Home -- Tamil? -- Perform a PLAY -- 168 (All is well with Terry 6)
168. டெர்ரிக்கு எல்லாம் நன்றாக இருந்தது 6
பிலிப்புவும், ரூத்தும் நன்றாகத் தூங்கினார்கள். அவர்கள் அநேக காலடிச் சத்தங்களை கேட்கவில்லை. டெர்ரியின் படுக்கையினருகே இரவு முழுவதும் டாக்டர் அமர்ந்திருப்பதை அவர்கள் அறியவில்லை.
நல்ல மேய்ப்பன் இயேசு அமைதியாய் டெர்ரியை காண இயலா தனது கரங்களினால் எடுத்துக்கொண்டார். பரலோகில் உள்ள தனது வீட்டிற்கு அவனை அழைத்துச் சென்றார்.
அடுத்த நாள் காலையில் டெர்ரி இறந்த செய்தியை ரூத் கேட்ட போது மிகவும் அழுதாள். பிலிப்புவும், அவளும் தங்களது சிறந்த நண்பனை இழந்துவிட்டார்கள்.
கல்லறையில் போதகர்.ராபிங்கர் நல்ல மேய்ப்பன் இயேசு கதையை சத்தமாக வாசித்தார். அடக்க ஆராதனை முடிந்த பின்பு ரூத் சோகத்துடன் மரங்களின் வழியே நடந்தாள். டெர்ரி உயிருடன் இல்லை என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவள் செந்நிற மரத்தின் அடியே நின்று மனம் விட்டு அழுதாள்.
திரு.டேனர்: “ரூத்! நீ ஏன் அழுகிறாய்?”
அவளருகே திடீரென்று திரு.டேனர் வந்து நின்றார். மந்தையில் உள்ள எல்லா ஆடுகளும் அவருக்குச் சொந்தம். நடந்த எல்லாவற்றையும் ரூத் தெரிவித்தாள்.
ரூத்: “நான் அடிக்கடி விண்ணப்பம் செய்தேன். ஆனாலும் அது பலனளிக்கவில்லை. டெர்ரி இறந்துவிட்டான்”.
திரு.டேனர்: “இயேசு தவறு செய்துவிட்டார் என்று நீ நினைக்கிறாயா? என்னுடைய ஆடுகளில் ஒன்று வியாதிப்பட்ட பின்பு, அதை மிகவும் சிறந்த ஒரு புல்வெளிக்கு நான் எடுத்துச் சென்றால் நீ என்ன சொல்வாய்? அது முன்பிருந்ததை விட சிறப்பாக இருக்குமல்லவா?”
ரூத் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.
திரு.டேனர்: “மிகவும் அற்புதமான இடத்திற்கு இயேசு டெர்ரியை அழைத்து சென்றுள்ளார். எனவே நீ கவலைப்படத் தேவையில்லை”.
ரூத்: “ஆனால் அவனை அடக்கம்பண்ணி விட்டார்களே. அவன் எப்படி நல்ல மேய்ப்பனுடன் இருக்க முடியும்?”
திரு.டேனர் ஒரு செந்நிற கொட்டையை எடுத்தார்.
திரு.டேனர்: “பார்! ரூத்! விதை இல்லாத இந்த ஓடு ஒரு பயனையும் தராது. ஆனால் உயிர் இந்த விதையில் உள்ளது. அதிலிருந்து புதிய மரம் வருகிறது. டெர்ரியின் சரீரத்தை இந்த உமியுடன் ஒப்பிடலாம். அது பூமியில் விழுகிறது. இனி அது தேவைப்படாது. அவனுடைய உள்ளான வாழ்வு இயேசுவுடன் உள்ளது. அங்கே அவன் புதிய சரீரத்துடன் வேதனையின்றி இருப்பான். அதைக் குறித்து சிந்தித்துப் பார்! ரூத்!”
ரூத் கவலைப்பாடாமல் இருப்பதை வீட்டில் பிலிப்பு கவனித்தான்.
பிலிப்பு: “ரூத்! நல்ல மேய்ப்பனைக் குறித்து எனக்கு சொன்னதற்கு நன்றி. எனவே தான் நான் அவரை அறிய முடிந்தது. இப்போது டெர்ரி அவருடன் இருக்கிறான். நாமும் ஒரு நாளில் அவரிடம் செல்வோம்”.
ரூத்: “நாளைக்கு நான் பள்ளியில் சிறுபிள்ளைகளுக்கு நல்ல மேய்ப்பனைக் குறித்து சொல்லப் போகிறேன். அப்போது அவர்களும் இயேசுவைக் குறித்து அறிந்துகொள்வார்கள்”.
நல்ல மேய்ப்பன் இயேசுவைக் குறித்து நீயும் சொல்வாயா?
மக்கள்: உரையாளர், திரு.டேனர், ரூத், பிலிப்பு.
© Copyright: CEF Germany