Home -- Tamil? -- Perform a PLAY -- 079 (Invaluable)
79. மதிப்பிட முடியாதது
(தண்ணீர் தெளிக்கும் சத்தம்)
முத்துக் குளிக்கும் இந்தியர் ஒருவர் கடலில் குதித்தார். அவருடைய சிறந்த நண்பன் டேவிட் மோர்ஸ் படகில் காத்துக்கொண்டிருந்தார். அவர் சிறிய கத்தியால் சிப்பியை திறந்தார்.
டேவிட் மோர்ஸ்: “ராம்பாவ், நீ மிகச்சிறந்த முத்துக் குளிப்பவன். இந்த முத்து விலையேறப்பெற்ற ஒன்று”.
ராம்பாவ்: “ஆமாம், இது நல்ல முத்து தான்”.
டேவிட் மோர்ஸ்: “இதை விட நல்ல முத்து கிடைக்குமா?”
ராம்பாவ்: “எனது வீட்டில் ஒன்று உள்ளது. அது விலையேறப் பெற்றது”.
டேவிட் மோர்ஸ: “இந்த உண்மையான முத்தை நான் பார்க்கிறேன். உனது கண்கள் அதை ஆராய்ந்து பார்க்கிறது”.
ராம்பாவ்: “நீ எப்போதும் உனது இறைவனைப் பற்றி பேசுகிறாய். மக்கள் தாங்கள் நன்றாக இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் உள்ளான நிலையில் உண்மையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை இறைவன் பார்க்கிறார்”.
டேவிட் மோர்ஸ்: “ஆமாம், அது சரி தான். அவர் ஒவ்வொருவருக்கும் தூய இருதயத்தைத் தர விரும்புகிறார். அது இறைவனின் பரிசு. நீ அதைப் புரிந்துகொள்கிறாயா? இந்த நேரத்தில் இந்த இரண்டு நண்பர்களும் கரையை அடைந்து விட்டார்கள்”.
ராம்பாவ்: “டேவிட் பார்ப்பதற்கு இது எளிதாகத் தோன்றுகிறது. நான் இந்தப் பரிசை பெற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன். அதை அடைவதற்கு நான் ஏதாவது ஒன்றை செய்ய விரும்புகிறேன். அங்கே செல்கின்ற புனிதப்பயணியை நீ காண்கிறாயா? அவன் வெறுங்காலால் கூர்மையான கற்களின் மீது நடந்து கல்கத்தா வரை செல்கிறான். நான் எனது முழங்காலில் நடந்து டெல்லிக்கு போகப் போகிறேன்”.
டேவிட் மோர்ஸ்: “ராம்பாவ், அது 600 மைல்களுக்கும் அதிகமான தூரத்தில் உள்ளது. நீ அந்த இலக்கை அடையும் முன், உனது இரத்தம் விஷமாக மாறி இறந்துவிடுவாய்”.
ஆனால் டேவிட் மோர்ஸ் சொன்ன எதுவும் நன்மையை கொண்டு வரவில்லை. சில நாட்கள் கடந்தன.
(கதவைத் தட்டும் சத்தம்)
டேவிட் மோர்ஸ்: “ராம்பாவ், நீயா? உள்ளே வா”.
ராம்பாவ்: “டேவிட், நாளை எனது புனிதப் பயணத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். நான் செல்லும் முன்பு எனது மகனைக் குறித்து சொல்ல விரும்புகிறேன்.”
டேவிட் மோர்ஸ: “உனக்கு மகன் இருக்கிறானா?”
ராம்பாவ்: “இந்தியக் கடற்கரைப் பகுதியில் அவன் தலைசிறந்த முத்துக் குளிப்பவன். அவன் மிக அழகான முத்தைக் கண்டுபிடிக்க விரும்பினான். அவன் அதைக் கண்டுபிடித்தான். அவன் மிகவும் ஆழத்தில் தண்ணீரில் இருந்ததால், உடனடியாக இறந்துவிட்டான். (அழுகையின் சத்தம்) நீ எனது சிறந்த நண்பனாக இருக்கிறபடியால், அவன் கண்டுபிடித்த முத்தை நான் உனக்கு கொடுக்க விரும்புகிறேன்.”
டேவிட் மோர்ஸ்: “ராம்பாவ் இது அற்புதமானது. அருமையானது. நான் இதை வாங்கிக் கொள்ளும்படி உனக்கு 10,000 ரூபாய் தருகிறேன்.”
ராம்பாவ்: “நீ அதை வாங்க இயலாது!”
டேவிட் மோர்ஸ்: “அதை விட அதிக மதிப்புள்ளது என்றால், நான் அதற்காக வேலை செய்கிறேன்”.
ராம்பாவ்: “டேவிட், இந்த முத்து விலைமதிப்பற்றது. எனது மகன் இதற்காக தன் உயிரைக் கொடுத்திருக்கிறான்.”
டேவிட் மோர்ஸ்: “ராம்பாவ், இறைவனைப் பற்றி பேசும் போது, இதே காரியத்தை தான் நானும் உனக்கு சொல்லுகிறேன். அவருடைய இரட்சிப்பு என்ற பரிசு வாங்க முடியாதது. நமது நல்ல செயல்கள் அல்லது புனிதப் பயணத்தினால் அதை வாங்க முடியாது. அது இறைவனின் பரிசு. அதற்காக இறைவனின் மகன் இயேசு தனது வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இன்று நீ அந்த பரிசை பெற்றுக்கொள்ள விரும்புகிறாயா?”
ராம்பாவ்: “இப்போது எனக்குப் புரிகிறது. இன்று அந்த இரட்சிப்பு என்ற பரிசை நான் பெற விரும்புகிறேன்”.
இரட்சிப்பு இறைவனின் ஈவு. அது உனக்கும் உரியது.
மக்கள்: உரையாளர், டேவிட் மோர்ஸ், ராம்பாவ்.
© Copyright: CEF Germany