Home -- Tamil? -- Perform a PLAY -- 086 (Prayer prohibited 4)
86. விண்ணப்பம் மறுக்கப்படுகிறது 4
தானியேலின் மீது குற்றம் சுமத்தும்படி ராஜாவின் அதிபதிகள் விரும்பினார்கள்.
அதிபதி 1: “நடந்தது என்ன என்பது உனக்குத் தெரியுமா?”
அதிபதி 2: “ஆமாம்! தெரியும். ராஜ்ஜியத்தின் இரண்டாவது அதிகாரமிக்க மனிதனாக தானியேல் இருக்கிறான். நாம் அவனை எப்படியாவது வீழ்த்த வேண்டும்”.
அதிபதி 1: “அது அவ்வளவு எளிதல்ல”.
அதிபதி 2: “அவனுடைய மதம் சம்பந்தப்பட்ட காரியத்தில் தான் அவனை குற்றம் சுமத்த முடியும். அவன் தினமும் மூன்று முறை இறைவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறான். நாம் அதற்கு எதிராக ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி, ராஜாவினிடத்தில் அதைக் கொண்டு வருவோம்”.
தானியேல் இவர்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. இறைவன் அவனை அந்த நாட்டின் உயர்ந்த பதவிக்கு கொண்டு வந்தார். இது தான் மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது.
அதிபதி 1: “இப்போது உடனடியாக ராஜாவிடம் போவோம். அவரிடம் இந்த புதிய சட்டத்தில் கையெழுத்து வாங்க வேண்டும்”.
அதிபதி 2: “தரியு ராஜாவே, நீர் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும். அடுத்த 30 நாட்கள் தேசத்தில் உள்ள எந்த ஒரு மனிதனும் உம்மைத் தவிர வேறு தெய்வங்களை வழிபடக் கூடாது. அப்படி மீறி நடந்தால் அவர்கள் சிங்கத்தின் குகையில் போடப்பட வேண்டும். இந்த சட்டத்தை ஒருவரும் மாற்ற இயலாதபடி அதில் உமது முத்திரையை இட வேண்டும்”.
புதிய சட்டத்திற்கு பின்பாக உள்ள தீயதிட்டத்தை அந்த ராஜா காணவில்லை. தானியேலின் வாழ்வில் இறைவன் எப்போதும் முதல் இடத்தை வகித்தார். எந்த ஒரு சட்டமும் அவனை மாற்றவில்லை. அவன் தொடர்ந்து விண்ணப்பம் பண்ணுகிறவனாக இருந்தான். அவனுடைய எதிரிகள் இதை கவனித்துப் பார்த்தார்கள்.
அதிபதி 1: “தரியு ராஜாவே, எந்த ஒரு மனிதனும் உம்மைத் தவிர வேறு யாரையும் நோக்கி வேண்டுதல் செய்யக் கூடாது என்று புதிய சட்டத்தை நீர் இயற்றியுள்ளீர்”.
ராஜா: “ஆமாம், அது உண்மை தான்”.
அதிபதி 2: “தானியேல் இப்போதும் தனது இறைவனை நோக்கி மூன்று முறை வேண்டுதல் செய்கிறான். நாங்கள் அதைக் கண்டோம். அவனை சிங்கக் குகையில் உணவாகப் போட வேண்டும்”.
ராஜா: “தானியேல்?”
ராஜா தானியேலை நேசித்தார். அவனை பாதுகாக்க விரும்பினார். ஆனால் சட்டம் இயற்றியதை மாற்ற முடியாது.
ராஜா: “தானியேல், உனது இறைவன் உனக்கு உதவி செய்வாராக”.
பின்பு தானியேல் சிங்கத்தின் குகையில் போடப்பட்டான். அன்று இரவு ராஜாவால் சரியாக தூங்க முடியவில்லை. அடுத்த நாள் காலை, அவர் சிங்கக்குகையை நோக்கி விரைந்து சென்றார்.
ராஜா: “தானியேல், உனது இறைவன் உன்னைப் பாதுகாத்தாரா?”
தானியேல்: “ராஜாவே, நீர் என்றென்றும் வாழ்க. எனது இறைவன் தமது தூதர்களை அனுப்பு சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். அவைகள் என்னை சேதப்படுத்தவில்லை”.
தானியேல் உயிரோடிப்பதை அறிந்த ராஜா மிகவும் சந்தோஷப்பட்டான். அவனை குகையிலிருந்து வெளியே கொண்டு வரும்படி கட்டளையிட்டான். தானியேலுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. இது இறைவனின் அற்புதம், தானியேலின் எதிரிகள் சிங்கக்குகையில் போடப்பட்டார்கள்.
ராஜா: “எனது அரசாட்சி முழுவதிலும் அனைத்து மனிதர்களும் தானியேலின் இறைவனை கனப்படுத்த வேண்டும். அவர் உயிருள்ள இறைவன். அவரே காப்பாற்றுகிறவர், உதவுகிறவர்”.
தானியேலின் விசுவாசம் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. உயிருள்ள இறைவன் அவனது விசுவாசத்தை கனப்படுத்தினார். அவர் மீது நம்பிக்கை வைப்போம்.
மக்கள்: உரையாளர், இரண்டு அதிபதிகள், ராஜா, தானியேல்.
© Copyright: CEF Germany