Home -- Tamil -- Perform a PLAY -- 067 (Proof of Jesus)
67. இயேசுவின் அடையாளங்கள்
சாராள்: “இது உண்மை என்று எப்படி எனக்குத் தெரியும்?”
நீ என்ன சொல்கிறாய்?
சாராள்: “இயேசு இறைவனின் குமாரன் என்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா?”
நீ சாராள் என்பதை நிரூபிக்க முடியுமா?
சாராள்: “எனக்கு அடையாள அட்டை உள்ளது. ஆனால் இயேசுவிற்கு அப்படி இல்லை”.
இயேசுவிற்கு ஐந்து அடையாள அட்டைகள் இருப்பதை நான் உனக்கு காண்பிக்கிறேன்.
சாராள்: “அவர் ஐந்து அடையாள அட்டைகளைப் பெற்றிருக்கிறாரா? இது உண்மையா?”
இயேசு முதலாவது இறைவனிடமிருந்து அடையாள அட்டை பெற்றிருக்கிறார். அவர் ஞானஸ்நானம் எடுத்த போது வானத்தில் இருந்து ஒரு சத்தம் உண்டானது.
இறைவன்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்கு செவி கொடுங்கள்”.
இரண்டாவது அடையாள அட்டை வேதாகமம் ஆகும். இறைவனுடைய குமாரனைக் குறித்த ஒவ்வொரு தீர்க்கதரிசனமும் இயேசுவில் 100 % நிறைவேறியது. அவருடைய உயிர்த்தெழுதல் தான் மூன்றாவது அடையாள அட்டை ஆகும். அவர் உயிருடன் இருக்கிறார். அநேக சாட்சிகள் அவரைக் கண்டார்கள். அவரை அறிந்த மக்கள் தான் நான்காவது அடையாள அட்டை. அவரை அறிந்த மக்கள் கூறினார்கள்.
மனிதர்கள்: “இவர் மெய்யாகவே இறைவனின் குமாரன்”.
சாராள்: “இன்னும் ஒரு அடையாள அட்டை வேண்டுமே”.
என்னுடன் வா. நான் கானாவில் இதற்கான ஆதாரத்தைக் காண்பிப்பேன். அங்கு ஓர் திருமணம் நடந்தது. புது மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணுடன் சேர்ந்து ஏழு நாட்கள் அந்த ஊரில் கொண்டாட்டம் நடந்தது. இயேசுவும் அவருடைய நண்பர்களும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு இயேசுவே இறைவனின் குமாரன் என்ற நிச்சயம் இல்லாதிருந்தது. விருந்தினர்கள் சந்தோஷப்பட்டார்கள். அவர்கள் புசித்துக் குடித்து, பாடல் பாடி, நடனம் ஆடினார்கள். அப்போது ஒரு காரியம் நடந்தது. அங்கே திராட்சை ரசம் குறைவுபட்டது. இதற்கு மேல் பரிமாறுவதற்கு அங்கு திராட்சை ரசம் இல்லை.
சாராள்: “எவ்வளவு துக்கமான காரியம்”.
மரியாள் இதை முதலில் கவனித்தாள். அவள் இயேசுவிடம் இதைக் குறித்து சொன்னாள். அவர் வேலைக்காரர்களிடம் சொன்னார்.
இயேசு: “தண்ணீர் கற்சாடிகளை நீரினால் நிரப்புங்கள்”.
அவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து கொண்டு வந்து நிரப்பினார்கள். பிறகு?
இயேசு: “முழுவதும் நிரப்புங்கள். இப்போது பந்தி விசாரிப்புக்காரனிடம் கொண்டு போங்கள். அவன் இதை ருசித்துப் பார்க்க வேண்டும்”.
பந்திவிசாரிப்புக்காரன் அதை ருசித்துப் பார்த்து, மணமகனை நோக்கி வேகமாக நடந்தார்.
பந்திவிசாரிப்புக்காரன்: “இந்த ரசத்தை நீர் எங்கே வைத்திருந்தீர்? என் வாழ்வில் இவ்வளவு ருசியான ஒன்றை நான் பார்த்ததே இல்லை”.
இயேசு அந்த தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியிருந்தார்.
இது இயேசு செய்த முதலாவது அற்புதம் ஆகும். அற்புதங்கள் தான் இயேசுவின் ஐந்தாவது அடையாள அட்டை ஆகும். அவர் இறைவனின் குமாரன் என்பதை இது காண்பிக்கிறது. சீஷர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு, இயேசுவை விசுவாசித்தார்கள்.
இறைவனின் குமாரனுக்கு ஐந்து அடையாள அட்டைகள், இவைகள் எனக்கு போதுமான ஆதாரங்கள். நான் அவரை விசுவாசிக்கிறேன். நீ விசுவாசிக்கிறாயா?
மக்கள்: உரையாளர், சாராள், இறைவனின் சத்தம், மனிதர்கள், இயேசு, பந்திவிசாரிப்புக்காரன்.
© Copyright: CEF Germany