Home -- Tamil? -- Perform a PLAY -- 107 (Lame excuses)
107. நொண்டிச் சாக்குபோக்குகள்
டிர்க் ஓர் புத்தகப் புழு! மார்க் டிவைன், சி.எஸ்.லூயிஸ் என்று அநேகர் புகழ் பெற்றோரின் புத்தகங்களைப் படித்திருந்தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை அவன் அறிந்திருக்கவில்லை.
டிர்க்: “வேதாகமம் எனக்குரிய புத்தகம் அல்ல”.
சிறுமி: “ஏன்?”
டிர்க்: “அதில் எனக்குப் புரியாத அநேக காரியங்கள் உள்ளன”.
சிறுமி: “இது ஒரு சாக்குப்போக்கு. நீ புரிந்துகொள்ளும் அநேக காரியங்கள் அதில் உள்ளன என்பது எனக்குத் தெரியும்”.
டிர்க்: “எனக்குப் புரிகின்ற காரியம் என்ன உள்ளது?”
சிறுமி: “நீ திருடக்கூடாது!”
என்பது போன்ற பல காரியங்கள் உள்ளன.
ஓ! இது ஒரு அம்பைப் போல டிர்க்கைத் தாக்கியது. அவனது முகம் சிவந்தது. அவன் விரைவாக வெளியே நடந்தான்.
வேதாகமம் புத்தகங்களின் புத்தகம் என்பதை நீ எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?
டிர்க்: “அச்சு இயந்திரம் கண்டுப்பிடிக்கப்பட்ட பின்பு, முதலாவது அச்சிடப்பட்ட புத்தகம் வேதாகமம் ஆகும்”.
சிறுமி: “1600க்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது”.
டிர்க்: “இங்கிலாந்தில் மிகச்சிறிய வேதாகமம் அச்சிடப்பட்டது. அது தீப்பெட்டியின் அளவில் இருக்கிறது”.
சிறுமி: “மரத்தினால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய வேதாகமம் 24,000 பவுண்டுகளுக்கும் மேலான எடை உள்ளது”.
டிர்க்: “மிகவும் நேசிக்கப்படத்தக்க புத்தகம் வேதாகமம். அதே சமயத்தில் அநேகர் அதை வெறுக்கவும் செய்கிறார்கள்”.
சிறுமி: “வேதாகமத்தின் ஆசிரியர் இறைவன் ஆவார். 40 பேர் அவர் கூறியதை எழுதினார்கள்”.
டிர்க்: “வேதாகமத்தை வாசித்து, இறைவனுடைய வார்த்தையை நம்பும் அனைவரும் புதிய நபர்களாக மாறுகிறார்கள். வேறு எந்த புத்தகமும் ஒருநபரை இப்படி மாற்றியமைப்பதில்லை”.
சிறுமி: “வேதாகமம் 3 மில்லியன் வார்த்தைகளை உள்ளடக்கியுள்ளது. நீ அனுதினமும் நான்கு அதிகாரங்களை வாசித்தால், ஒரு ஆண்டில் வேதாகமம் முழுவதையும் வாசித்துவிட முடியும்”.
டிர்க்: “வேதாகமத்தை 100 முறைக்கும் மேலாக வாசித்த ஒரு மனிதன் இங்கிலாந்தில் இருக்கிறான்!”
ஒருவன் தனது நண்பனின் வேதாகமத்தில் குண்டுகள் துளைத்திருப்பதைக் கண்டான். அதைக் குறித்து தவறாக நினைத்தான். இறைவனின் வார்த்தைகள் அடங்கிய வேதாமம் இப்படி இருக்கிறதே! என்று அதிர்ச்சியடைந்தான். அவன் மனதில் யூகிப்பதை நண்பன் அறிந்துகொண்டான்.
மனிதன்: “குண்டுகள் துளைத்த வேதாகமம் தான் எனது உயிரைக் காப்பாற்றியது. போர் நடைபெற்ற சமயம், நான் முன் வரிசையில் இராணுவ வீரனாக சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். நாங்கள் படிப்படியாக முன்னேறிச் சென்றோம். திடீரென்று எனது நெஞ்சில் கடுமையான வலி ஏற்பட்டது. என்ன நடந்தது தெரியுமா? என்னைக் குறி பார்த்து எதிரி சுட்டான். நான் எப்போதும் சட்டை முன் பையில் எனது வேதாகமத்தை வைத்திருப்பேன். அந்தக் குண்டு எனது வேதாகமத்தை துளைத்து நெஞ்சில் சிறிய காயத்தை ஏற்படுத்தியது. வேதாகமம் மட்டும் அப்போது இல்லையென்றால், எனது இருதயத்தை குண்டு துளைத்திருக்கும்.
அது எனது உயிரைக் காப்பாற்றியது. ஒருமுறை அல்ல, இரண்டு முறை காப்பாற்றியது. எனது பாவங்களிலிருந்து என்னை இரட்சிக்கிறவர் இயேசு மட்டுமே என்பதை நான் முதலாவது அறிந்த சமயம் காப்பாற்றியது. இரண்டாம் முறை குண்டு துளைத்து சாவதிலிருந்து என்னைக் காப்பாற்றியது”.
நான் தினமும் வேதாகமத்தை வாசிக்கிறேன். நீயும் வாசிக்கிறாயா? உனக்கு வேதாகமம் வேண்டுமென்றால் எனக்கு எழுது. அது கூறுகின்றது, “உமது வார்த்தை என் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாய் இருக்கின்றது”. (சங் 119:105) நீ செல்லும் வழியை வெளிச்சமானதாக உனக்கு காண்பிக்கும். நீ இறைவனைச் சென்றடையும் வழியைக் காண முடியும்.
மக்கள்: உரையாளர், டிர்க், சிறுமி, மனிதன்.
© Copyright: CEF Germany