Home -- Tamil? -- Perform a PLAY -- 102 (Out in the open 2)
102. திறந்தவெளி 2
அந்தக் குழந்தை இப்போதும் உயிருடன் இருப்பது இறைவனின் அற்புதச் செயல் ஆகும். இஸ்ரேலிய ஆண் குழந்தைகள் அனைத்தையும் நைல் நதியில் எறியும்படி பார்வோன் கட்டளையிட்டிருந்தான். இளவரசியான அவனது மகள் நைல் நதியில் நாணற்பெட்டியில் ஒரு குழந்தையைக் கண்டபோது, அதன் மீது இரக்கப்பட்டாள். அந்தக் குழந்தையின் தாயே அவனை சில ஆண்டுகள் வளர்த்து வந்தாள்.
மோசே (குழந்தை): “அம்மா! நான் ஏன் உங்களிடம் தங்க முடியாது? நீங்களும் என்னுடன் வருகிறீர்களா?”
அம்மா: “என் பிரியமே! என்னால் முடியாது. ஆனாலும் எல்லா நேரத்திலும் நான் உன்னைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருப்பேன்”.
மோசே (குழந்தை): “நான் உங்களிடமே இருந்து விடுகிறேன்”.
ஆனாலும் பின்பு அவர்கள் பிரிந்தார்கள். அந்த இளவரசி இந்த தத்தெடுக்கப்பட்ட பையனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே சிறப்பான கல்விச்சாலைகளில் படித்தான். அவன் எல்லாவற்றிலும் கைதேர்ந்தவனாக மாறினான். மோசே ஒரு செல்வந்த மனிதனாக மாறினான்.
ஆனாலும் தான் இறைவனின் மக்களைச் சேர்ந்தவன் என்பதை தன்னுடைய இருதயத்தில் அவன் ஒருபோதும் மறக்கவில்லை. அவனுடைய மக்கள் 300 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் அடிமைகளாக இருந்தார்கள்.
மோசே: “நான் ராஜாவின் மகன். நான் விரும்பிய அனைத்தும் எனக்கு கிடைக்கிறது. நான் செல்வந்தன். ஆனால் அவைகள் எனக்கு என்ன நன்மையைத் தருகின்றன? எனது மக்களுக்கு நான் உதவ வேண்டுமென்று என்னுடைய இருதயத்தில் உணர்கிறேன். அவன் இறைவனுக்காக எல்லாவற்றையும் துறந்தான். அவன் புகழை விரும்பவில்லை”.
இளவரசனாக இருப்பதை விட அடிமையுடன் தன்னை அடையாளப்படுத்தவே விரும்பினான்.
மோசே அரண்மனையை விட்டு வெளியேறினான். ஒரு எகிப்தியன் இஸ்ரேலியனை அடிப்பதைக் கண்டான். மோசே சுற்றிலும் பார்த்தான். தன்னை ஒருவரும் கவனிக்கவில்லையென்பதை அறிந்துகொண்டான். பின்பு எகிப்தியனை அடித்து கொன்றுபோட்டான். வனாந்தரத்தில் அவனை புதைத்தான். தனது மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க மோசையைப் பயன்படுத்தும்படி இறைவன் விரும்பினார். ஆனால் இது வழிமுறை அல்ல. மோசே செய்த காரியம் வெளிப்பட்டது. பார்வோன் இதைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொல்ல நினைத்தான். எனவே மோசே தூர தேசத்திற்கு ஓடிப்போனான். இது தான் மோசேயின் முடிவா? மோசேயைப் போன்ற ஒரு கொலைகாரனை இறைவன் பயன்படுத்துவாரா?
(ஆடு மேய்க்கும் சத்தம்) மோசே 40 ஆண்டுகளாக இன்னொரு மனிதனின் ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, சிந்திப்பதற்கு அதிகமான நேரம் அவனுக்குக் கிடைத்தது.
அவன் இறைவனை மறக்கவில்லை. இறைவனும் அவனை மறக்கவில்லை. திடீரென்று மோசே திகைத்து நின்றான்.
மோசே: “முட்செடி எரிகின்றது. ஆனால் அவிந்து போகவில்லை. எப்படி இது சாத்தியம்? ஆச்சரியமாக இருக்கின்றதே!”
எரியும் முட்செடியைக் குறித்த இரகசியத்தை அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், மோசே(குழந்தை), அம்மா, மோசே.
© Copyright: CEF Germany