STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 128 (No more thirst) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
128. இனி தாகம் இல்லைஅந்த ஊர் மக்களில் அநேகர் அவளை புறக்கணித்தார்கள். சமாரியப் பெண்: “எல்லோரும் என் மீது விரல் நீட்டி குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் எல்லாவற்றிலும் ஒழுங்காய் இருப்பதைப் போல நினைக்கிறார்கள். இனிமேல் நான் யாரையும் சந்திக்க மாட்டேன். யாரும் போகாத நேரத்தில் நான் கிணற்றிற்குச் சென்று தண்ணீர் எடுப்பேன்”. (கல் பாதையில் நடந்து செல்லும் சத்தம்) மதியம் 12.00 மணியளவில் அந்தப் பெண் தனது குடத்தை எடுத்துச் சென்றாள். வெயில் கடுமையாக இருந்தது. அவள் வழியில் யாரையும் சந்திக்கவில்லை. பொதுவாக சீகார் ஊர் மக்கள் காலையில் அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் எடுக்கச் செல்வார்கள். சமாரியப் பெண்: “யார் அது? கிணற்றருகே உட்கார்ந்திருப்பது யார்?” இயேசு: “எனக்கு குடிக்க கொஞ்சம் தண்ணீர் தா”. சமாரியப் பெண்: “நீர் யூதன். நான் சமாரியப் பெண். நீர் ஏன் என்னுடன் பேசுகிறீர்?” யூதர்கள் எப்போதும் சமாரியர்களைப் புறக்கணிக்கிறார்கள் என்பது இயேசுவுக்குத் தெரியாதா? ஏனெனில் சமாரியர்கள் வேற்று இன மக்களை திருமணம் செய்கிறார்கள். விக்கிரகங்களை வழிபடுகிறார்கள். இயேசுவுக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக அவர் எண்ணவில்லை. இயேசு வித்தியாசமானவர். இயேசு: “உன்னிடத்தில் பேசுகிறவர் யார் என்று உனக்குத் தெரிந்திருந்தால் நீயே அவரிடம் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத் தண்ணீரைக் கொடுத்திருப்பேன்”. சமாரியப் பெண்: “உமக்கு எங்கிருந்து தண்ணீர் வரும்? கிணறும் ஆழமாய் இருக்கிறதே”. இயேசு: “இந்தத் தண்ணீரை குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது”. நமது இருதயத்தின் ஆசைகள் தாகத்திற்கு ஒப்பாக உள்ளது. ஒரு ஆசையை நிறைவேற்றும் போது, வேறு புதிய ஆசைகள் தோன்றுகின்றன. இதற்கு முடிவே இல்லை. இருதயம் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. தாகம் ஒருபோதும் தணிவதில்லை. ஒரு சிறந்த அனுபவம், விளையாட்டு வெற்றி கோப்பைகள், நல்ல நண்பன் அல்லது எந்த ஒரு காரியமும் இந்த தாகத்தை தணிப்பதில்லை. வாழ்வில் உள்ள இந்த தாகம் கிணற்றருகே இருந்த அவரால் மட்டுமே தணியும். அந்தப் பெண் இதை உணர்ந்துகொண்டாள். சமாரியப் பெண்: “எனக்கு அந்தத் தண்ணீரைத் தாரும். நான் மறுபடியும் இந்த கிணற்றிற்கு வரவேண்டிய தேவை இல்லை”. இயேசு: “உனது புருஷனை இங்கு அழைத்து வா”. சமாரியப் பெண்: “எனக்குத் திருமணம் ஆகவில்லை”. இயேசு: “எனக்குத் தெரியும். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள். இப்போது உன்னுடன் இருப்பவன் உனக்குப் புருஷன் அல்ல”. இயேசு அவளைக் குறித்து அனைத்தையும் அறிந்திருந்தார். இருப்பினும் அவர் அவளைப் புறக்கணிக்கவில்லை. சமாரியப் பெண்: “இறைவன் உம்மை அனுப்பியுள்ளார். இரட்சகர் வருவார் என்பதை நான் அறிந்திருக்கிறேன்”. இயேசு: “நானே அவர்”. இயேசு அவளுடைய பாவங்களை மன்னித்தார். அவளுக்கு புதிய, மனநிறைவுள்ள வாழ்வு தந்தார். சந்தோஷத்தின் மிகுதியினால் அவள் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள் ஓடிச் சென்றாள். இயேசுவிடம் வரும்படி ஒவ்வொருவரையும் அவள் அழைத்தாள். நானும் உங்களை அழைக்கிறேன். இயேசுவிடம் வாருங்கள். பின்பு சீகாரின் மக்கள் சொன்னதைப் போல நீங்களும் சொல்வீர்கள்: சிறுமி: “நான் இப்போது இயேசுவை விசுவாசிக்கிறேன். நீ சொன்னதால் அல்ல, நானே அவரிடம் வந்து அவரை அறிந்திருக்கிறேன். உண்மையாகவே அவர் உலக இரட்சகர்”. மக்கள்: உரையாளர், சமாரியப் பெண், இயேசு, சிறுமி. © Copyright: CEF Germany |