Home -- Tamil? -- Perform a PLAY -- 108 (Bela‘s Bible)
108. பெலாவின் வேதாகமம்
நாடோடி கருநிறப்பெண்ணின் நான்கு சக்கர வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று குலுங்கியது. பிள்ளைகள் நிலை தடுமாறினார்கள்.
பெலா: “அப்பா! நான் ஒரு விவசாயி போல வேலை செய்ய விரும்புகிறேன்”.
அப்பா: “அது சீக்கிரத்தில் உனக்கு அலுப்பு தட்டிவிடும்”.
அம்மா: “பெலாவா? வேலை செய்யப்போகிறாளா? ஒரே வேடிக்கையாக இருக்கிறதே!”
வேலையைப் பொறுத்தமட்டில் பெலாவின் பெற்றோர்கள் பேசிய விதம் அவனை சோர்வடையச் செய்தது. அடுத்த ஊரை அவர்கள் அடைந்தார்கள். அப்போது காரில் இருந்து குதித்து வேகமாக அவன் ஓடினான். அவன் பூக்கள் நிறைந்திருக்கும் அந்த தோட்ட வீட்டை மிகவும் ரசித்தான். (கதவைத் தட்டும் சத்தம்)
விவசாயி: “வணக்கம்! நீங்கள் யார்?”
பெலா: “எனது பெயர் பெலா. நான் உங்களுடன் இணைந்து வேலை செய்ய விரும்புகிறேன்”.
விவசாயி: “உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யும் சரியான நேரத்தில் நீ வந்திருக்கிறாய். முதலாவது நீங்கள் உணவருந்துங்கள். உள்ளே வாருங்கள்”.
சமையலறையில் இருந்து வந்த வாசனை அருமையாக இருந்தது. அவன் யானைப் பசியுடன் இருந்தான்.
விவசாயி: “நான் சாப்பிடும் முன்பு விண்ணப்பம் ஏறெடுப்போம்: ஓ! இறைவனே! ஒவ்வொரு நன்மையான ஈவும் உம்மிடத்திலிருந்து வருகின்றது. அவைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆமென்”.
விண்ணப்பம் பண்ணுவதும், வேதத்தை வாசிப்பதும் பெலாவிற்கு மிகவும் புதியதாகக் காணப்பட்டது. அந்த நண்பனைப் போன்ற விவசாயியுடன் இருப்பதை அவன் விரும்பினான். அவனுக்கு அந்த நாளின் முடிவில் முதுகில் வலி ஏற்பட்டது. இருப்பினும் வேலை அவனுக்கு மகிழ்ச்சியாகக் காணப்பட்டது. ஒரு வாரம் கடந்தது. (நாய்கள் குரைக்கும் சத்தம்)
பெலா: “நீரோ! இது என்ன காரியம்? நீ என்னுடன் பந்து விளையாட்டு விளையாட விரும்புகிறாயா?” நீரோ தனது காதுகளை நீட்டிக் கேட்டதை பெலாவும் கவனித்துக் கேட்டான். (வயலின் இசைக்கும் சத்தம்)
பெலா: “நீரோ, யாரோ வயலின் இசைக்கிறார்கள். நிச்சயம் என்னுடைய பெற்றோர்களாகத் தான் இருக்க வேண்டும். அவர்கள் நெருப்பின் அருகே அமர்ந்து, பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. உன்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?”
பெலா சமையலறைக்குச் சென்றான் அங்கே ஒருவரும் இல்லை. அவன் மேஜையின் மீதிருந்த வேதாகமத்தை எடுத்தான். இரவில் மறைந்து போனான்.
அப்பா: “பெலா எப்படி இருக்கிறாய்? எங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?”
பெலா: “நான் இந்தப் புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறேன்”.
அம்மா: “கிரிகர் இதை வாசிப்பான்”.
கிரிகர்: “இங்கு பாருங்கள். இது பரிசுத்தமான புத்தகம். அது கூறுகின்றது: நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி”.
அம்மா: “இது பரிசுத்தமான புத்தகம். இதை வாசி!”
கிரிகர்: “ஒரு மனிதன் இயேசுவிடம் வந்து கேட்டான். நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்? இயேசு அவனுக்குப் பதிலளித்தார். இறைவனுடைய கட்டளைகளைக் கைக்கொள். திருடாதிருப்பாயாக!”
அப்பா: “திருடக் கூடாதா?”
கருநிறப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் குற்ற உணர்வுடன் பார்த்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் திருடியிருந்தார்கள். பெலாவும் வேதத்தை திருடியிருந்தான். அன்று மாலை தான், அவன் அதை எடுத்திருந்தான்.
விவசாயி: “பெலா! ஆச்சரியமாக இருக்கிறது. நீ எங்கள் வேதாகமத்தை எடுத்தாயா? நானே அதை உனக்குக் கொடுக்கிறேன்”.
பெலா: “உண்மையாகவா? மிகவும் நன்றி! நான் அதை வைத்துக்கொள்கிறேன்”.
பெலா மிகவும் மகிழ்ச்சியடைந்தான். வேதாகமத்தின் மூலம் நாடோடி கருநிறப்பிள்ளைகள் இயேசுவை அறியவும், விசுவாசிக்கவும் கற்றுக்கொண்டார்கள்.
மக்கள்: உரையாளர், பெலா, அப்பா, அம்மா, கிரிகர், விவசாயி.
© Copyright: CEF Germany