STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 012 (Joy that never leaves us)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

12. நம்மை விட்டு நீங்காத சந்தோஷம்


இரவு வானம் முழுவதும் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தன. பட்டணத்தில் அது இருள் நேரமாக இருந்தது. மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கள் ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இது ஒரு கடினமான பணி. அவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் அவமதிக்கப்பட்டார்கள். திருடர்கள் மற்றும் வழிப்பறிக்காரர்களை போல எண்ணப்பட்டார்கள்.

அவர்களுக்கு உதவிசெய்பவர் அல்லது இரட்சகர் ஒருவருமில்லையா? சமூகத்தில் மிகவும் கீழான மக்கள் என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்களா?

அவர்கள் களைப்புடன் மரத்தடியில் படுத்திருந்தார்கள். திடீரென்று அவர்கள் அனைவரும் எழுந்தார்கள். காரணம் அந்த நடு இரவில் பெரிய ஒளி பிரகாசித்தது. அவர்கள் நன்றாகக் காணும் வண்ணம், தங்கள் கண்களை கசக்கிப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

இறைவனுடைய செய்தியாளராக ஒரு தூதன் பரலோகில் இருந்து வந்தான். காணமுடியாத இறைவனின் உலகில் இருந்து வந்த செய்தியாளரைக் கண்டு திகைத்தார்கள்.

தூதன்: “பயப்படாதிருங்கள். இதோ! எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்றைக்கு இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். அவர் மேசியா, அவர் ஆண்டவர். பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்”.

மேய்ப்பர்கள் கவனமாக இதைக் கேட்டார்கள். ஒரு இரட்சகர்! அவர்களது இருதயங்கள் சந்தோஷத்தினால் நிறைந்தன. இறைவன் அவர்களை மறக்கவில்லை. பின்பு வானில் திரளான தூதர்கள் தோன்றி இரட்சகர் பிறந்த அற்புதத்தை துதித்துப் பாடினார்கள். மேய்ப்பர்கள் சென்று மரியாளையும், யோசேப்பையும், குழந்தை இயேசுவையும் கண்டார்கள். அவர்கள் இரட்சகராகிய இயேசுவைக் கண்ட போது மகிழ்ச்சியடைந்தார்கள். இது உண்மையானது: இரட்சகர் உங்களுக்காகவும் பிறந்தார். உனது வாழ்வில் ஆண்டவராகிய இயேசு வரும்படி கேள். உன்னை விட்டு நீங்காத சந்தோஷத்தை நீ பெறுவாய்.


மக்கள்: உரையாளர், தூதன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 02:54 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)