Home -- Tamil -- Perform a PLAY -- 005 (God loves you)
5. இறைவன் உன்னை நேசிக்கிறார்
இதைக் கவனிக்கும் உங்களை வருக! வருக! என்று வரவேற்கிறோம்.
நீ இன்று மகிழ்ச்சியுடன் உள்ளாயா? அல்லது துக்கமாய் காணப்படுகிறாயா? நீ தனிமை அல்லது பயத்தை உணர்கிறாயா? நீ ஆரோக்கியம் அல்லது வியாதியுடன் இருக்கிறாயா? நீ எப்படி இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் ஒரு அற்புதமான காரியத்தை நான் உனக்கு சொல்ல விரும்புகிறேன். இறைவன் உன்னை நேசிக்கிறார். நீ இருக்கும் வண்ணமாக, அவர் உன்னை நேசிக்கிறார். உயிருள்ள இறைவன் வானங்களையும், பூமியையும் படைத்த போது உன்னைக் குறித்து மகிழ்ந்திருந்தார்.
(இறைவனின் அன்பைக் குறித்த ஒரு பாடலை இங்கு சேர்க்கவும், அல்லது பின்னணி இசையுடன் ஒரு சிறுவன் அல்லது சிறுமியை அதை சத்தமாக வாசிக்கவும்)
பாடல்:
அனைவரும் அவர் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள்.
இயேசு உலகின் சிறு பிள்ளைகளை நேசிக்கிறார்.
சிவப்பு, மஞ்சள், கருப்பு, வெள்ளை,
அனைவரும் அவர் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்.
இயேசு உலகின் சிறு பிள்ளைகளுக்காக மரித்தார்.
இறைவன் உலகில் உள்ள அனைவரையும் நேசிக்கிறார். வாலிபர்கள், சிறுபிள்ளைகளை நேசிக்கிறார். எனவே ஒவ்வொருவருக்கும் ஒரு அற்புத பரிசை அவர் தருகிறார். அதை நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம்:
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. (யோவான் 3:16)
இறைவனின் அன்பு மிகப் பெரியது. நமது பாவங்களுக்காக மரிக்கும்படி, அவருடைய குமாரனை உலகில் அனுப்பினார். இயேசு அடக்கம் பண்ணப்பட்டார். மூன்று நாட்களுக்குப் பின்பு, இறைவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை உனது இரட்சகராகவும், ஆண்டவராகவும் விசுவாசிக்கும் படி அவர் உன்னை அழைக்கிறார். இறைவனின் சத்தம்: “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்”. (எரேமியா 31:3)
நீ இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொள்வாயா? நீ பயப்படத் தேவையில்லை. மகிழ்ச்சியுடனிருப்பாய். இறைவன் எப்போதும் உன்னுடன் இருக்கிறார். அவருடைய அன்பிற்கு முடிவில்லை. உனது நண்பர்களுக்கு இது தெரியுமா? இறைவன் அவர்களையும் நேசிக்கிறார் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
மக்கள்: உரையாளர், இறைவனின் சத்தம்.
© Copyright: CEF Germany