STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 068 (The showdown 1)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

68. காட்சி 1


இரண்டு எஸ்கிமோக்கள் இறுக்கமான ஆடைகள் அணிந்து அந்த வண்டியில் அமர்ந்தார்கள். பனிச்சறுக்கில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று ஹொலி ஒரு காரியத்தைக் கேட்டான்.

மந்திராவதி ஹீப்பாவும் அதைக் கேட்டான். அந்த பனிபடர்ந்த பகுதியில் ஒரு சத்தம் கேட்டது. நாய்கள் உடனடியாக ஓடுவதை நிறுத்தின. எஸ்கிமோக்கள் தங்கள் பனிக் குல்லாவை எடுத்தார்கள். சந்தேகமே இல்லை. பனிக்கட்டி உருகியது. அவர்களுக்குள் பயம் ஏற்பட்டது. பனிக்கட்டிகள் உருகுமென்றால், நீருக்கடியில் அலைகள் ஏற்படுகிறது என்று அர்த்தம். வலிமையான அலைகள் ஏற்படும்போது கடினமான பனிப்பாறைகளும் உடைந்துவிடும்.

(காற்று வீசும் சத்தம்)

ஹொலி: “அருமை நாய்களே! சீக்கிரம் ஓடுங்கள். கரையை நோக்கி வேகமாகச் செல்லுங்கள். வலிமையான அலைகள் வருகின்றன. நாம் சாகப் போகிறோம்”.

ஹீப்பா: “ஹொலி, அங்கே பார் மேலே?”

ஹொலி: “அவர்கள் என்ன செய்கிறார்கள்? அலைகளை நோக்கிச் செல்கிறார்கள்”.

ஹீப்பா: “நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்”.

அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். அந்த இன்னொரு வண்டியில் எஸ்கிமோக்களின் நற்செய்தியாளர்கள் இருப்பதை ஹீப்பா கண்டான். அவன் அவர்களை எச்சரிக்க விரும்பவில்லை. அவர்களையும், அவர்களுடைய இயேசுவையும் அவன் வெறுத்தான்.

ஹீப்பா மற்றும் ஹொலி நாயின் கடற்கரைப்பகுதியின் பாதுகாப்பான இடத்தை அடைந்தார்கள்.

ஹீப்பா: “அலைகள் வேகமாக வருகின்றன”.

ஹொலி: “எங்கே மற்றவர்கள்?”

ஹீப்பா: “அவர்கள் சாகட்டும். வலிமையான அலைகளை விட இயேசு வல்லமையுள்ளவர் என்பதை நமக்கு காண்பிக்கட்டும். ஹாஹா”.

இரண்டு பேரும் எஸ்கிமோக்களின் வீட்டை கட்டினார்கள். பின்பு ஹீப்பா அருமையான சீல் உணவுடன் கடைக்குச் சென்றான். இங்கே இருக்கும் வெள்ளைப் பெண் நற்செய்தியாளரின் மனைவியோ?

ஹீப்பா: “நான் இந்த மென்மையான மயிர் உடையை வாங்கிச் செல்ல விரும்புகிறேன்”.

பெண்: “எங்களுக்கு இன்னும் அதிகம் தேவையா? என்பது எனக்குத் தெரியாது. எனது கணவர் திரும்பி வரும்வரை சற்று காத்திருக்க முடியுமா?”

ஹீப்பா: “அவர் திரும்பி வர மாட்டார்”.

பெண்: “நீ என்ன சொல்கிறாய்?”

ஹீப்பா: “வலிமையான அலைகள் வருகின்றன”.

பெண்: “வலிமையான அலைகளா?”

அதிர்ச்சியுற்றவளாக அந்தப் பெண் அவனைப் பார்த்தாள். மந்திரவாதி ஜன்னல் கதவைத் திறந்தான். அவர்கள் பனிக்கட்டி உருகும் சத்தத்தைக் கேட்டார்கள்.

பெண: “ஹீப்பா, நீ ஏன் அவர்களை எச்சரிக்கவில்லை?”

ஹீப்பா: “நான் ஏன் சொல்ல வேண்டும்? முடிந்தால் இயேசு அவனைக் காப்பாற்றட்டும்”.

அந்தப் பெண் சோர்வடைந்தாள். பின்பு அவள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வேதாகம வசனத்தைக் கண்டாள்.
இயேசு கூறினார்: “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது”.

பெண்: “இயேசுவால் முடியும். அவரால் நிச்சயம் முடியும்”.

ஹீப்பா: “வலிமையான அலைகள் வந்த பின்பும் அவர்கள் உயிர்பிழைத்தால் நானும் இயேசுவை நம்புவேன்”.

பெண்: “ஹீப்பா, அவர்கள் திரும்பி வருகிறார்கள்”.

அவளுடைய நிச்சயமான குரல் மந்திரவாதியை தடுமாற வைத்தது. யார் இதில் வெல்லப்போகிறார்கள்? ஹீப்பாவா அல்லது இயேசுவா? அடுத்த நாடகத்தில் இதற்கான பதிலைக் காண்போம்.


மக்கள்: உரையாளர், ஹீப்பா, ஹொலி, பெண்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 26, 2018, at 10:54 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)