STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 104 (Pharaoh is obstinate 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
104. பிடிவாதம் நிறைந்த பார்வோன் 4ஆரோன்: “மோசே, நீயா? சமாதானம் உண்டாகட்டும்”. மோசே: “ஆரோன்! என்னால் நம்பவே முடியவில்லை. 40 ஆண்டுகள் கழித்து நாம் சந்தித்துக்கொள்கிறோம்”. சகோதரர்கள் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இறைவன் அவர்களுக்கென்று ஒரு பணியை வைத்திருந்தார். எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து இஸ்ரவேலரை மோசே விடுவித்து, வழிநடத்த வேண்டும். அவனுடைய சகோதரன் இப்பணியில் அவனுக்கு உதவி செய்ய வேண்டும். கொடூரமான பார்வோனிடம் அவர்கள் போக வேண்டும். இதற்காக அவர்களுக்கு அதிகமான தைரியம் தேவைப்பட்டது. மோசே: “பார்வோனே! இஸ்ரவேலரின் ஆண்டவரும், இறைவனுமாயிருக்கிறவர் உன்னிடம் சொல்கிறார்: “என் ஜனங்களைப் போக விடு”. பார்வோன்: “ஆண்டவரா? யார் அவர்? எனக்கு அவரைத் தெரியாது. இஸ்ரவேலரை அனுப்பிவிடும் எந்தவித எண்ணமும் எனக்கில்லை. இங்கிருந்து ஓடிப்போங்கள்!” இறைவனின் சத்தத்திற்கு செவிகொடுக்க பார்வோனிற்கு விருப்பமில்லை. பார்வோன்: “சோம்பேறிகளே! உங்கள் வேலையைச் செய்யுங்கள். செங்கல் செய்வதற்கான வைக்கோலை நாங்கள் தரமாட்டோம். நீங்களே அதை சேகரியுங்கள். ஆனாலும் செங்கற்களின் எண்ணிக்கை முன்பு போலவே குறையாமல் இருக்க வேண்டும்”. இது என்ன கொடுமை! நிலைமை இப்போது மிகவும் மோசமாகிவிட்டது. இஸ்ரவேலர்கள் மோசேயிடம் வந்து முறுமுறுத்தார்கள். மோசே விண்ணப்பம்பண்ணினான். மோசே: “ஆண்டவரே, நீர் ஏன் என்னை பார்வோனிடம் அனுப்பினீர்? முன்பிருந்ததை விட எங்களின் நிலைமை மோசமாகிவிட்டதே. உமது மக்களை விடுவிக்க நீர் எதுவும் செய்யவில்லையே”. இறைவன் பேசினார்: “நான் பார்வோனுக்கு செய்யப் போவதை நீங்கள் விரைவில் காண்பீர்கள். அவன் உங்களை துரிதப்படுத்தி அனுப்பும்படி நான் செயல்படுவேன். நான் உனக்குச் சொன்னதை நிறைவேற்றுவேன். உங்களை விடுவிப்பேன்”. எகிப்தியருக்கு பல்வேறு வாதைகளை இறைவன் அனுப்பினார். சிறுவன்: “ஒருமுறை அவர் நதியின் தண்ணீரை இரத்தமாக மாற்றினார். ஆனாலும் பார்வோன் நம்பவில்லை”. சிறுமி: “பிறகு தேசம் முழுவதும் தவளைகளால் நிறைந்திருந்தது. பார்வோனின் படுக்கை அறையிலும் அவைகள் வந்தன”. சிறுவன்: “பின்பு கல்மழை பொழிந்து விளைநிலங்கள் அனைத்தும் அழிந்தன”. சிறுமி “மூன்று நாட்கள் முழுவதும் காரிருளாய் இருந்தது. இந்த அற்புதங்களையெல்லாம் கண்டும் பார்வோன் மனம் மாறவில்லை. அவன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்”. சிறுவன்: “இந்த வாதைகள் எல்லாம் இஸ்ரவேலர்களுக்கு நேரிடவில்லை என்பது அற்புதமான காரியமாகும்”. பின்பு இறைவன் இறுதி வாதையைக் கொண்டு வந்தார். இறைவன் பேசினார்: “பார்வோன் மீதும், எகிப்தின் மீதும் இன்னுமொரு வாதையைக் கொண்டு வருவேன். பின்பு நீங்கள் விடுதலையாவீர்கள்”. மோசே பார்வோனிடம் கடைசிமுறை சென்றான். மோசே: “இன்று இறைவன் எகிப்து முழுவதிலும் கடந்து வருவார். ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த மகன் இறப்பான். உனது மகனும் இறப்பான். உயிருள்ள இறைவனை இஸ்ரவேல் ஆராதிப்பதை, அப்பொழுது நீ உணர்வாய்”. பார்வோன் இறுதியில் இதை உணர்ந்தானா? அடுத்த நாடகத்தில் நீ அதைக் காண்பாய். மக்கள்: உரையாளர், பார்வோன், இறைவன், சிறுவன், சிறுமி. © Copyright: CEF Germany |