STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 001 (Jesus loves children)

Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

1. இயேசு சிறுவர்களை நேசிக்கிறார்


ஸ்வீடன் நாட்டு இளவரசியை சந்தித்த விருந்தினர்கள் இப்படிக் கேட்டார்கள். “உங்களது கிரீட அணிகலன்களை எங்களுக்கு தயவு கூர்ந்து காண்பிக்க முடியுமா?” “நிச்சயம்” என்று அவள் பதிலளித்தாள். அவள் கதவருகே சென்று இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து, சிரித்துக் கொண்டே கூறினாள் “இவர்கள் தான் என் அணிகலன்கள்”. விருந்தினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். ஏனெனில் அவர்கள் டைமண்டுகளையும், விலையேறப்பெற்ற இரத்தினக் கற்களையும் பார்க்க விரும்பினார்கள். விலையேறப்பெற்ற கற்களை விட குழந்தைகள் தான் இளவரசிக்கு விலைமதிக்க முடியாதவர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

இது உண்மை தான். இருப்பினும் எல்லாரும் குழந்தைகளை நேசிக்கும் இருதயத்தை பெற்றிருப்பதில்லை. ஆனால் சிறுபிள்ளைகளை நேசிக்கும் ஒருவரை நான் அறிவேன். அவர் ஆண்டவராகிய இயேசு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயேசு ஆசீர்வதிக்கும்படியும், அவர்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ளவும் அழைத்து வந்த சம்பவத்தைக் குறித்து வேதாகமம் நமக்கு கூறுகிறது. ஆனால் அவர்கள் இயேசுவிடம் வரும் முன்பு, கோபமான வார்த்தைகளைக் கேட்டார்கள்.

சீஷர்கள்: “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்த இடத்தை விட்டு அகன்றுபோங்கள்”.

பயந்து போன பிள்ளைகள் தங்கள் பாதைகளில் நின்றார்கள். அவர்கள் ஒரு வார்த்தை கூட திரும்பப் பேச துணியவில்லை. ஏனெனில் இயேசுவின் சீஷர்கள் அவ்வளவு கடினமாக அவர்களை திட்டியிருந்தார்கள்.

இந்தக் கதை இத்துடன் முடியவில்லை என்பதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இயேசு சிறுபிள்ளைகளை நேசிக்கிறார்.

இயேசு: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வர இடங்கொடுங்கள். அவர்களை அனுப்பாதிருங்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது”.

இயேசு சிறுபிள்ளைகளை நேசிக்கிறார். அவரை நம்பும்படியாகவும், அறிந்து கொள்ளும்படியாகவும் அவர்களை அழைக்கிறார். அவர்கள் வந்தார்கள்.

… உங்கள் வயது சிறுவர், சிறுமியர்

… நல்லவர், கெட்டவர்

… பெரிய பிள்ளை, சிறு பிள்ளை

… தைரியமானவர், வெட்கப்படுபவர்

… அழகானவர், அழகற்றவர்

… வெவ்வேறு நிறங்களில் இருந்த சிறுவர், சிறுமியர்

இயேசு அவர்களுடன் நட்புடன் பழகிய, ஆசீர்வதித்த அந்த நாளை அவர்கள் ஒரு போதும் மறக்கவில்லை. இயேசு சிறு பிள்ளைகளை நேசிக்கிறார். இது சிறு பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் அநேகருக்கு இயேசுவைக் குறித்து கூறினார்கள்.

இயேசு உன்னையும் நேசிக்கிறார் என்பதை நினைத்துக் கொள். வேதாகமத்தின் மூலம் அவர் உன்னிடம் கூறுகிறார். “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”.


மக்கள்: உரையாளர், இயேசு, சீஷர்கள்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 02:12 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)