Home -- Tamil? -- Perform a PLAY -- 078 (Lou Ling makes a decision)
78. லூலிங் ஒரு தீர்மானம் எடுத்தல்
லூலிங்கிற்கு மிகப்பெரிய பிரச்சினை இருந்தது. அவள் அலமாரியில் இருந்த சிலையைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவள் சீனாவில் தனது பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தாள். இந்த மர சிலை தான் இறைவன் என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.
இது உண்மை அல்ல. உண்மையான இறைவன் பரலோகில் இருக்கிறார். அலமாரியில் இருக்கும் இந்த உருவம் ஒரு உயிரற்ற பொருள். அதற்கு கைகள் உண்டு. ஆனால் யாருக்கும் உதவ முடியாது. அதற்கு வாய் உண்டு. ஆனால் பேச முடியாது. காதுகள் உண்டு. ஆனால் கேட்க முடியாது.
மக்கள் இந்த சிலையை ஆராதிக்கிறார்கள். உண்மையான இறைவன் இதை விரும்பவில்லை என்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். நானே உங்கள் இறைவனாகிய கர்த்தர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம். அவைகளை பணிந்துகொள்ள வேண்டாம்.
லூலிங் இதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
லூலிங்: “உண்மையான இறைவன் நமது அலமாரியில் அமர்ந்திருப்பாரா?”
அவள் படித்த கிறிஸ்தவப் பள்ளியில் உண்மையான இறைவனைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். இறைவன் தமது குமாரனை இந்த உலகிற்கு அனுப்பினார். அவர் எல்லோருடைய பாவங்களுக்காகவும் மரித்தார் என்பதை கற்றுக் கொண்டிருந்தாள். அவர் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து, இப்போது பரலோகில் வீற்றிருக்கிறார் என்பதைக் கேட்டவுடன் அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள்.
எது சரி? யார் உண்மையான இறைவன்? இயேசுவா? அல்லது அவளின் வீட்டில் இருக்கும் சிலையா?
லூலிங்: “இப்போது நான் ஒன்று செய்யப் போகிறேன். அந்த சிலையை வீட்டு முற்றத்தில் புதைப்பேன். அதற்கு உயிர் வந்தால், அப்போது அது உண்மையான இறைவன் என்று அறிந்துகொள்வேன்”.
லூலிங் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு தோட்டப் பகுதிக்கு சென்றாள். அந்த சிலையை புதைத்து வைத்தாள். அவள் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றாள். முதல் நாள் கடந்தது. இரண்டாம் நாள் சென்று பார்த்தாள். அது அழுக்கு படிந்து காணப்பட்டது. மூன்றாம் நாள் பார்த்தாள். அந்த சிலை அப்படியே இருந்தது.
லூலிங்: “எனக்காக மரித்து, உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவை இப்போது நான் விசுவாசிக்கிறேன்”.
லூலிங் சரியான முடிவு எடுத்தாள். உயிருள்ள இறைவன் தன்னுடன் இருப்பதை அவள் அனுபவித்தாள்.
இறைவன் தமது வார்த்தையில் கூறுகிறார்.
“நானே உங்கள் இறைவனாகிய கர்த்தர். என்னையன்றி வேறே தெய்வங்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம். என்னைத் தவிர வேறெதுவும் உங்களுக்கு முக்கியமானதாக இருக்க வேண்டாம்”.
மக்கள்: உரையாளர், லூலிங்.
© Copyright: CEF Germany