Home -- Tamil -- Perform a PLAY -- 069 (The showdown 2)
69. காட்சி 2
மேஜையின் மீது கிண்ணத்தில் சூப் இருந்தது. ஆனால் ஒருவரும் அதை குடிக்கவில்லை. இரண்டு இடங்கள் காலியாக இருந்தன. அவைகள் எப்போதும் அப்படியே இருக்குமா?
நற்செய்தியாளர்: “எனக்கு நம்பிக்கையில்லை. எஸ்கிமோக்கள் மத்தியில் நாம் முப்பது ஆண்டுகளாக இயேசுவைக் குறித்து கூறுகிறோம். ஆனால் அவர்கள் விசுவாசிக்கவில்லை. அவர்கள் இருதயம் அந்தப் பனிக்கட்டியைப் போல உறைந்துள்ளது”.
நற்செய்தியாளர் பெண்: “இரண்டு நற்செய்தியாளர்கள் மற்றும் மூன்று எஸ்கிமோக்கள் வலிமையான அலைகளைக் குறித்து அறியாமல் பனியில் மூழ்கப்போகிறார்கள். அவர்கள் சாகப்போகிறார்கள். மந்திரவாதி நம்மைப் பார்த்து சிரிக்கப் போகிறான்”.
நற்செய்தியாளர்: “நாங்கள் அமைதியாய் இருக்கப் போவதில்லை. நாங்கள் விண்ணப்பம் ஏறெடுக்கப் போகிறோம். இயேசுவுக்கு சித்தமானால், நிச்சயம் அவர்களை விடுவிப்பார். வானத்திலும், பூமியிலும் அவர் அதிகாரம் பெற்றிருக்கிறார்”.
அவர்கள் விண்ணப்பம் செய்த போது, கடல் கொந்தளித்தது. வலிமையான அலைகள் பனிப்பாறைகளை உடைத்தன. வண்டியில் இருந்த ஐந்து எஸ்கிமோக்கள் தங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
மோசஸ்: “பனிப்பாறை உடைகின்றது, நாம் சாகப் போகிறோம்”.
எஸ்கிமோ: “நாய்களின் கயிற்றை அவிழ்த்து விடுங்கள்”.
மோசஸ்: “போ, பாதுகாப்பான கரைப் பகுதியை கண்டுபிடி”.
நாய்கள் வேகமாக ஓடின. ஆகாயத்தை நோக்கி ஓர் நீரூற்று பீறிட்டு எழும்பியது. பெரிய அளவில் பனிக்கட்டிகள் வழிகளை மறைத்துக்கிடந்தன. அவர்கள் சுயநினைவை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களது வண்டி வானத்திற்கும் கடல் நீருக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருப்பது போல் காணப்பட்டது. நாய்களால் இதற்கு மேல் ஓட முடியவில்லை. மோசே திரும்பிப் பார்த்தான். அவனுடைய இருதயமே நின்றுவிட்டது. மிகப்பெரிய ஒரு பனிப்பாறை அவர்களை நோக்கி வந்தது. அது அவர்களை நொறுக்கப்போகிறது. மோசே இயேசுவை நோக்கி கதறினான்.
மோசே: “ஆண்டவராகிய இயேசுவே, எங்களுக்கு உதவும்”.
மிகப்பெரிய சத்தத்துடன் மோதிய அந்தப் பனிப்பாறை ஒரு காரைப்போல அவர்களது வண்டியை தூக்கி சுமந்து கரைப்பக்கம் தூக்கிப்போட்டது.
மோசே&எஸ்கிமோ: “தப்பித்து விட்டோம், நாம் காப்பாற்றப்பட்டுவிட்டோம்”.
பின்பு இன்னொரு உயரமான அலை வந்தது. அனைவரையும் முழுவதும் நனைத்தது. அவர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் ஒன்பது நாட்கள் மிகப்பெரிய ஆபத்தை கடந்து வந்தார்கள். உருகிய பனிப்பாறைகள் மீண்டும் திடநிலைக்கு வரும்போது தான் அவர்கள் வீட்டிற்கு திரும்ப முடியும். இறைவன் அவர்களை பாதுகாத்தார். ஹொலி அவர்களை தூரத்தில் கண்டான்.
ஹொலி: “ஹீப்பா, அவர்கள் வருகிறார்கள், அவர்கள் வருகிறார்கள்”.
ஹீப்பா: “யார்?”
ஹொலி: “நற்செய்தியாளர்கள். இயேசு இறுதியில் வென்றுவிட்டார்”.
ஹீப்பா: “வாய்ப்பே இல்லை, ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. வலிமையான அலைகளின் ஆபத்தைக் கடந்து ஒருவரும் திரும்பி வர இயலாது”.
ஹீப்பா அவர்களை எச்சரிக்காமல் விட்டுவிட்டான். அவர்கள் துன்பத்தை அடைந்தார்கள். ஆனாலும் பாதுகாப்புடன் வீட்டை நோக்கி வந்தார்கள். இது இறைவனின் அற்புதம் ஆகும். ஹீப்பா இதைக் கண்டவுடன் இயேசுவை விசுவாசித்தான். சந்தோஷத்தின் மிகுதியினால் ஒருவன் ஓடிப்போய் தேவாலயத்தின் மணியை ஒலிக்கச் செய்தான். அநேக எஸ்கிமோக்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்.
மக்கள்: உரையாளர், நற்செய்தியாளர், நற்செய்தியாளர் பெண், மோசே, எஸ்கிமோ, ஹீப்பா, ஹொலி.
© Copyright: CEF Germany