Home -- Tamil? -- Perform a PLAY -- 170 (Halloween – without me 2)
170. ஹாலோவின் - நான் இல்லாமல் 2
ஜேன்: “ஹாலோவின் என்பது ஒரு அற்புதமான பண்டிகை என்றும், அது கேளிக்கை நிறைந்தது என்றும் நான் நினைத்தேன். ஆனால் சாத்தான் ஆராதிக்கப்படுகிறான் என்பதை உணர்ந்ததும், நான் அதை கொண்டாடாமல் விட்டுவிட்டேன்”.
ஜேன் மட்டும் அல்ல! இன்னும் அநேகர் ஹாலோவின் பண்டிகையை கொண்டாடாமல் இருந்தார்கள்.
கார்ல்: “நான் இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தவிர்த்துவிட்டேன். அவைகள் எனக்கு வியாதியைக் கொண்டு வருகின்றன”.
சிறுமி: “ஆங்கில வகுப்பு நடைபெறும் போது நாங்கள் ஹாலோவின் பற்றி மட்டுமே பேசுவோம். எனது அப்பா ஆசிரியரிடம் அதனுடைய தீமையான பின்னணியம் பற்றி கூறினார். அதாவது காணமுடியாத சக்திகள் செயல்படுகின்றன என்று அர்த்தம். பிறகு எங்கள் வகுப்பறையில் யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை”.
ஏன் ஹாலோவின் கொண்டாட ரால்ப்பிற்கு விருப்பமே இல்லை?
ரால்ப்: “நான் இறைவனை விசுவாசிக்கிறேன். அவர் கூறுவதைச் செய்ய விரும்புகிறேன்”.
உனது வேதாகமத்தில் உபாகமம் 18 வசனம் 9-ஐ வாசி.
ரால்ப்: “தேசத்தில் அந்த ஜனங்கள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டாம்!”
இறைவன் அன்பாக இருக்கிறார்! அவர் நம்மை நேசிப்பதினால், நம்மை எச்சரிக்கிறார். அவருடைய கட்டளைகள் நன்மையானவை. அவருக்கு செவிகொடுப்பவர்கள் சாத்தானின் வலையில் விழ மாட்டார்கள்.
பெற்றி: “ஹாலோவின் பின்னால் சாத்தான் இருப்பது எனக்குத் தெரியாது. அதைக் குறித்து நான் வாசித்தேன். அது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இப்போது நான் ஒவ்வொருவரையும் எச்சரிக்கிறேன். நான் அதை எனது பள்ளியில் சத்தமாக வாசித்தேன். எனது ஆசிரியர் இதற்கான அனுமதியைக் கொடுத்தார். நான் மட்டும் அல்ல, இன்னும் அநேகர் இதைக் கற்றுக்கொண்டோம். நான் இப்போது சொல்கிறேன். ஹாலோவின் – நான் இல்லாமல்! இன்னும் அநேகர் சீக்கிரத்தில் இதைப் போலவே சொல்வார்கள் என்று நம்புகிறேன். ஹாலோவின் சாத்தானின் கொண்டாட்ட விழா என்பதை நான் ஏற்கெனவே அறிந்திருந்தால், நான் அதில் ஈடுபட்டிருக்கவே மாட்டேன்”.
ஒருவேளை நீயும் இதை அறியாமல், அதில் பங்கெடுத்திருக்கலாம். நீ அதற்காக மனம் வருந்துகிறாயா? பயப்படாதே. இயேசுவே வெற்றியாளர், அவரிடம் விண்ணப்பம் ஏறெடு. அவர் உன் சத்தத்தைக் கேட்கிறார். உதாரணத்திற்கு இப்படிச் சொல்:
சிறுவன்: “ஆண்டவராகிய இயேசுவே, நீர் என்னை நேசிப்பதற்கு நன்றி. நான் ஹாலோவின் கொண்டாட்டத்தில் பங்கெடுத்ததற்காக என்னை மன்னியும். நான் இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன். நான் இப்போது உமக்காக வாழ விரும்புகிறேன். உமது வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்க விரும்புகிறேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன். எனது பாவத்திற்காக மரித்ததற்கு நன்றி. ஆமென்!”
இப்படிப்பட்ட விண்ணப்பங்களுக்கு இயேசு உடனே பதிலளிக்கிறார். அவர் உன்னை மன்னிக்கிறார். ஏனெனில் அவர் உன்னை நேசிக்கிறார். உன் வாழ்வில் அவருக்கு நீ இடம்கொடுத்தால், அவர் எப்போதும் உன்னுடன் இருப்பார். உன்னை பாதுகாப்பார்.
பெற்றி செய்ததை நீயும் செய்: ஹாலோவின் பின்பு யார் இருக்கிறான் என்பதை மற்றவர்களுக்கும் சொல். ஒருவேளை அவர்களும் இயேசுவை விசுவாசித்து இப்படிச் சொல்லக் கூடும்: ஹாலோவின் – நான் இல்லாமல்!
மக்கள்: உரையாளர், ஜேன், கார்ல், சிறுமி, ரால்ப், பெற்றி, சிறுவன்.
© Copyright: CEF Germany