்.
சாராள்: “எனக்கு பிடித்த ஒரு பாடல் உண்டு. (பின்னணியில் இசை)
பணக்காரன் ஒருவனுமில்லை, ஏழை ஒருவனுமில்லை, பெரியவன் இல்லை, சிறியவன் இல்லை, எளியவன் ஒருவனுமில்லை, சிறந்தவன் ஒருவனுமில்லை. அவருடைய அன்பு அனைவருக்கும் உண்டு. இறைவன் ஒவ்வொருவருக்கும் கதவைத் திறக்கிறார் – அவரை தேடுகிற அனைவருக்கும். அவர் நமது பாவத்தை சுமக்கிறார். தமது அன்பைத் தருகிறார். தமது வார்த்தையை நிறைவேற்றுகிறார்.
அந்தப் பாடலை பாடிய போது, அது எனக்கும் உண்மை என்பதை உணர்ந்தேன். அன்று மாலை எனது அம்மாவுடன் இதைக் குறித்துப் பேசினேன். நான் அம்மாவுடன் இணைந்து விண்ணப்பம் பண்ணினேன். இவ்விதமாக நான் இயேசுவை சந்தித்தேன். எனது வாழ்வில் வளரும்படி அழைத்தேன். எனது தோளில் இருந்து பெரிய சுமை இறங்கியதைப் போல் உணர்ந்தேன். நான் விடுதலையை உணர்ந்தேன். இயேசுவை சந்திப்பது அருமையானது. அது மேன்மையானது”.
நீ இயேசுவை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவர் உன்னை நேசிக்கிறார். அவர் கூறுகிறார். “என்னிடத்தில் வருகிறவனை நான் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை”. (யோவா; 6:37) மாலா செய்ததைப் போல ஏன் நீயும் செய்யக் கூடாது. உனது பாவங்களை அவரிடம் அறிக்கையிடு. சாராள் செய்ததைப் போல, உனது வாழ்வில் வளரும்படி அவரிடம் கேளுங்கள். இயேசு விண்ணப்பங்களுக்கு பதில் தருகிறார். நீ இறைவனுடைய பிள்ளையாக மாறுவாய்.
மக்கள்: உரையாளர், மாலா, சாராள்.
© Copyright: CEF Germany