Home -- Tamil? -- Perform a PLAY -- 082 (The special submarine 2)
82. சிறப்பு நீர்மூழ்கி 2
சிறுவன்: “யோனாவிற்கு என்ன நடந்தது என்பதைக் காண நான் ஆவலாய் இருக்கிறேன்”.
சிறுமி: “அவன் இறைவனுடைய வார்த்தையை கவனித்துக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவன் இறைவனை விட்டு ஓட முயற்சித்திருக்கக் கூடாது”.
சிறுவன்: “அவன் தன்னுடைய ஆடைகளை தண்ணீரில் நனைய விட்டிருக்க வேண்டிய அவசியமும் இருந்திருக்காது”.
இறைவன் காப்பாற்ற விரும்புகிறார். எனவே தான் யோனா நினிவேக்குப் போனான்.
அவன் வாழ்விற்கான ஒரு பயணமாக அது காணப்பட்டது. இறைவன் காப்பாற்ற விரும்பினார். எனவே அவனுக்காக ஒரு சிறப்பு நீர் மூழ்கியை அவர் அனுப்பினார். ஒரு மிகப்பெரிய மீன் அவனருகில் வந்து, அப்படியே அவனை விழுங்கியது. யோனா மீனின் வயிற்றில் மூன்று பகல்கள் மற்றும் மூன்று இரவுகள் இருந்தான். இறைவனை விட்டு அவன் ஓடிப்போனது கடலின் ஆழத்தில் ஒரு முடிவுக்கு வந்தது. அவன் மிகுந்த உபத்திரவத்தில் இறைவனை நோக்கி கூப்பிட்டான்.
யோனா: “ஆண்டவரே! நீர் என்னை கடலின் ஆழத்தில் தள்ளினீர். அலைகள் என்னை சூழ்ந்துகொண்டது. மரணம் என்னை ஆட்கொண்டது. ஆனாலும் நீர் என்னைக் காப்பாற்றினீர்! உமக்கு நன்றி, நீர் எனக்குச் சொல்வதெல்லாவற்றையும் செய்வேன்”.
இறைவன் ஒவ்வொருவரின் விண்ணப்பத்தையும் கேட்கிறார். நீ சோகத்துடனும், கவலையுடனும் இருக்கும் போது அவர் கேட்கிறார். அவர் யோனாவின் விண்ணப்பத்தைக் கேட்டார். மீன் கரையில் அவனை கக்கிப் போடும்படி கட்டளையிட்டார்.
இறைவன் காப்பாற்ற விரும்புகிறார். எனவே யோனாவிடம் இரண்டாம் முறை கூறினார்.
இறைவன் கூறினார்: “யோனாவே! பெரிய நகரமாகிய நினிவேக்கு போய், நான் உனக்குச் சொன்னதை பிரசங்கி”.
யோனா சென்றான். (நடக்கும் சத்தம் மற்றும் நகரத்து இரைச்சலின் சத்தம்)
யோனா: “கவனியுங்கள்! இறைவன் என்னை உங்களிடத்தில் அனுப்பினார். இன்னும் 40 நாட்களில் உங்கள் அழகான நகரம் அழிந்துபோகும். இது உங்கள் பாவத்திற்கான தண்டனை ஆகும். நீங்கள் பொய்யரும், விபசாரக்காரரும், ஏமாற்றுக்காரருமாய் இருக்கிறீர்கள். கொலைக்காரர்களே! திருடர்களே! இறைவன் அனைத்தையும் காண்கிறார். அந்த மக்கள் கவனித்தார்கள். யோனாவின் பிரசங்கம் அவர்களுடைய இருதயத்தில் நேரடியாகப் பேசியது.
பெண்: “அவர் சொல்வது சரி. நாம் இறைவனுக்கு எதிராக பாவம் செய்திருக்கிறோம். நாம் இதைக் குறித்து என்ன செய்யலாம்?”
ராஜாவின் செய்தியாளர்: “ராஜாவிடமிருந்து ஓர் கட்டளை! ஒருவரும் புசிக்கவும், குடிக்கவும் கூடாது. உங்கள் பாவங்களில் இருந்து மனந்திரும்பி, இறைவனை நோக்கி கூப்பிடுங்கள். ஒருவேளை அவர் நமக்கு இரங்குவார். அநீதி செய்வதை நிறுத்திவிட்டு, ஒரு புதிய வாழ்வை துவங்குங்கள்”.
கற்பனை செய்துபார்! 120,000 நகரத்து மக்கள் இறைவனை நோக்கி வேண்டினார்கள். சிறியவர்களும், பெரியவர்களும் இறைவனற்ற வாழ்க்கை வாழ்வதிலிருந்து மனந்திரும்பினார்கள்.
நாட்கள் கடந்தன. 38,39,40. இறைவன் அவர்களை தண்டிக்கவில்லை. இது எவ்வளவு அற்புதமான காரியம்? இறைவனை நோக்கி கூப்பிட்ட அனைவரும் காப்பாற்றப்பட்டார்கள்.
நமது கிராமத்திலும் நகரத்திலும் இப்படி நடக்க வேண்டும்! இறைவன் காப்பாற்ற விரும்புகிறார். உன்னையும், இன்னும் அநேகரையும் அவர் காப்பாற்றுகிறார்.
மக்கள்: உரையாளர், இரண்டு பிள்ளைகள், யோனா, இறைவன், பெண், ராஜாவின் செய்தியாளர்.
© Copyright: CEF Germany