STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 129 (Shabola from South Africa) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
129. தென் ஆப்பிரிக்காவில் ஷபோலா(சுத்தியல் அடிக்கும் சத்தம்) அப்பா: “ஷபோலா, நீ மிகவும் நன்றாகச் செய்துள்ளாய்”. ஷபோலா: “நீங்கள் இதைச் செய்தால் உங்களுக்கு நிச்சயம் நல்ல உடல் வலிமை ஏற்படும். ஆ! என் கால் …” அப்பா: “நீ இனிமேல் சுத்தியலை பிடிக்கக் கூட முடியாது. கொஞ்சம் ஓய்வு எடு. அதன் பிறகு நீ வேலை செய்யலாம்”. ஷபோலா நிழல் அருகே அமர்ந்தான். கொஞ்ச தூரம் தள்ளி ஒரு குரங்கு கத்தும் சத்தத்தைக் கேட்டான். அவனது அப்பா தென் ஆப்பிரிக்காவில் குடிசைகளை கட்டும் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். கிராமத்தில் இருந்த மிஷனரி பள்ளிகளைப் போல, அவைகள் அருமையாய் இருந்தனவா? அப்பா: “ஷபோலா, மறுபடியும் வேலையைச் செய்ய ஆரம்பி”. அப்பாவிற்கு உதவி செய்வது ஜாலியான காரியம் தான். ஆனால் அதைவிட பள்ளிக்குச் செல்வதே அவனுக்கு அதிக விருப்பம். அடுத்த நாள் காலையில் சோள உணவை உண்ட பின்பு, அவன் பள்ளிக்குச் சென்றான். அவனுக்கு உம்பன்டிஸை மிகவும் பிடிக்கும். ஜிம்பாப்வே மொழியில் ஆசிரியர் என்பதற்கு உம்பன்டிஸ் என்று பெயர். எல்லா மாணவர்களுக்கும் அவனைப் பிடிக்கும். ஷபோலாவிற்கு மிகவும் பிடித்த வகுப்பு வேதபாட வகுப்பு தான். அங்கே கருமைநிற முடியுடன் இருந்த ஒரு இளம் வாலிபன் நன்றாக கவனித்துக் கொண்டிருந்தான். ஆசிரியர்: “ஒரு சிறிய ஆடு வழி விலகி ஓடி, தொலைந்துபோனது. மற்ற ஆடுகளையெல்லாம் மேய்ப்பன் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும் வரை தேடினான். அவன் அதைக் கண்டுபிடித்த பின்பு, முள்களில் இருந்து அதை தூக்கி எடுத்து, தன் தோள் மீது சுமந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினான். ஆண்டவராகிய இயேசு நல்ல மேய்யப்பன். அவர் காணாமல் போனவர்களைத் தேடி பரலோகத்தில் இருந்து இந்தப் பூமிக்கு வந்தார்”. ஷபோலா: “உம்பன்டிஸ், நானும் ஒரு தொலைந்த ஆடு. இயேசு என்னையும் தேடிவருவாரா?” ஆசிரியர்: “ஆமாம். அவர் உன்னைப் பார்க்கிறார். உன்னை நேசிக்கிறார். நீ அவருடன் இருக்க விரும்புவதை அவரிடம் சொல்”. ஒரு நாள் வகுப்பறையில் ஷபோலாவைக் காணவில்லை. அன்று காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்க அவன் விரும்பினான். ஆனால் அவனுக்கு காய்ச்சல் இருந்தது. மிகவும் சோர்வுடன் இருந்தான். அம்மா: “ஷபோலா, உனக்கு அதிகமான காய்ச்சல் இருக்கிறது. நான் போய் மந்திரவாதி மருத்துவரை அழைத்து வருகிறேன்”. ஷபோலா (மெல்லிய குரலில்): “அவர் எனக்கு உதவி செய்ய முடியாது”. ஷபோலா அதிக நோய் வாய்ப்பட்டான். அவனால் பேசக் கூட முடியவில்லை. ஞாயிறன்று அவனுடைய ஆசிரியர் அவனை சந்தித்தார். ஆசிரியர்: “ஷபோலா, நீ மிகவும் சுகவீனமாய் இருக்கிறாய். நீ மரணத்தை சந்திக்க ஆயத்தமாக இருக்கிறாயா?” ஷபோலா: “ஆண்டவராகிய இயேசு என்னுடைய நல்ல மேய்ப்பர். அவர் என்னை விரைவில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வார்”. ஷபோலா தனது கண்களை மூடினான் அதன் பின்பு அவன் கண் திறக்கவே இல்லை. அவனது அடக்க ஆராதனையில் நல்ல மேய்ப்பனைக் குறித்த கதையை உம்பண்டிஸ் சொன்னார். திடீரென்று பக்கத்தில் இருந்த சிறிய குடிலில் அவனுடைய அப்பா முழங்காற்படியிட்டு விண்ணப்பம் செய்தார். அப்பா: “ஆண்டவராகிய இயேசுவே, இப்போது ஷபோலா உம்முடன் இருக்கிறான். அவன் அங்கு அருமையாக இருக்கிறான். நானும் உம்மைச் சார்ந்திருக்க விரும்புகிறேன். எனது பாவங்களை மன்னியும். எனது நல்ல மேய்ப்பர் நீரே. ஆமென்”. “உம்பன்டிஸ் துக்கத்துடன் இருக்கவில்லை. ஏனெனில் பரலோகில் ஒரு நாள் ஷபோலாவைக் காண்போம் என்பதை அறிந்திருந்தார்”. மக்கள்: உரையாளர், அப்பா, அம்மா, ஷபோலா, ஆசிரியர். © Copyright: CEF Germany |