STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 103 (The voice of the unseen 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
103. காண இயலா இறைவனின் சத்தம் 3முட்செடி எரிகின்றது. (நெருப்பு பற்றியெரியும் சத்தம்) அது கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் அவிந்துபோகவில்லை. மோசே அதன் அருகே மெதுவாகச் சென்றான். இதன் இரகசியத்தை அவன் அறிய விரும்பினான். மோசே: “இது இயற்கைக்கு மாறான காரியம். எப்படி இது சாத்தியம்? முட்செடி கருகிப்போகவில்லையே!” இறைவன்: “மோசே! மோசே!” அவனைப் பெயர் சொல்லி யாரோ அழைக்குச் சத்தம் கேட்டது. ஆனால் சுற்றிலும் ஒருவரையும் காணவில்லை. இறைவன்: “மோசே!” மோசே: “இதோ அடியேன்!” இறைவன்: “அருகில் வா. உனது பாதரட்சையைக் கழற்றிவிடு. நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது. நான் உனது பிதாக்கள் ஆராதித்த இறைவன்”. மோசே அதிர்ச்சியடைந்தான். இறைவன் அங்கிருந்தார். எரிகின்ற முட்செடியின் நடுவிலிருந்து அவர் பேசினார். மோசே அதை உற்றுப்பார்க்கத் துணியவில்லை. அவன் தனது முகத்தை துணியால் மூடிக்கொண்டான். அவன் இறைவனுடைய சத்தத்தை தெளிவாகக் கேட்டான். இறைவன்: “எகிப்தில் என்னுடைய மக்களை பார்வோன் துன்புறுத்துவதை நான் கண்டேன். அவர்களுடைய கூக்குரலைக் கேட்டேன். நான் அவர்களை விடுதலையாக்கி, அருமையான ஓர் தேசத்திற்கு அவர்களை வழிநடத்திச் செல்வேன். மோசே! நீ எனக்கு வேண்டும். நீ பார்வோனிடம் சென்று அடிமைத்தனத்திலிருந்து என் மக்களை விடுவிக்க வேண்டும்”. மோசே: “நானா? ஏன் நான் செய்ய வேண்டும்? என்னால் முடியாது”. மோசே அநேக சாக்குப்போக்குகளைக் கூறினான். இறைவன் அவனையும் பயன்படுத்த முடியும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் இறைவன் இதைக் குறித்து மிகவும் கரிசனையுடன் இருந்தார். மில்லியன் கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து மோசே விடுவிக்கவேண்டும். நீயும், நானும் ஒரு விடுதலையாளரைப் பெற்றிருக்கிறோம். உனக்கு அதைக் குறித்து தெரியுமா? இயேசுவின் மீதான விசுவாசம் நம்மை விடுதலையாக்கும். அதை நீயும் அனுபவிக்க நான் விரும்புகிறேன். இறைவன் நம்மை விடுதலை செய்ய விரும்புகிறார். எனவே தான் அவர் மோசேயை எகிப்திற்கு அனுப்பியது போல, இயேசுவை நம்மிடம் அனுப்பினார். இந்த விடுதலைப் பணியை நிறைவேற்ற, இறைவன் மோசேயை பலப்படுத்தினார். அற்புதங்களைச் செய்யும்படியான வல்லமையை அவனுக்கு கொடுத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக தனது வாக்குத்தத்தத்தைக் கொடுத்தார். இறைவன் பேசினார்: “மோசே! பயப்படாதே. நான் உன்னுடன் இருப்பேன். உனக்கு உதவி செய்வேன். உனது சகோதரன் உன்னுடன் வருவான். அவனை நீ போகும் வழியில் கண்டுகொள்வாய். எழுந்து புறப்பட்டுச் செல்”. இறைவன் மோசேயுடன் சென்றார். இது ஒன்று போதும். இஸ்ரவேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்வதில் மோசே வெற்றி பெற்றானா? மக்கள்: உரையாளர், மோசே(குழந்தை), அம்மா, மோசே. © Copyright: CEF Germany |