STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 004 (Prayers can cause miracles)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

4. விண்ணப்பம் அற்புதங்களுக்கு காரணமாக உள்ளது


தெருக்கள் புழுதியாய் இருந்தன. வானத்தில் வெயில் கடுமையாக சுட்டெரித்தது. சாலை ஓரத்தில் ஒரு பிச்சைக்காரன் அமர்ந்திருந்தான். அவன் காலடி சத்தம் கேட்கும் போதெல்லாம், தனது கைகளை நீட்டி பிச்சை கேட்பான்.

பர்திமேயு: “உதவி, உதவி, எனக்கு காசு தாருங்கள்”.

சிலர் பர்திமேயுவை பார்த்து இரக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் அந்தத் தெருவில் எரிகோப் பட்டணத்து மக்கள் அனைவரும் இருந்ததைப் போல் காணப்பட்டது.

பர்திமேயு: “என்ன நடக்கிறது இங்கு?”

ஒரு மனிதன்: “இறைவனின் மகனாகிய இயேசு இந்த வழியே வருகிறார். அவர் அனைவரையும் நேசிக்கிறார். நோயாளிகளைக் குணமாக்குகிறார். மரித்தோரைக் கூட உயிருடன் எழுப்புகிறார்”.

பார்வையற்ற பர்திமேயுவிற்கு நம்பிக்கை பிறந்தது. அவன் கூப்பிடும்போது இயேசு கேட்பாரா? தன்னால் பார்க்க முடியாத ஒருவரை தனது முழுப் பலத்தோடும் உரத்த சத்தமாய் கூப்பிட்டான்.

பர்திமேயு: “இயேசுவே, எனக்கு உதவும். என் மேல் இரக்கமாயிரும்”.

இதைக் கேட்ட சிலர் எரிச்சல் அடைந்து, பார்வையற்ற மனிதனைத் திட்டினார்கள்.

ஒரு மனுஷன்: “சத்தம் போடாதே, வேறு எங்காவது போ, இல்லையென்றால் …”

இயேசுவைக் கூப்பிடுவதை தடை செய்ய முடியுமா? முடியாது. பர்திமேயு எதையும் கவனிக்கவில்லை. அவன் இன்னும் அதிக சத்தமாய் கூப்பிட்டான்.

பர்திமேயு: “ஆண்டவராகிய இயேசுவே, தயவு செய்து எனக்கு உதவும்!”

இயேசு ஒவ்வொருவரின் சத்தத்தையும் கேட்கிறார். அவர் உனது விண்ணப்பத்தையும் கேட்கிறார். வேதாகமம் கூறுகிறது. இயேசு நின்று கட்டளையிட்டார்:

இயேசு: “அந்த பார்வையிழந்த மனிதனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள்”.

பர்திமேயு இப்போது இறைவனின் மகன் முன்பு நிற்கிறான். அவரைக் காண இயலவில்லை. ஆனாலும் அவன் அமைதி, பாதுகாப்பை அவருடைய பிரசன்னத்தில் உணர்ந்தான். அவன் இயேசுவின் சிநேகமுள்ள சத்தத்தைக் கேட்டான்.

இயேசு: “பர்திமேயுவை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?”

பர்திமேயு நீண்ட நேரம் எதுவும் யோசிக்கவில்லை. அவனுடைய மிகப்பெரிய தேவை, அவனது விண்ணப்பமாக மாறியது.

பர்திமேயு: “ஆண்டவரே, நான் மறுபடியும் பார்க்க விரும்புகிறேன்”.

இயேசு அவனது விருப்பத்தை கேட்டார்.

இயேசு: “பார்வையடைவாயாக! நீ என்னில் விசுவாசம் வைத்த படியினால், நான் உன்னை குணமாக்குகிறேன்”.

உடனே பர்திமேயு பார்வையடைந்தான். தனது விண்ணப்பத்தைக் கேட்டு பதிலளித்தவரை, அவனது கண்கள் கண்டன. அவன் இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அதிக சந்தோஷத்துடன் இருந்தான். இயேசுவை முழு இருதயத்தோடும் பின்பற்றினான்.

வேதாகமத்தில் இறைவன் உன்னிடம் கூறுகிறார். “ஆபத்தில் காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை கனப்படுத்துவாய்”.


மக்கள்: உரையாளர், பர்திமேயு, சீஷர்கள், இயேசு.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 02:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)