Home -- Tamil? -- Perform a PLAY -- 145 (If I had 1000 lives 6)
145. எனக்கு 1000 வாழ்க்கை கிடைத்தால் 6
கப்பல் நின்றது. வியாதிப்பட்ட ஹட்சன் டெய்லர் தரையிறங்கினார்.
இங்கிலாந்தில் அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அவர் மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள்.
டாக்டர்: “டெய்லர், நீ சீனாவிற்கு இனிமேல் திரும்பிச் செல்ல இயலாது”.
ஹட்சன்: “இறைவன் என்னை சுகப்படுத்த விரும்பினால், அவர் சுகப்படுத்துவார்”.
சுவரின் மீது மிகப்பெரிய வரைபடம் தொங்கியது. ஹட்சன் அதைப் பார்த்து அழுதார். இயேசுவைக் குறித்து கேள்விப்படாத மில்லியன் கணக்கான சீனர்களைக் குறித்து அவர் நினைத்துப்பார்த்தார்.
அவர் அடிக்கடி இந்தக் கதையைச் சொல்லுவார்:
ஹட்சன்: “நான் சுங்கியான் பூ” என்ற இடத்திற்கு கப்பலில் பிரயாணம் செய்தேன். பேதுரு அங்கு இருந்தார். நாங்கள் இயேசுவைக் குறித்து பேசினோம். பிறகு நான் எனது அறைக்கு திரும்பினேன். திடீரென ஒருவர் கத்துவதையும், தண்ணீர் தெறிக்கும் சத்தத்தையும் கேட்டேன். பேதுரு கப்பலில் இருந்து குதித்துவிட்டார். நானும் தண்ணீரில் குதித்தேன். நான் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “உதவி!உதவி!” நான் சில மீனவர்களை அழைத்தேன். அவர்கள் பதிலளித்தார்கள். “நேரம் இல்லை. நாங்கள் மீன்பிடிக்கிறோம். நீ எங்களுக்கு பணம் கொடுப்பாயா?” நான் கொடுப்பேன் என்று உறுதியளித்தேன். அவர்கள் வந்து உதவி செய்ய நீண்ட நேரம் ஆனது. அவர்கள் தண்ணீரில் இருந்து பேதுருவை தூக்கினார்கள். நான் பேதுருவிற்கு சிகிச்சையளிக்க முயன்றேன். ஆனால் காலம் கடந்துவிட்டது. பேதுரு இறந்துவிட்டார். மீனவர்கள் சரியாக செயல்பட்டிருந்தால் அவர் பிழைத்திருப்பார்”.
எவ்வளவு பயங்கரமான காரியம்!
மக்கள் இரட்சிக்கும்படி ஹட்சன் விரும்பினார். அவர்களுடைய பாவங்களில் இருந்து விடுதலை அடையும்படி விரும்பினார். ஆனால் இப்போது அவர் வியாதியுடன் இருக்கிறார்.
ஹட்சன்: “ஆண்டவராகிய இயேசுவே, சீனாவிற்கு ஐந்து நற்செய்தியாளர்களை அனுப்பும். அப்போது அநேக மக்கள் உம் மீது விசுவாசம் வைத்து இரட்சிக்கப்படுவார்கள்”.
அவரது ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. மில்லியன் கணக்கான சீனர்களுக்கு ஐந்து நற்செய்தியாளர்கள் போதுமா? ஹட்சன் டெய்லர் 24, 100, 1000 என்று விண்ணப்பம் செய்தார். இறைவன் அவருடைய விண்ணப்பங்களுக்கும் பதிலளித்தார்.
ஹட்சன் டெய்லரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான். உனக்கு என்ன தேவை என்பதை இயேசுவிடம் சரியாகச் சொல். அவர் அதைத் தருவார் என்று விசுவாசி. இயேசு நமக்கு மகிழ்ச்சியுடன் தருகிறார். அவர் நமது விண்ணப்பங்களைக் கேட்கிறார். ஹட்சன் டெய்லர் மீண்டும் நலம் அடைந்தார். புதிய நற்செய்தியாளர்களுடன் சீனாவிற்கு பயணம் செய்தான்.
பெண் 1: “நீங்கள் முட்டாளகளா? இங்கேயே இருங்கள்!”
பெண் 2: “இங்கு நீங்கள் அதிகம் சம்பாதிக்கலாம். சீனாவில் உங்களுக்கு பசி ஏற்படும். நீங்கள் சீக்கிரம் மறக்கப்பட்டுப் போவீர்கள்”.
ஹட்சன்: “மறக்கப்படுவதா? இறைவன் தம்முடைய பிள்ளைகளை ஒருபோதும் மறப்பதில்லை!”
இறைவன் ஒருபோதும் அவரை மறக்கவில்லை.
ஹட்சன்: “எனக்கு 1000 வாழ்க்கை கிடைத்தால், நான் 1000 முறை நற்செய்தியாளராக இருப்பேன்”.
நீயும் நற்செய்தியாளராக விரும்புகிறாயா? நான் உனக்கு இதை வாக்குப்பண்ணுகிறேன்: நீ ஒரு கோடீஸ்வரனாக முடியாது. அது கடினமான பணியாக இருக்கும். இதைவிட சிறந்த பணி எதுவுமில்லை. இயேசு சொல்வதை செய்வதும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவர் மீது நம்பிக்கை வைப்பதும் அற்புதமானது.
மக்கள்: உரையாளர், ஹட்சன் டெய்லர், டாக்டர், பெண் 1, பெண் 2.
© Copyright: CEF Germany