Home -- Tamil? -- Perform a PLAY -- 160 (Why does Jesus allow it 1)
160. ஏன் இயேசு இதை அனுமதித்தார் 1
மூன்று பேரும் இணைபிரியாதவர்கள். அவர்கள் யாரென்பது உனக்குத் தெரியுமா? கருத்துகள் நிறைந்த மார்த்தாள், எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பவள், மரியாள் அமைதியானவள், சற்று வெட்கப்படுபவள், லாசரு, அவர்களின் சகோதரன். இந்த மூன்று பேரும் இயேசுவை நேசித்தார்கள்.
அவர் சீஷர்களுடன் பெத்தானியாவிற்கு வரும்போது, அவர்களை சந்திப்பார்.
அந்த சிறிய வீட்டில் எப்போதும் சந்தோஷமான சூழல் காணப்பட்டது. திடீரென்று லாசரு வியாதிப்பட்டான். மரியாள் கவலையுடன் அவனருகில் உட்கார்ந்தாள். வியாதிப்பட்ட சகோதரனால் ஒரு வார்த்தை கூட பேசமுடியவில்லை. அவன் தனது கண்களை மூடினான்.
மார்த்தாள் அங்கே வந்தாள். சகோதரனின் வெளிறிய முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.
மார்த்தாள்: “மரியாள், இதை இப்படியேவிடக் கூடாது. இயேசு மட்டுமே நமக்கு உதவ முடியும். உடனடியாக அவருக்கு செய்தி அனுப்பப் போகிறேன்”.
செய்தியை கொண்டு சென்றவன் மூச்சிறைக்க ஓடினான். யோர்தான் நதி அருகில் ஆண்டவராகிய இயேசுவைக் கண்டான்.
செய்தியாளர்: “இயேசுவே, சீக்கிரம் வாரும், மரியாளும் மார்த்தாளும் என்னை அனுப்பினார்கள். லாசரு மிகவும் வியாதிப்பட்டுள்ளான். சீக்கிரம் வாரும். இல்லையென்றால் அவன் இறந்துவிடுவான்!”
இந்த மூன்று பேரையும் இயேசு அதிகமாக நேசித்தார். ஆனாலும் அவர் உடனடியாக அவர்களிடம் செல்லவில்லை. அவர் சீஷர்களுடன் தங்கியிருந்த இடத்தில் தொடர்ந்து இருந்தார். இரண்டு நாட்கள் சென்றது.
இயேசு: “வாருங்கள்! நாம் இப்பொழுது போவோம். லாசரு உறங்கிக்கொண்டிருக்கிறான். நான் அவனை எழுப்ப வேண்டும்”.
சீஷன்: “அவன் உறங்கிக் கொண்டிருந்தால் நிச்சயமாய் நன்றாக மாறுவான்.”
இயேசு: “உறங்கிக்கொண்டிருக்கிறான்” என்று நான் சொன்னதின் அர்த்தம் இது தான். “லாசரு இறந்துவிட்டான்”.
சீஷன்: “இறந்துவிட்டானா?”
இயேசு: “நான் அங்கே இராததினால் மகிழ்ந்திருக்கிறேன். இதினிமித்தம் நீங்கள் என்னை விசுவாசிக்க கற்றுக்கொள்வீர்கள்”.
என்ன நடந்திருக்கிறது என்பதை சீஷர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. லாசரு இறந்துவிட்டான். இயேசு மகிழ்ச்சியாயிருக்கிறார். இந்த சூழ்நிலையில் அவர்கள் எவ்விதம் விசுவாசிக்க கற்றுக்கொள்வார்கள்? சில பயங்கரமான காரியங்கள் நிகழ்ந்தாலும் ஒருவன் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க முடியும். ஒருவன் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையிலும் அவர் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்ற அர்த்தத்தில் அவர் சொல்லியிருப்பாரோ?
லாசரு அடக்கம்பண்ணப்பட்டான். மரியாளும், மார்த்தாளும் அதிகமாக அழுதார்கள். அநேகர் வந்து அழுது புலம்பினார்கள். அவர்கள் இரண்டு சகோதரிகளை ஆறுதல்படுத்த விரும்பினார்கள்.
நான் இப்போது உங்களுக்கு ஒரு சிறிய வேலையை கொடுக்க விரும்புகிறேன். இந்தக் கேள்விக்கான பதிலைக் குறித்து யோசி. உனது விண்ணப்பத்திற்கு இயேசு உடனடியாக பதிலளிக்காமலும், உனக்கு உதவி செய்யாமலும் இருந்தால், நீ என்ன செய்வாய்?
உனக்கு ஒரு மோசமான காரியம் நடைபெறும்படி அவர் அனுமதித்தால், நீ என்ன செய்வாய்?
இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவர் உன்னை நேசிக்கிறார் என்று நீ நம்புவாயா?
தயவுசெய்து இதைக் குறித்து யோசி!
சிந்தித்துப் பார் – அடுத்த நாடகத்தில் இந்தக் கதை தொடரும்.
மக்கள்: உரையாளர், மார்த்தாள், செய்தியாளர், இயேசு, சீஷன்.
© Copyright: CEF Germany