Home -- Tamil? -- Perform a PLAY -- 081 (Man over board 1)
81. யோனா ஓடிப்போனான் 1
எங்களுடன் வாருங்கள். நாம் நகரத்தை சுற்றிப் பார்ப்போம்!
சிறுவன்: “அந்த கட்டிடம் அருமையாக உள்ளது. நான் அந்த கோபுரங்களை பார்க்கப் போகிறேன்”.
சிறுமி: “நான் நூலகத்திற்கு செல்ல விரும்புகிறேன். அங்கே சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்”.
சிறுவன்: “ராஜாவின் அரண்மனை. ஆஹா! எவ்வளவு அருமை!”
சிறுமி: “நான் மிருகக் காட்சி சாலைக்கு செல்கிறேன்”.
சிறுவன்: “நீ உனது உறவினர்களை அங்கு பார்க்க போகிறாயா?” (சிரிப்பின் சத்தம்)
அநேக ஆண்டுகள் முன்பு இறைவன் ஒரு நகரத்தை பார்த்தார். அவர் அங்கிருக்கும் அழகான காரியங்களைக் கண்டு மயங்கவில்லை. அவர் அதற்கும் அப்பால் உள்ள காரியத்தைக் கண்டார். வெறுப்பு, சண்டை, துரோகம் மற்றும் கொலை. இறைவனையும், அவருடைய கட்டளைகளையும் புறக்கணித்தவர்களாக அந்த நகரத்தின் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்கள் சிருஷ்டிகரை மறந்துவிட்டார்கள். இது மிகவும் துக்ககரமான காரியம். இறைவன் உனது வாழ்வை உற்றுப்பார்த்தால், அவர் எதைக் காண்பார்?
அவர் பரிசுத்தமுள்ளவர். எனவே அவர் பாவத்தை தண்டிக்க வேண்டும். அதே சமயத்தில் இறைவன் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் மக்களை காப்பாற்றுகிறார். எனவே அவர்களை எச்சரிக்க விரும்புகிறார்.
இறைவன் பேசுகிறார்: “யோனாவே! நீ உலகப்புகழ் பெற்ற நினிவே நகரத்திற்கு செல். அவர்களது பாவத்தினிமித்தம் நான் அவர்களை தண்டிப்பேன் என்று பிரசங்கி. இந்த மக்கள் என்னை மறந்துவிட்டார்கள்”.
யோனா சென்றான். ஆனால் நினிவேக்கு செல்லவில்லை.
(ஓடும் சத்தம், மூச்சிறைக்கும் சத்தம்)
யோனா: “நான் நினிவேக்கு செல்ல மாட்டேன்! அவர்கள் எங்கள் நாட்டின் எதிரிகள். நான் முட்டாள் அல்ல. அவர்கள் சாக வேண்டும். அங்கே துறைமுகத்தில் ஒரு கப்பல் இருக்கிறது. நான் பயணச்சீட்டு வாங்கி தொலைதூரம் செல்வேன்”.
இறைவனை விட்டு ஓடிப்போவது ஆபத்தானது. யோனா சரக்கு பொருட்கள் வைக்கும் இடத்திற்கு சென்று, அங்கே அசதியில் தூங்கிவிட்டான். யோனாவிற்கு காது கேட்கவில்லை. ஒரு நபர் இறைவனை விட்டு ஓட முடியுமா? உலகத்தின் எந்த மூலையில் நாம் இருந்தாலும் அவர் நம்மைக் காண்பார். இறைவன் யோனாவை பார்த்துக் கொண்டிருந்தார்.
கடும்புயல் வீசியது. கப்பல் மூழ்க ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் தங்கள் தெய்வங்களை நோக்கி கூப்பிட்டார்கள். அவர்களை காப்பாற்றக் கூடிய உயிருள்ள இறைவனைக் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கப்பலின் எடையை குறைப்பதற்காக, கப்பலின் தளவாடங்களை கடலில் எறிந்தார்கள். கப்பலின் மாலுமி வந்து யோனாவை எழுப்பினான்.
மாலுமி: “யோவ்! எழுந்திரு, உனது இறைவனை நோக்கி கூப்பிடு. ஒருவேளை அவர் நம்மை காப்பாற்ற கூடும்”.
யோனா உடனடியாக எழுந்தான். எல்லாம் அமைதி நிலைக்கு திரும்பியது.
கடலோடி: “நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனது தொழில் என்ன?”
யோனா: “நான் யோனா. வானத்தையும், பூமியையும் உண்டாக்கின இறைவனை நான் ஆராதிக்கிறேன். நான் இறைவனுக்கு கீழ்ப்படியவில்லை. எனவே தான் இந்த கடும் புயல் வீசுகிறது”.
கடலோடி: “நாம் இப்போது என்ன செய்யலாம்?”
யோனா: “என்னைக் கடலில் தூக்கிப் போடுங்கள். அப்போது அமைதி உண்டாகும். இறைவன் உங்களை பாதுகாப்பார்”.
முதலில் அவர்கள் இதைச் செய்ய விரும்பவில்லை. பின்பு மாலுமிகள் யோனாவை கடலில் தூக்கிப் போட்டார்கள்.
(தண்ணீரில் விழும் சத்தம்)
இது தான் யோனாவின் முடிவா? இல்லை, சாகசம் இப்போது தான் துவங்குகிறது. அடுத்த நாடகத்தில் இதன் தொடர்ச்சி உள்ளது.
மக்கள்: உரையாளர், சிறுவன், சிறுமி, இறைவன், யோனா, மாலுமி, கடலோடி.
© Copyright: CEF Germany