Home -- Tamil -- Perform a PLAY -- 003 (Pig slop or banquet dining)
3. பன்றி சேறு அல்லது விருந்து உணவு
ஜன்னல் அருகே சஞ்சலத்துடன் அப்பா நின்று கொண்டிருந்தார். சில நாட்கள் முன்பு அவருடைய இளைய மகன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டான். அவன் தனது சொத்து, பணத்தை எடுத்துச் சென்றான். அவன் ஒரு முறை கூட திரும்பி வரவில்லை.
அப்பா அவனை நேசித்தார். அவரது மகன் எங்கே? அவன் எப்படி இருக்கிறான்?
அவன் நன்றாகத் தான் இருந்தான். அவனுடைய கையில் அதிகமான பணம் இருந்தது. நண்பர்கள் நிறைய இருந்தார்கள். அவன் விருந்துண்டு மகிழ்ந்தான். குடி, கும்மாளம் என்று அநேக தவறுகளைச் செய்தான். அவன் கூட்டத்தோடு கூட்டமாகச் சென்றான். விரைவில் அவனுடைய பணம் தீர்ந்தது. நண்பர்கள் விலகினார்கள்.
வேலை இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சினை. கடைசியாக ஒரு விவசாயிடம் வேலைக்குச் சேர்ந்தான். பன்றியை மேய்க்கின்ற வேலை தான் கிடைத்தது. அவனுக்கு பசி எடுத்தது. பன்றி உண்ணும் தவிட்டை சாப்பிட நினைத்தான். அதற்கு கூட அவன் அனுமதிக்கப்படவில்லை. துர்நாற்றம் கொண்ட பன்றிகள் மத்தியில் பசியுடனும், கிழிந்த ஆடைகளுடனும் அவன் அமர்ந்திருந்தான்.
அவனது அப்பா அவனை நேசித்தார். அவன் அதை நினைத்துப் பார்த்தான்? திடீரென்று அவன் எழுந்தான். அவன் தீர்மானித்துக் கூறினான்.
மகன்: “நான் வீட்டிற்கு சென்று எனது அப்பாவிடம் கூறுவேன். என் சொந்த வழியில் சென்று, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன், என்னை மன்னியுங்கள்”.
அவன் உண்மையாகவே தனது அப்பாவிடம் இதை அறிக்கையிட விரும்பினான்.
இதை கற்பனை செய்து பாருங்கள்: மகன் தூரமாக வந்த போது, அப்பா தனது வீட்டில் இருந்து கண்டார். தனது மகனை அவர் நேசித்தார். ஓடிப்போய் அவனை சந்தித்தார். மகன் ஒரு வார்த்தை சொல்லும் முன்பாகவே, அப்பா தனது கரங்களால் அவனை கட்டி அணைத்து, முத்தம் செய்தார். சந்தோஷத்தின் மிகுதியால், தனது வேலைக்காரர்களை அழைத்து இவ்விதம் கூறினார்.
அப்பா: “சீக்கிரம்! புதிய ஆடைகளை கொண்டு வாருங்கள். மோதிரங்கள், காலணிகளை கொண்டு வாருங்கள். விருந்தை ஆயத்தம் பண்ணுங்கள். என் மகன் மரித்தான். இப்போது உயிரோடிருக்கிறான். அவன் தொலைந்து போனான். இப்போது கண்டுகொண்டேன். அவன் என்னிடம் திரும்பி வந்துவிட்டான்!”
இந்த அப்பா தனது மகனை நேசித்தது போல, இறைவனும் உன்னையும், என்னையும் நேசிக்கிறார். நாம் அவரிடம் வந்து, அவருடன் வாழும்படி விரும்புகிறார். எனவே தான் இயேசு இக்கதையைக் கூறினார்.
இறைவனுடைய அன்பைக் குறித்தும், அவரிடம் எப்படி வருவது என்றும் நீ அறிய விரும்புகிறாயா? அப்படியெனில் எனக்கு எழுதுங்கள்.
மக்கள்: உரையாளர், மகன், அப்பா.
© Copyright: CEF Germany