Home -- Tamil? -- Perform a PLAY -- 070 (It‘s worth it )
70. அது தகுதியானது தான்
பேதுரு: “இப்படி ஆகிவிட்டதே. முழு இரவும் நாம் முயற்சித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லையே”.
சோர்வுற்று களைத்துப் போன மீனவர்கள் தங்கள் படகை கரைக்கு நேராக கொண்டு வந்தார்கள். இரவு முழுவதும் மீன்பிடிக்க முயற்சித்தும் அவர்கள் தோற்றுப் போனார்கள். பின்பு அவர்கள் வலைகளை பழுதுபார்த்து, அதை சுத்தம்பண்ணிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று கலிலேயாக் கடல் அருகில் மக்கள் கூட்டம் கூடியது. இயேசு இங்கே இருக்கிறார், அவருடைய போதகத்தை கேட்க விரும்பினார்கள். அது எப்போதுமே மதிப்புமிக்கது. அவருடைய வார்த்தை ஒவ்வொருவருக்கும் தைரியத்தையும், புதிய பெலத்தையும் கொடுத்தது. அநேக மக்கள் நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். இயேசுவிற்கு அங்கு எந்தவொரு அறை வசதியும் இல்லை.
இயேசு: “பேதுரு, உனது படகை கரையிலிருந்து சற்று தள்ளிக் கொண்டு செல். நான் அதில் ஏறி போதகம் பண்ண வேண்டும்”.
அப்போது தான் ஒவ்வொருவரும் அவரைக் காணவும், கேட்கவும் முடியும். அவர் பிரசங்கம் பண்ணி முடித்தவுடன் பேதுருவை உற்றுப்பார்த்தார்.
இயேசு: “பேதுரு, உனது படகை கடலுக்குள் கொண்டு போ, உனது வலைகளைப் போடு. நாம் மீன்பிடிக்கப் போவோம்”.
பேதுருவின் முகம் எப்படி இருந்திருக்கும் என்று நான் பார்க்க ஆசைப்படுகிறேன். இப்போது நாம் மீன்பிடிக்கப் போவோம்? பகல் நேரத்தில் வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க மீன்கள் கடலுக்கு அடியில் சென்று நீந்தும். எந்த ஒரு மீனும் வலைக்குள் சிக்காது. இயேசு கேட்பதைக் குறித்து பேதுரு அறிந்திருந்தான். மேலும் அவன் மீன்பிடி தொழில் செய்பவனாகவும் இருந்தான்.
பேதுரு: “ஐயரே, நாங்கள் இரவு முழுவதும் முயற்சித்தும் ஒரு மீன் கூட அகப்படவில்லை”.
நம்முடைய தோல்விகளைக் குறித்து நாம் இயேசுவிடம் பேசுவோம்.
பேதுரு: “ஆகிலும் உமது வார்த்தையின்படி வலையைப் போடுகிறேன்”.
பேதுருவின் முகம் எப்படி இருந்திருக்கும். இயேசு அனைத்தையும் அறிகிறார். பேதுரு இயேசுவின் வார்த்தையைக் கவனித்தான். அவன் கடலுக்குள் மற்ற மீனவர்களுடன் சென்று வலையைப் போட்டான். அப்போது ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அவர்கள் வலை கிழியத்தக்கதாக மிகுதியான மீன்களை பிடித்தார்கள்.
பேதுரு: “யோவானே, யாக்கோபே, எங்களுக்கு உதவுங்கள்! எங்களால் தனியாக இந்த வலையை இழுக்க முடியவில்லை”.
அவர்கள் நண்பர்களை அழைத்து, இரண்டு படகுகள் நிறைய மீன்களைப் பிடித்தார்கள். படகு மூழ்கத்தக்கதாக மிகுதியான மீன்கள் இருந்தன. இயேசுவின் இந்த செயலால் பேதுரு மிகவும் ஆச்சரியப்பட்டான். அவர் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொண்டான்.
பேதுரு: “ஆண்டவரே, என்னை விட்டு போய்விடுங்கள், நான் ஒரு பாவி”.
இயேசு பேதுருவை விட்டு போகவில்லை என்பது அற்புதமான காரியம் ஆகும். அவனை மன்னித்தார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடும் போது அவர் எனக்கும், உனக்கும் இதைச் செய்வார்.
இயேசு: “பேதுருவே, பயப்படாதே, இன்று முதல் நான் உன்னை மனுஷரைப் பிடிக்கிறவன் ஆக்குவேன்”.
ஒரு புதிய வேலை. இனிமேல் பேதுரு இயேசுவிற்காக மனிதர்களைப் பிடிக்கிறவனாகப் போகிறான். இயேசு கவர்ச்சிமிக்க மக்களை அழைக்கவில்லை. அவர் என்னையும், உன்னையும் போல இருக்கிற சாதாரண மக்களை அழைக்கிறார். பேதுருவைப் போன்ற மக்கள் அவருடைய வார்த்தையை கவனித்து, அவருடன் வாழும் அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
மக்கள்: உரையாளர், பேதுரு, இயேசு.
© Copyright: CEF Germany