STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 169 (Halloween – without me 1)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

169. ஹாலோவின் – நான் இல்லாமல் 1


ஈவ் மற்றும் ஹோவர்ட் ஜன்னலுக்கு எதிரே இருந்து வரும் துர்வாசனையை முகர்ந்தார்கள். கண்ணாடிக்கு பின்னால் இருந்த பூசணிக்காய்கள் அசட்டு சிரிப்பு சிரிப்பது போல் இருந்தன.

ஈவ்: “ஹாலோவினைக் குறித்து நான் புகார் செய்யப் போகிறேன். நீ அந்த மண்டை ஓட்டைப் பார்த்தாயா?”

ஹோவர்ட்: “அது உண்மையானது அல்ல”.

ஈவ் சில வாத்து முட்டைகள் வைத்து இருந்தாள்.

ஹோவர்ட்: “நீ ஹாலோவின் பண்டிகையைக் கொண்டாட வருகிறாயா?”

ஈவ்: “என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இப்போது நான் வீட்டிற்கு செல்ல வேண்டும்”.

அருகில் இருந்த பேக்கரியின் கதவில் விளம்பரம் செய்திருந்தார்கள். ஹாலோவின் பண்டிகையில் பணம் பிரதானமானது.

(அழைப்பு மணி சத்தம்)

அம்மா: “கடைசியில் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்”.

ஈவ்: “எனக்கு பசியாக இருக்கிறது. (தட்டில் கரண்டி வைத்து தட்டும் சத்தம்) ஜன்னல் அருகே இருந்த பூசணிக்காய்கள் எங்கே?”

அப்பா: “அவைகள் குப்பைத் தொட்டியில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன”.

ஈவ்: “குப்பைத் தொட்டியிலா?”

அம்மா: “இன்றைய செய்தித்தாளில் வந்த இந்த கட்டுரையை வாசி”. (பேப்பர் எடுக்கும் சத்தம்)

ஹாலோவின் என்பதின் அர்த்தத்தை வாசித்த போது ஈவ் தனது பீட்ஸா உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அக்டோபர் -31- மந்திரவாதங்கள் – சாத்தானின் திருவிழா. இந்தக் கதை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அவர்கள் இறைவனின்றி வாழ்ந்தார்கள். அவர்கள் அநேக கடவுள்களை நம்பினார்கள். சம்கெய்ன் என்பது மரணத்தின் கடவுள் ஆகும் அந்த இரவில் வந்து, இறந்து போனவர்களை அழைத்துக் கொள்ளுகிறது.

ஈவ்: “ஹாலோவின் என்பது சாத்தானுக்கான ஓர் கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகும்”.

ஹாலோவின் என்பது ஈவினுடைய எல்லாப் பரிசுத்தவான்களின் நாள் என்பதின் ஆங்கிலச் சுருக்கம் ஆகும். மந்திரவாதிகள் பூசனணிக்காயை வெட்டி, உட்பகுதியில் மெழுகுவர்த்தியை வைப்பார்கள். தங்கள் வீடுகளின் முன்பு வைத்து சத்தம் போடுவார்கள். “பரிசு அல்லது சாபம்”. சம்கெய்னிற்கு பலியிடாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.

அப்பா: “இனிப்புப் பொருளை நாடும் தீய ஆவிகள் புறஇனத்து மக்களின் பழக்கத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன. வேதாகமம் கூறுகிறது: தீமைகளை விட்டு விலகுங்கள். ஹாலோவின் என்பது தீமையின் இரவு ஆகும்”.

அம்மா: “நான் இதை அறியவில்லை. இப்போது சொல்கிறேன். ஹாலோவின் – நான் இல்லாமல்!”

அப்பா: “பலிகளைக் குறித்து நீ வாசித்தாயா?”

மக்கள் சாத்தானுக்கு பலி செலுத்துவதைக் குறித்து வாசித்த போது ஈவ் பயந்தாள். எவ்வளவு பயங்கரம்! சாத்தான் பொய்யனும், கொலைகாரனுமாக இருக்கிறான். ஹாலோவின் அவனுடைய நாள் ஆகும்.

அப்பா: “புறஇன மக்களின் பழக்கங்களில் நாம் பங்குபெறக் கூடாது என்று இறைவன் கூறுகிறார். எனவே தான் நானும் சொல்கிறேன்: ஹாலோவின் – நான் இல்லாமல்!”

நீ என்ன சொல்கிறாய்? நீ இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறாயா? இப்படிப்பட்ட கொண்டாட்டம் இல்லாமலும் உன்னால் உண்மையான மகிழ்ச்சியை பெறமுடியும்.

ஈவ்: “நான் ஹாலோவின் கொண்டாட்டத்திற்கு போகவில்லை. ஹோவர்ட்டிர்க்கு குறுந்தகவல்: ஹாலோவின் – நான் இல்லாமல்!”

ஹாலோவின் - நீயும் இல்லாமல் என்று நான் நம்புகிறேன்!

ஹாலோவினைக் குறித்து மேலும் அறிய விருப்பமா? அப்படியென்றால் எனக்கு எழுதுங்கள்.


மக்கள்: உரையாளர், ஈவ், ஹோவர்ட், அம்மா, அப்பா.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 27, 2018, at 12:54 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)